மின் கட்டணம்.. தமிழ்நாடு மின்சார வாரியமே அலர்ட் செய்த முக்கியமான விஷயம்.. மக்களே பாருங்க
தேனி: தற்போது பல மின் நுகர்வோர்களுக்கு, 'தங்களது மின் இணைப்பு பணம் கட்டாததால் துண்டிப்பு செய்யப்பட உள்ளது. துண்டிக்காமல் இருக்க இந்த எண்ணை தொடர்பு கொள்ளவும்' என செல்போன் எண் குறிப்பிட்டு குறுஞ்செய்திகள் வருகிறது. இப்படி மின்வாரியம் பெயரில் அனுப்பப்படும் மோசடியான குறுஞ்செய்திகளை நம்பி மக்கள் ஏமாற வேண்டாம் என்று தேனி மின்வாரிய அதிகாரி எச்சரித்துள்ளார்.
மோசடி செய்பவர்கள் பல்வேறு வழிகளை அதற்காக கையாண்டு வருகிறார்கள். மின் வாரியத்தின் பெயரில் ஏற்கனவே பல்வேறு முறைகளில் மோசடி நடந்து வருகிறது. அந்த வகையில் மின் இணைப்பு பணம் கட்டாததால் துண்டிக்கப்பட உள்ளதாக கூறி புதிய வகையில் மோசடியில் இறங்கி உள்ளனர்.

இப்படி வரும் எஸ்எம்எஸ் இல் உள்ள செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு பேசினால், பணத்தை பறிப்பது நடக்கிறது. அடிக்கடி மின்வாரியத்தின் பெயரை பயன்படுத்தி தான் மோசடியில் ஈடுபடுகிறார்கள். எனவே மின்சார பில் தொடர்பாக வரும் எந்த லிங்கையும் கிளிக் செய்து ஏமாந்துவிடாதீர்கள்.
இது தொடர்பாக தேனி மின் வாரிய மேற்பார்வை பொறியாளர் சகாயராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: "தேனி வட்டத்திற்குட்பட்ட மின்இணைப்புகளுக்கு வாரிய பணியாளர்கள் மூலம் 2 மாதங்களுக்கு ஒருமுறை மின் கணக்கீட்டு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. கணக்கீடு செய்யப்படும் மின் இணைப்புகளின் மின்கட்டணம் செலுத்த வேண்டிய கடைசி நாள் பற்றிய விவரங்கள் நுகர்வோர்களின் செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தியாகவும், மின்னஞ்சல் மூலமாகவும் தகவல் தெரிவிக்கப்படும்.
அந்த குறுஞ்செய்திகளில் நுகர்வோர்களின் மின் இணைப்பு எண், செலுத்த வேண்டிய தொகை மற்றும் கடைசி நாள் விவரங்கள் மட்டுமே இடம்பெறும். கட்டணம் தொடர்பாக மின்வாரிய அலுவலர்களையோ, பொறியாளர்களையோ தொடர்பு கொள்ளுங்கள் என்று எவ்வித செய்தியும் இடம் பெறாது.
தற்போது பல மின் நுகர்வோர்களுக்கு, 'தங்களது மின் இணைப்பு பணம் கட்டாததால் துண்டிப்பு செய்யப்பட உள்ளது. துண்டிக்காமல் இருக்க இந்த எண்ணை தொடர்பு கொள்ளவும்' என செல்போன் எண் குறிப்பிட்டு குறுஞ்செய்திகள் வருவதாக புகார்கள் பெறப்படுகின்றன. இது முற்றிலும் ஏமாற்று வேலையாகும். மின்வாரியம் இதுபோன்ற குறுஞ்செய்திகளை எப்போதும் அனுப்புவதில்லை. எனவே இதுபோன்ற குறுஞ்செய்திகளை நம்பி பொதுமக்கள் ஏமாற வேண்டாம்.
மின்பயன்பாட்டு கட்டணத்தை இணையவழியிலும், மின்வாரிய செயலி, தபால் அலுவலகம் மூலமாகவும் செலுத்தும் வசதி செய்யப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் அனைவரும் இவ்வசதிகளை பயன்படுத்தி உரிய காலத்தில் பணம் செலுத்தி இதுபோன்ற மோசடிகளில் இருந்து காத்துக் கொள்ள வேண்டும்" இவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்ட்டுள்ளது.
-
“ஏன் நடவடிக்கை எடுக்க கூடாது?” ராஜினாமா செய்த 4 அதிமுக எம்எல்ஏக்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ் -
18 மணிநேரம் தடையில்லா மின்சாரம்.. விவசாயிகளுக்கு சூப்பர் திட்டத்தை அறிவித்த முதலமைச்சர் விஜய்! -
இது லிஸ்ட்லயே நம்ம இல்லையே! மொத்தமாய் மாற்றும் விஜய்.. தனியார் கைக்கு போகும் டாஸ்மாக்! எப்போது? -
மேட்டர் சீரியஸ்.. களவாடப்பட்ட மின்வாரிய ஹார்ட் டிஸ்க்ஸ்! வேலையை ஆரம்பித்த சிபிசிஐடி! சிக்குவது யார்? -
டெல்டாவில் கனமழை.. தஞ்சை, திருவாரூர் மக்கள் உஷார்! அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
நீலகிரி டூ கன்னியாகுமரி வரை.. கொட்டி தீர்க்கப்போகும் கனமழை! 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட் -
கண்களை இருட்டாக்கும் சூரிய கிரகணம்.. 27 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கும் அதிசயம்! இந்தியாவில் தெரியுமா? -
அரசு பள்ளியில் தவெக எம்எல்ஏ மகளுக்கு அட்மிஷன்! இப்படித்தான் இருக்கனும்.. குவியும் பாராட்டு! -
தலைமை செயலகத்தில் நெகிழ்ச்சி! சிறுவனை வாரி அணைத்து உணவூட்டிய அமைச்சர் வன்னியரசு.. உருகிய மக்கள் -
மக்கள் தலையில் விழுந்த இடி.. அதிரடியாக உயர்ந்த லாரி வாடகை! எந்தெந்த ஊருக்கு எவ்வளவு தெரியுமா? ஷாக்! -
தேனி மண்ணில் பாரதிராஜா உடல் .. கை குழந்தைகளுடன் காத்திருக்கும் பெண்கள்.. பிரபலங்களின் நெகிழ்ச்சி செயல் -
கோவை தொடங்கி.. குமரி வரை 4 மாவட்டங்களில் கனமழை! மஞ்சள் அலர்ட் கொடுத்த வானிலை மையம்!












Click it and Unblock the Notifications