அப்பா ஊர் மக்களை விரட்டி விட்டு.. அம்மா ஊரில் விருந்து வைத்த தனுஷ்! கமகம கறி விருந்து.. குஷியான தேனி

Subscribe to Oneindia Tamil

தேனி: தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அருகே உள்ள சங்கரா புரத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு கருப்பசாமி கோவிலில் நடிகர் தனுஷ் கிடா வெட்டி விருந்து அளித்துள்ளார். தான் இயக்கி நடித்த இட்லி கடை திரைப்படம் அக்டோபர் ஒன்றாம் தேதி வெளியாகி வெற்றி கரமாக ஓடிவருவதை கொண்டாடும் வகையில் நேர்த்திகடன்நிறைவேற்றி சிறப்பு வழிபாடு செய்துள்ளார். விருந்தில், குடும்பத்துடன் வருகை தந்து கலந்து கொண்டதோடு, பொதுமக்களுடன் அமர்ந்து உணவருந்தினார் தனுஷ். நேற்று தனது அப்பா ஊரில் மக்களை பவுன்சர்களை வைத்து விரட்டிய நிலையில், தாய் ஊரில் காண வந்த பொதுமக்களிடம் கை கொடுத்து செல்ஃபி எடுத்துக் கொண்டார் தனுஷ்.

நடிகர் தனுஷ் இயக்கி நடிக்கும் இட்லி கடை திரைப்படத்தில் நித்யா மேனன், சத்யராஜ், அருண் விஜய், ராஜ்கிரண், சமுத்திரக்கனி உள்ளிட்ட ஏராளமான முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். இந்த திரைப்படமானது கடந்த அக்டோபர் 1ஆம் தேதி உலகம் எங்கும் ரிலீஸ் ஆகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

இதனை கொண்டாடும் வகையில் நேற்று ஆண்டிபட்டி அருகே உள்ள தனது குலதெய்வமான கஸ்தூரி மங்கா அம்மனை வழிப்பட்ட நடிகர் தனுஷ் தனது தாய்பிறந்த ஊரான சங்கராபுரம் அருகில் அமைந்துள்ள 200 ஆண்டுகள் பழமையான கருப்பசாமி கோவிலில் கிடா வெட்டி நேர்த்திகடன் செலுத்தினார்.

Dhanush Theni cinema

நடிகர் தனுஷ்

பெற்றோரான கஸ்தூரிராஜா தாம்பதியினர் மற்றும் மகன்கள் லிங்கா, யாத்ரா, மற்றும் சகோதரரும் இயக்குநருமான செல்வராகன் குடும்பத்தினர், உறவினர்களுடன் வருகை தந்த அவர் கிடாவெட்டி அப்பகுதியில் உள்ள கிராம மக்களுக்கு விருந்து படைத்தார். இந்த சங்கராபுரம் கருப்பசாமி கோவில் நடிகர் தனுஷ் குடும்பத்தின் இஷ்ட தெய்வங்களில் முக்கியமான ஒன்றாகும்.

Dhanush Theni cinema

இட்லி கடை வெற்றி

வழக்கமாக சென்டிமென்ட் காரணமாகவும் கோவிலில் வீற்றிருக்கும் கருப்பசாமி மீது கொண்ட பக்தி காரணமாகவும் தனுஷ் தான் இயக்கி நடிக்கும் ஒவ்வொரு திரைப்படங்களும் பூஜை போடும் சமயங்களிலும் படம் வெளியாகும் சமயத்திலும் இங்கு வந்து சிறப்பு வழிபாடு செய்வது வழக்கமாகும். மேலும், படத்தின் ஏதேனும் ஒரு இப்பகுதியில் படமாக்குவதும் குறிப்பிடத்தக்கது.

Dhanush Theni cinema

கிடா வெட்டி வழிபாடு

இந்நிலையில், தனது படம் வெற்றி அடைந்த நிலையில் நேர்த்திக் கடனுக்காக வருகை தந்த தனுஷ் என்று நீண்ட நேரம் கண்ணை மூடி பிரார்த்தனை செய்து சாமி வழிபாடு செய்தார். அதனைத் தொடர்ந்து அப்பகுதியில் உள்ள உறவினர்கள் மற்றும் கிராம பொது மக்களுக்கு தனுஷ் மற்றும் தனுஷ் குடும்பத்தினர் பொதுமக்களுடன் அமர்ந்து உணவு அருந்தினர். நடிகர் தனுசை காண்பதற்காக போடிநாயக்கனூர் மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் இருந்து ஏராளமான ரசிகர்கள் பொதுமக்கள் கோவிலில் குவிந்தனர்.

Dhanush Theni cinema

தனுஷ் படம் சென்டிமென்ட்

அனைவரும் நடிகர் தனுஷ் உடன் செல்பி எடுத்தும் கைகுலுக்கியும் மகிழ்ந்தனர். மேலும், தான் இயக்கி நடித்த படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிய ஒவ்வொரு படத்துக்காகவும் நேர்த்திக்கடனுக்காக கிடா வெட்டி தனுஷ் விருந்து வைத்து வருவது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+