"பச்சை துரோகம்".. பேன்ஸி ஸ்டோருக்குள்ளேயும் அசிங்கம்.. "உறவு"க்கு 3 இடங்கள்.. பரிதவித்த தேனி பெண்!
தேனி பெண்ணை ஏமாற்றிய இளைஞரை போலீசார் கைது செய்தனர்
தேனி: ஒரு அப்பாவி பெண்ணை ஏமாற்ற நினைத்த இளைஞரின் ஏமாற்றுத்தனம் முடிவுக்கு வந்துள்ளது.. தேனி போலீசார் அந்த இளைஞரை தட்டி தூக்கி உள்ளனர்.
தேனி- மதுரை நெடுஞ்சாலையில் பங்களாமேடு பகுதியில் பிரபலமான ஒரு ஜவுளிக் கடை உள்ளது.. சுற்றுவட்டாரம் முழுக்க இந்த கடை படுபேமஸ்..!
தென்காசி, வத்தலகுண்டு, கோவை போன்ற இடங்களில் இந்த ஜவுளிக்கடைக்கு கிளைகள் உள்ளன.. அந்த வகையில், தேனியிலும் இந்த கடையின் ஒரு பிராஞ்சு உள்ளது..

வத்தலகுண்டு
முருகன் என்பவர்தான் இந்த கடையை நடத்தி வருகிறார். 31 வயதாகிறது.. இன்னும் கல்யாணம் ஆகவில்லை.. இதே கடையில் ஃபேன்சி ஸ்டோர், சூப்பர் மார்க்கெட் போன்றவைகளும் அமைக்கப்பட்டுள்ளன... இந்த கடைகள் எல்லாமே ஜவுளிக்கடைக்குள் உள்ளன.. இதில், அழகு சாதனப் பொருட்கள் விற்பனை செய்யும் கடையை ராதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவர் நடத்தி வருகிறார்.. அவருக்கு 29 வயதாகிறது.. ஒருகட்டத்தில் கடை ஓனர் முருகனுக்கும் ராதாவுக்கும் பழக்கம் ஏற்பட்டு, அது நெருக்கமாகி, கடைசியில் கள்ளக்காதலில் வந்து முடிவடைந்தது.

பிராமிஸ்
இவர்கள் இருவருமே வேறு வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது.. எனினும், ராதாவை கட்டாயம் கல்யாணம் செய்து கொள்வதாக முருகன் பிராமிஸ் தந்தாராம்.. அதையும் ராதா வேதவாக்காக நம்பி உள்ளார்.. கடைக்குள்ளேயே ஒரு ரூம் உள்ளதாம்.. அந்த ரூமில் பலமுறை கனகாவும், முருகனும் உறவு கொண்டதாக கூறப்படுகிறது.. அதேபோல, பாரஸ்ட் ரோடு பகுதியில் உள்ள முருகனின் வீட்டிலும், இவர்கள் பல முறை உறவு கொண்டுள்ளதாக தெரிகிறது.

பேன்ஸி ஸ்டோர்
இந்த கள்ளக்காதல் ஜோடிக்கு, அந்த ஜவுளிக்கடையின் மேனேஜர்தான் உதவியாக இருந்துள்ளார்.. இவர் பெயர் வினோத்.. கேரளாவை சேர்ந்தவர். சில சமயம், கனகாவும், முருகனும், வினோத்தின் வீட்டிற்கு சென்று அங்கும் பலமுறை உறவில் ஈடுபட்டு வந்ததாக தெரிகிறது.. இப்படிப்பட்ட சூழலில், முருகனுக்கு வீட்டில் திருமணத்துக்கு ஏற்பாடு செய்துள்ளனர்.. சின்னமனூரை சேர்ந்த பிரபல தொழிலதிபரின் மகளை, முருகனுக்கு நிச்சயம் செய்தார்கள்.. கடந்த மார்ச் முதல்வாரம்தான் நிச்சயதார்த்தம் நடந்தது..

நிச்சயதார்த்தம்
ஆனால், இந்த விஷயத்தை முருகன், கனகாவிடம் மறைத்துவிட்டார்.. அதுமட்டுமல்ல, நிச்சயதார்த்தம் ஆன மறுநாளே, மேனேஜர் வினோத்தின் வீட்டில் கனகாவுடன் முருகனும் உடலுறவு கொண்டுள்ளார். அப்போதுதான், கனகாவிற்கு அந்த திடீர் போன் வந்தது.. கனகாவின் உறவினர் ஒருவர் பேசினார்.. முருகனுக்கு நிச்சயதார்த்தம் நடந்ததை பற்றி சொல்லி உள்ளார்.. அத்துடன், நிச்சயதார்த்த போட்டோவையும் கனகாவின் வாட்ஸ்அப்க்கு அனுப்பிவிட்டார்..

ஆவேசம்
இதை பார்த்ததும் கொந்தளிப்பும், ஆவேசமும் அடைந்த ராதா, முருகனிடம் இதை பற்றி கேட்டுள்ளார்.. தகராறிலும் ஈடுபட்டுள்ளார்... ராதாவின் ஆவேசத்தை கட்டுப்படுத்த முடியாத முருகன், உடனே மேனேஜர் வினோத்துக்கு போனை போட்டு வர சொன்னார்.. வினோத்தினாலும் நிலைமையை சமாளிக்க முடியவில்லை.. எனவே, உத்தமபாளையம் ஞானம்மன் கோவிலில், வினோத் முன்னிலையில், ராதாவுக்கு தாலி கட்டினார் முருகன்.

தொழிலதிபர்
அப்போதும் பிரச்சனை முடியவில்லை.. கல்யாணம் நடந்த மறுநாள் ராதாவிற்கு முருகன் போன் செய்தார்.. "நான் ஒரு தொழிலதிபரின் பெண்ணை பல வருஷமாக காதலித்து வருகிறேன்.. அவளைதான் கல்யாணம் செய்து கொள்வேன்.. உன்னுடன் நடந்த கல்யாணத்திற்கு எந்தவிதமான ஆதாரமும் இல்லை.. அதனால் அது செல்லாது... கல்யாணம் ஆனதும் நான் அமெரிக்காவில் செட்டில் ஆகிவிடுவேன்" என்று சொல்லிவிட்டு போனை துண்டித்துவிட்டார்.

நம்பிக்கை துரோகம்
இதைக்கேட்டு அதிர்ந்து போன கனகா, நேராக தேனி மகளிர் ஸ்டேஷனுக்கு வந்து முருகன் மீது புகார் தந்தார்.. ஆனால், அதற்குள் முருகன் எஸ்கேப் ஆகிவிட்டார்.. போலீசார் அவரை தேட ஆரம்பித்ததும், முருகனே வேறு வழியின்றி போலீசில் வந்து சரணடைந்தார்... ஒரு பெண்ணுக்கு நம்பிக்கை துரோகம் செய்துவிட்டு, இன்னொரு பெண்ணை கல்யாணம் செய்ய நினைத்த முருகனின் சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.. இன்னும் கொஞ்ச நாளில் அமெரிக்காவில் செட்டில் ஆக போவதாக சொன்னவர், இப்போது களி தின்று கொண்டிருக்கிறார்.
-
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
தமிழ்நாட்டில் விஏஓவாக 2016ல் வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் என்ன சம்பளம் வாங்குவார் தெரியுமா?












Click it and Unblock the Notifications