திமுக கொடி கட்டப்பட்ட காரில்.. 9ம் வகுப்பு மாணவிக்கு நேர்ந்த பகீர்! ஆலங்குளம் ஷாக்
ஆலங்குளம் திமுக பிரமுகர் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
தென்காசி: ஆலங்குளம் அருகே, பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த திமுக பிரமுகர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
தமிழகத்தில் நாளுக்கு நாள், பெண் குழந்தைகள் மீதான வன்முறைகள் அதிகரித்து வருகிறது.. பாதுகாப்பு என்பதே கேள்விக்குறியாகி வருகிறது.
இது விஷயத்தில் சமீப காலமாக தமிழக அரசு கறார்தன்மை காட்டி வருவதுடன், சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை தயவு தாட்சண்யம் இன்றி கைது செய்தும் வருகிறது. அந்த வகையில் ஒருவர் சிக்கி உள்ளார். திமுக பிரமுகர்

திமுக
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள பலபத்திரராமபுரத்தைச் சேர்ந்தவர் முத்துசாமி.. 35 வயதாகிறது.. திமுக பிரமுகரான இவர், அந்த ஊரில் பொக்லைன் மற்றும் டிராக்டர் வைத்து தொழில் நடத்தி வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்... முத்துசாமி, நேற்று காலை ஊரில் இருந்து காரில் சின்னக்கோவிலான்குளம் சென்று கொண்டிருந்தார்..

கட்சி கொடி
தான் அந்த பகுதியில் முக்கிய பிரமுகர் என்பதால், காரில் திமுக கொடியும் கட்டப்பட்டிருந்தது.. மாவிலியூத்து நோக்கி கார் சென்றபோது, 9-ம் வகுப்பு படிக்கும் மாணவி தனியாக நடந்து சென்று கொண்டிருந்தார்.. பள்ளி முடித்துவிட்டு, அந்த மாணவி வீட்டுக்கு செல்ல பஸ் ஸ்டாண்டை நோக்கி நடந்து சென்று கொண்டிருப்பது போல தெரிந்தது.

லிப்ட்
உடனே, அந்த மாணவியின் அருகில் காரை நிறுத்திய முத்துசாமி, பஸ் ஸ்டேண்டில் இறக்கி விடுவதாக சொல்லி, காரில் லிப்ட் தந்து ஏற்றி உள்ளார்... அப்போது முத்துசாமி மது போதையில் இருந்ததாக கூறப்படுகிறது.. காரை பஸ் ஸ்டேண்ட் பக்கம் ஓட்டாமல் காட்டுப் பகுதிக்கு சென்றுள்ளார்.. அங்கு காரை நிறுத்திவிட்டு மாணவியிடம் சில்மிஷத்திலும் ஈடுபட தொடங்கியுள்ளார்.

கத்தி கூச்சல்
இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த மாணவி, கத்தி கூச்சலிடவும், அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து மாணவியை மீட்டனர்.. உடனே அங்கிருந்து தப்பியோட முயற்சித்த முத்துசாமியை அந்த பகுதி இளைஞர்கள் பிடித்து தர்ம அடி கொடுத்து ஊத்துமலை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் போலீசார் முத்துசாமியை கைது செய்து, ஆலங்குளம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இன்ஸ்பெக்டர் அங்கயற்கண்ணி, முத்துச்சாமியின் மீது போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்து சிறையில் அடைத்தார்.

கோவை
கோவையில் பள்ளி மாணவி தற்கொலை விவகாரம் வெடித்து கிளம்பி வரும் நிலையில், சம்பந்தப்பட்ட பள்ளி ஆசிரியரும், பள்ளி முதல்வரும சிறையில் உள்ள நிலையில், இப்படி ஒரு சம்பவம் மீண்டும் நடந்துள்ளது பெரும் அதிர்ச்சியை கூட்டி வருகிறது.. அதிலும் திமுக பிரமுகரே இந்த கேவலமான செயலில் ஈடுபட்டுள்ளது பெரும் அதிருப்தியையும் தந்து வருகிறது.
-
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்!












Click it and Unblock the Notifications