கேரளாவில் இருந்து வந்த கார்.. சூட்கேஸில் மனித உடல் உறுப்புகள்.. அதிர்ந்துபோன போலீசார்! ஷாக் பின்னணி!
தேனி: கேரளாவில் இருந்து வந்த காரை தேனி போலீசார் சோதனை செய்ததில் ஒரு சூட்கேஸுக்குள் மூளை, கல்லீரல் உள்ளிட்ட உடல் உறுப்புகள் பேக் செய்யப்பட்டு இருந்தன. கோடீஸ்வரர் அவதற்கான பூஜைக்காக மனித உடல் உறுப்புகளை வாங்கி வந்ததாக கூறிய மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தேனி மாவட்டம் உத்தமபாளையம் ஏ.எஸ்.பி மதுக்குமாரி தலைமையில் போலீசார் இரவு நேர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பழைய பைபாஸ் சாலையில் மின்னல் வேகத்தில் வந்த ஒரு ஸ்கார்ப்பியோ காரை நிறுத்தி சோதனை நடத்தினர். அப்போது அந்தக் காருக்குள் 3 மூன்று பேர் இருந்தனர். அவர்களிடம் காவல்துறையினர் விசாரித்தனர்.

அந்த காரில் இருந்த நபர்களின் பேச்சில் சந்தேகம் அடைந்த காவல்துறையினர், அந்த காரில் சோதனை நடத்தினர். அவர்கள் வைத்திருந்த 3 சூட்கேஸ்களை போலீசார் திறந்து பார்த்தனர். அதில் நாக்கு, கல்லீரல், மூளை உள்ளிட்ட மனித உடல் உறுப்புகள் தனித்தனியாக பேக்கிங் செய்து வைக்கப்பட்டிருந்தன. எலுமிச்சம்பழம், சூடம், முட்டை போன்றவைகளும் இருந்துள்ளன.
இதைப் பார்த்து அதிர்ந்து போன போலீசார், அவற்றை பறிமுதல் செய்து, காரில் பயணித்த 3 பேரையும் உத்தமபாளையம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினனர். அதில் பல அதிர்ச்சியான தகவல்கள் காவல்துறையினருக்கு தெரியவந்தன.
விசாரணையில் அவர்கள் மதுரை அய்யனார்கோட்டையை சேர்ந்த அலெக்ஸ் பாண்டியன் (38), ராதநாதபுரம் மாவட்டம் கமுதியை சேர்ந்த டேவிட் பிரதாப்சிங் (40), பசும்பொன் கிராமத்தை சேர்ந்த முருகன் (65) என தெரியவந்தது. அவர்களுடன் வந்த உத்தமபாளையத்தைச் சேர்ந்த மந்திரவாதி ஜேம்ஸ் (52) என்பவர் தப்பி ஓடிவிட்டதும் தெரியவந்தது.
மந்திரவாதி ஜேம்ஸ், அலெக்ஸ் பாண்டியன் உள்ளிட்ட 3 பேரிடமும் நள்ளிரவில் ஒரு மாந்திரீக பூஜை செய்தால் பணம் பல மடங்காகக் கொட்டும். ஒரே நாளில் நீங்கள் கோடீஸ்வரர்களாக மாறிவிடலாம் என்று ஆசை காட்டியுள்ளார். அதனை நம்பிய 3 பேரும் கோடீஸ்வரர்களாக ஆவதற்கு என்ன பூஜை செய்ய வேண்டும் என்று கேட்டுள்ளனர்.
அதற்கு அந்த மந்திரவாதி ஜேம்ஸ், மனித உடல் உறுப்புகளை வீட்டில் வைத்து பூஜை செய்தால் கோடீஸ்வரர்கள் ஆகலாம், கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டம் வண்டிப்பெரியாரில் எனக்குத் தெரிந்த நபர் ஒருவர் இருக்கிறார். அவரிடம் நேரில் சென்று ரூ.5 லட்சம் பணத்தைக் கொடுத்தால் வேண்டியது கிடைக்கும், அதை வைத்து பூஜை செய்தால் பணம் கொட்டோ கொட்டு எனக் கொட்டும் எனக் கூறியுள்ளார்.
ஜேம்ஸ் கூறியபடி, அலெக்ஸ் பாண்டியன், பிரதாப் சிங், முருகன் ஆகியோர் நேற்று முன்தினம் காரில் கேரளா, வண்டிப்பெரியார் சென்றுள்ளனர். அங்கு ஜேம்ஸ் கூறிய நபரிடம் தாங்கள் வைத்திருந்த ரூ. 5 லட்சம் பணத்தை கொடுத்துள்ளனர். அதற்கு அந்த நபர் 3 சூட்கேஸ் பெட்டிகளை கொடுத்துள்ளார். அந்த பெட்டிகளை வாங்கிக்கொண்டு 3 பேரும் காரில் உத்தமபாளையம் நோக்கி புறப்பட்டனர். அப்போதுதான் அவர்கள் காவல்துறையினரின் சோதனையில் சிக்கியுள்ளனர்.
அவர்கள் வைத்திருந்த சூட்கேஸில் இருந்த உடல் உறுப்புகள் மனித உடல் உறுப்புகள் தானா என்பதைக் கண்டறிய மதுரையில் உள்ள தடயவியல் பரிசோதனை கூடத்துக்கு காவல்துறையினர் அனுப்பி வைத்தனர். மேலும், உடல் உறுப்புகளுக்காக நரபலி கொடுக்கப்பட்டதா என்பது குறித்தும் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், தலைமறைவான மந்திரவாதி ஜேம்ஸையும் காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
-
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம்












Click it and Unblock the Notifications