நாட்டிலேயே முதல்முறை.. உடல் உறுப்பு தானம் செய்த தேனி நபருக்கு அரசு மரியாதையுடன் இன்று இறுதிச்சடங்கு!
தேனி: தேனி மாவட்டம் சின்னமனூரில் சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த அரசு ஊழியர் வடிவேலுவின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்ட நிலையில், அவருக்கு இன்று அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடைபெற்றது. அண்மையில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தபடி, உடல் தானம் செய்த வடிவேலுவுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு நடைபெற்றது.
தேனி மாவட்டம் சின்னமனூரைச் சேர்ந்த வடிவேலு, தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முதுநிலை வருவாய் ஆய்வாளராக பணிபுரிந்து வந்தார். இவர் கடந்த செப்டம்பர் 23ஆம் தேதி, வேலை முடிந்து வீட்டுக்கு சென்று கொண்டிருந்தபோது சாலை விபத்தில் பலத்த காயமடைந்தார். உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட வடிவேலு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

வடிவேலு தனது உடல் உறுப்புகளை தானமாக வழங்கியிருந்தார். அவரது உடல் உறுப்புகளை தானமாக வழங்க அவரது குடும்பத்தினரும் ஒப்புதல் அளித்தனர். அதன்படி, அவரது உடல் உறுப்புகள் மற்றவர்களுக்கு பொருத்தப்பட உள்ளன. இந்நிலையில், அவரது இறுதிச் சடங்கு இன்று சின்னமனூரில் நடைபெறுகிறது. உயிரிழந்த வடிவேலுவுக்கு பட்டுலட்சுமி என்ற மனைவியும், ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் என இரு பிள்ளைகள் உள்ளனர்.
வடிவேலுவின் சொந்த ஊரான சின்னமனூரில் இன்று அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு நடைபெறவுள்ளது. இதில் தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பங்கேற்க உள்ளார். நாட்டிலேயே முதல் முறையாக, உடல் உறுப்பு தானம் செய்த நபருக்கு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு நடைபெறவுள்ளது.
உடல் உறுப்பு தானத்தின் மூலம் நூற்றுக்கணக்கான நோயாளிகளுக்கு வாழ்வளிக்கும் அரும்பணியில் நாட்டின் முன்னணி மாநிலமாக தமிழ்நாடு தொடர்ந்து விளங்கி வருகிறது. தம் உறுப்புகளை ஈந்து, பல உயிர்களைக் காப்போரின் தியாகத்தினைப் போற்றிடும் வகையில், இறக்கும் முன் உறுப்பு தானம் வழங்குவோரின் இறுதிச்சடங்குகள் இனி அரசு மரியாதையுடன் மேற்கொள்ளப்படும் என்று அண்மையில் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

உடல் உறுப்பு தானம் செய்ய விருப்பம் உள்ளவர்கள், உடல் உறுப்பு தானத்துக்காகப் பதிவு செய்யக்கூடிய இணையதளத்தில் அல்லது மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகளில் பதிந்திருக்க வேண்டும், தங்கள் விருப்பத்தை குடும்பத்தினரிடம் தெரிவித்து ஒப்புதல் பெற்றிருக்க வேண்டும். உடல் உறுப்பு தானம் செய்தவர்கள் இயற்கையாக இறந்தாலோ அல்லது மூளைச்சாவு அடைந்தாலோ அவரது குடும்பத்தினர்களின் அனுமதியுடன் உறுப்புகள் தானமாகப் பெறப்படும்.
இந்நிலையில், மூளைச்சாவு அடைந்த சின்னமனூரைச் சேர்ந்த அரசு ஊழியர் வடிவேலுவின் உடல் உறுப்புகள் அவரது விருப்பப்படி தானமாகப் பெறப்பட்டுள்ளன. தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் அறிவித்தபடி, வடிவேலுவின் இறுதிச் சடங்கு அரசு மரியாதையுடன் இன்று நடைபெறுகிறது. உடல் உறுப்பு தானம் செய்தவருக்கு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு நடைபெறுவது நாட்டிலேயே இதுதான் முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
உடல் உறுப்பு தானம் செய்பவர்களுக்கு அரசு மரியாதை வழங்கப்படும் என்ற தமிழ்நாடு அரசின் அறிவிப்பு, இன்னும் ஏராளமானோரை உடல் உறுப்பு தானம் செய்ய ஊக்குவிக்கும், இது உடல் உறுப்புகள் செயலிழந்த பலரின் உயிரைக் காப்பாற்றும் என்பதால், இந்த முறைக்கு பெரும் ஆதரவு எழுந்துள்ளது.
வடிவேல் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவர் அனுமதிக்கப்பட்ட தனியார் மருத்துவமனை மற்றும் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை வாயிலாக சிலர் உறுப்புகளை தானமாகப் பெற்று பயனடைந்துள்ளனர். இன்று, வடிவேலுவின் இறுதிச்சடங்கில் பங்கேற்ற அமைச்சர் மா.சுப்பிரமணியன், அவரது உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். தேனி மாவட்ட திமுக செயலாளர்கள் கம்பம் ராமச்சந்திரன், தங்க தமிழ்ச்செல்வன் உள்ளிட்டோரும் இறுதி அஞ்சலி செலுத்தினர்.

பின்னர் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், "உடல் உறுப்பு கொடையாளர்களுக்கு தமிழக அரசின் சார்பில் மரியாதை செலுத்தப்படும் எனும் தமிழக முதல்வர் அவர்களின் அறிவிப்பிற்கிணங்க தேனி மாவட்டம் சின்னமனூரை சார்ந்த வடிவேல் அவர்களின் திருவுடலுக்கு மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து அரசின் சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது." எனத் தெரிவித்தார்.
குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் உடன் பணி புரிந்தவர்கள் என அனைவரின் இறுதி அஞ்சலிக்கு பின், சின்னமனூர் நகராட்சிக்கு உட்பட்ட எரிவாயு தகன மேடையில் வடிவேலுவின் உடல் தகனம் இன்று பிற்பகலில் செய்யப்படுகிறது.
-
"டெல்லி என்ன.. அமெரிக்காவே மிரட்டினாலும்..” டிடிவி தினகரனுக்கு ஓபிஎஸ் கொடுத்த பதில்! -
கண் சிவந்த ஸ்டாலின்.. அறிவாலயத்தில் இருந்து பறந்த உத்தரவு.. அதிர்ச்சியில் திமுக நிர்வாகிகள் -
சிபிஎம் கட்சிக்கு 5 தொகுதிகள்தான்! கட் அன்ட் ரைட்டாக சொன்ன ஸ்டாலின்! பெ.சண்முகம் வைத்த டிமாண்ட் -
Election Exclusive: வேடசந்தூரில் வென்றால் கோட்டையில் கொடி! மீண்டும் களத்தில் திமுக சிட்டிங் சீனியர்! ஜூனியர்கள் பாவம்! -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ்












Click it and Unblock the Notifications