9 நிமிடங்கள்.. 120 கி.மீ. வேகம்.. புதிய பாதையில் போடி டூ தேனி இடையே மின்னல் வேகத்தில் பாய்ந்த ரயில்
தேனி: தேனி இடையே புதிய அகல பாதையில் 120 கிலோ மீட்டர் வேகத்தில் ரயிலை இயக்கி இறுதி கட்ட சோதனை ஓட்டம் நேற்று நடந்தது. இந்த திட்டத்திற்கு ரூ 592 கோடி செலவிடப்பட்டுள்ளது. இந்த புதிய ரயில் பாதை பிரிவில் 8 பெரிய பாலங்கள் மற்றும் 184 சிறிய பாலங்கள் கட்டப்பட்டுள்ளன.
மதுரை- போடி இடையே 90 கி.மீ. தொலைவிலான அகல ரயில் பாதையில் தற்போது தேனி வரை பணிகள் முடிவடைந்துள்ளது. இந்த திட்டத்திற்கு ரூ 592 கோடி செலவிடப்பட்டுள்ளது. இதில் சிறப்பு ரயிலும் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தேனி- போடி இடையிலான 15 .கி.மீ. புதிய அகல பாதை அமைக்கும் பணிகள் கடந்த மாதம் நிறைவடைந்தன.
இதையடுத்து ரயில் என்ஜின் அதிவேகத்தில் இயக்கி இரு முறை சோதனை ஓட்டம் நடந்தது. இந்த நிலையில் நேற்றைய தினம் பெங்களூரு தென் சரக ரயில்வே பாதுகாப்பு ஆணையர் அபய்குமார் ராய் இறுதிக் கட்ட ஆய்வு நடத்தினார்.

தேனி ரயில் நிலையம்
இதற்காக நேற்று காலை 10 மணிக்கு தேனி ரயில் நிலையத்தில் உள்ள பிளாக் இன்ஸ்ட்ரூமென்ட், கணினித் திரை ஆகியவற்றை ஆய்வு செய்தார். பின்னர் போடி வரை டிராலியில் சென்று வாழையாற்று பாலம், கொட்டகுடி ஆற்றுப் பாலங்கள், பூதிப்புரம் சப்வே, நீர் வழி பாலங்கள், புதூர் ரயில்வே கேட் ஆகியவற்றை ஆய்வு செய்தார்.

போடி ரயில்வே என்ஜின்
இதைத் தொடர்ந்து போடியில் ரயில்வே என்ஜினுக்கு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து தேனிக்கு மூன்று ரயில் பெட்டிகளுடன் அதிவேக சோதனை ஓட்டம் நடைபெற்றது. மாலை 3.27 மணிக்கு கிளம்பிய ரயில் 120 கி.மீ. வேகத்தில் தேனிக்கு 3.36 நிமிடங்களில் சென்றடைந்தது. அதாவது பயண நேரம் சுமார் 9 நிமிடங்கள் மட்டுமே.

ரயில்வே கட்டுமானம்
இந்த ஆய்வில் தெற்கு ரயில்வே கட்டுமான பிரிவு தலைமை செயல் அதிகாரி வி.கே. குப்தா, மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் பத்மநாபனன் ஆனந்த், முதன்மைப் பொறியாளர் மஸ்தான் ராவ், முதன்மை கட்டுமான பொறியாளர் இளம்பூரணன், முதன்மை தொடர்பு பொறியாளர் பாஸ்கர ராவ், முதன்மை மின் பொறியாளர் பாலாஜி, துணை முதன்மை பொறியாளர் சூரியமூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

12 ஆண்டுகளுக்கு பிறகு
போடிக்கு கடந்த 2010 ஆம் ஆண்டி மீட்டர்கேஜ் ரயில் நிறுத்தப்பட்டது. 12 ஆண்டுகளுக்கு பிறகு அகல ரயில்பாதை பணிகள் முடிந்து சோதனை ஓட்டம் நடைபெற்றதை அடுத்து பொதுமக்கள் ஏராளமானோர் ரயில் நிலையத்திற்கு வந்து ரயிலையும் சோதனை ஓட்டத்தையும் கண்டு மகிழ்ந்தனர். இந்த புதிய ரயில் பாதை பிரிவில் 8 பெரிய பாலங்கள் மற்றும் 184 சிறிய பாலங்கள் கட்டப்பட்டுள்ளன. இந்த ரயில் சோதனை ஓட்ட வீடியோவை தென்னக ரயில்வே வெளியிட்டுள்ளது. அதில் ரயிலானது மின்னல் வேகத்தில் பெரும் சப்தத்துடன் சீறி பாய்ந்து வருகிறது. இந்த வேகத்தால் தண்டவாளத்தில் இருந்த தூசு துறும்புகள் பறக்கும் அளவுக்கு வேகம் அதிகமாகவே இருக்கிறது.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications