தமிழக அரசு விவசாயிகளுக்கு தரும் 7000 ரூபாய்.. யாருக்கெல்லாம் கிடைக்கும்.. தேனி கலெக்டர் தகவல்
தேனி: மானிய விலையில் வேளாண் எந்திரங்கள் வாங்குவதற்கு விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீவனா அறிவித்துள்ளார். விவசாயிகள் இருப்பிடத்தில் இருந்தே, செல்போன் மூலம் மின்சார பம்பு செட்டுகளை இயக்கும் கருவி மானிய விலையில் வழங்கப்பட்டு வருகிறது. இந்த கருவிகளை பெற சிறு, குறு, விவசாயிகள், ஆதிதிராவிட விவசாயிகள் மற்றும் பெண் விவசாயிகளுக்கு 50 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.7 ஆயிரம் வரை மானியமாக வழங்கப்படுகிறது.
தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீவனா வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறுகையில், "தமிழ்நாடு அரசு வேளாண்மை பொறியியல் துறை சார்பில், அரசு மானியத்தில், மின் மோட்டார்கள் வழங்குதல் மற்றும் செல்போன் மூலம் இயங்கும் தானியங்கி பம்புசெட் கட்டுப்படுத்தும் கருவிகள் வழங்கப்பட்டு வருகிறது. சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு தங்களது பழைய திறன் குறைந்த பம்பு செட்டுகளை மாற்றி புதிய மின்மோட்டார்கள் வாங்குவதற்கும், புதிய விவசாய மின் இணைப்புகளுக்கு புதிய மின்மோட்டார்கள் வாங்குவதற்கும், மின்மோட்டார் மானியத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

நுண்ணுயிர் பாசன திட்டத்தின் கீழ் பதிவு செய்த விவசாயிகள் மட்டுமே இந்த திட்டத்தின் கீழ் அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களிடம் இருந்து மின்மோட்டார் பம்பு செட்டுகள் வாங்க இயலும். இந்த திட்டத்தில் பின்னேற்பு மானியமாக மொத்த விலையில் 50 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.15 ஆயிரம் வழங்கப்படும்.
விவசாயிகள் இருப்பிடத்தில் இருந்தே, செல்போன் மூலம் மின்சார பம்பு செட்டுகளை இயக்கும் கருவி மானிய விலையில் வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் விவசாயிகள் எங்கிருந்தாலும் தங்களின் செல்போன் மூலம் பம்பு செட்டுகளை இயக்கவும் கண்காணிக்கவும் முடியும். இந்த தானியங்கி பம்பு செட் கட்டுப்படுத்தும் கருவிகள் சிறு, குறு, விவசாயிகள், ஆதிதிராவிட விவசாயிகள் மற்றும் பெண் விவசாயிகளுக்கு 50 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.7 ஆயிரம் வரை மானியமாகவும், மற்ற விவசாயிகளுக்கு 40 சதவீதம் அல்லது ரூ.4 ஆயிரம் வரை மானியமாகவும் வழங்கப்படும்.
மேலும் சிறு தானிய இயக்கத்தின் கீழ் தரிசு நிலங்களில், சிறுதானிய சாகுபடிக்கான, உழவுப்பணிக்காக ஒரு ஹெக்டேருக்கு ரூ.5,400 வீதம் அதிகபட்சமாக 2 ஹெக்டேருக்கு ரூ.10,800 வரை மானியம் பெறலாம். இந்த திட்டங்கள் தொடர்பான விவரங்கள் பெறவும், விண்ணப்பங்கள் அளித்திடவும் தேனி, ஆண்டிப்பட்டி, பெரியகுளம், கடமலைக்குண்டு வட்டார விவசாயிகள் தேனி வேளாண்மை பொறியியல் துறை உதவி செயற்பொறியாளரை தொடர்பு கொள்ளலாம்.
கம்பம், உத்தமபாளையம், சின்னமனூர், போடி வட்டார விவசாயிகள் உத்தமபாளையம் வேளாண்மை பொறியியல் துறை உதவி செயற்பொறியாளரை தொடர்பு கொள்ளலாம்" இவ்வாறு தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீவனா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங் -
ஒரு மேயர் பதவியையாவது ஜெயிச்சு பாருங்க..நான் என் ஒரு பக்க மீசையை எடுத்துக்குறேன்! ஆர்எஸ் பாரதி சவால்












Click it and Unblock the Notifications