தேனி அருகே சோகம்... கந்து வட்டி.. கடன் தொல்லை.. விவசாயி தற்கொலை
தேனி: போடி அருகே ராசிபுரத்தில் கந்துவட்டி கடன் தொல்லை காரணமாக ஏலக்காய் விவசாயி கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தேனி மாவட்டம் போடி அருகே உள்ள ராசிங்காபுரத்தை சேர்ந்த விவசாயி சதிஸ்குமார் (34), கந்து வட்டி பிரச்சனையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தற்கொலை கொண்ட விவசாயி சதிஸ்குமாருக்கு முருகேஸ்வரி (30) என்ற மனைவியும் மிர்சன் (8) யஸ்வந்த் (2) என்ற இரு குழந்தைகளும் உள்ளனர். சதிஸ்குமார் கேரளாவில் ஏலக்காய் தோட்டம் வைத்து விவசாயம் செய்து வந்தார். இவர் ராசிங்காபுரத்தை சேர்ந்த சிக்கிலியன் மற்றும் மதியழகன் ஆகியோரிடம் இருந்து மூன்று லட்சம் ரூபாய் கடனாக பெற்று இருக்கிறார்.

இந்நிலையில் இருவரும் நேற்று இரவு சதிஸ் குமாரை அதிக வட்டி கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த சதிஸ்குமார் நள்ளிரவில் கடிதம் எழுதி வைத்துவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தகவலறிந்து வந்த போலீசார் உடலை கைபற்றி வழக்கு பதிவு செய்து பிரேத பரிசோதனைக்காக போடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.












Click it and Unblock the Notifications