தமிழ்நாட்டு இளைஞர்களே வேலைக்கு போக பிடிக்கலையா.. சொந்தமாக தொழில் தொடங்கனுமா.. சூப்பர் வாய்ப்பு
தேனி: வேலை இல்லாத இளைஞர்கள் சுயமாக தொழில் செய்து வேலைவாய்ப்பு பெறும் நோக்கில், வியாபாரம் சார்ந்த தொழில்களுக்கு திட்ட மதிப்பின் உச்ச வரம்பு ரூ.15 லட்சமாகவும், அதற்கான மானியம் ரூ.3 லட்சத்து 75 ஆயிரமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது, என விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் படித்து வேலைவாய்ப்பு அற்ற இளைஞர்களுக்கு அரசு கடன் தருகிறது. குறிப்பாக 5 லட்சம் வரை கடன் தருகிறது. அதில் மானியமாக 1.25லட்சம் வரை மானியம் கிடைக்கும். கடனுக்கு வட்டியும் மிகக்குறைவு. இந்த வாய்ப்பை பயன்படுத்தி படித்த இளைஞர்கள் தொழில் தொடங்கி முன்னேற வேண்டும் என்பதே அரசின் நோக்கம் ஆகும்.

தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீவனா வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது: "தேனி மாவட்டத்தில், கிராம மற்றும் நகர்ப்புறங்களில் புதிய தொழில்களை உருவாக்குவதன் மூலம், சுயவேலைவாய்ப்பு, பொருளாதாரம் மற்றும் தொழில் வளர்ச்சியை மேம்படுத்தும் நோக்கத்தோடு, தமிழக அரசால் 'வேலையில்லா இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டம்' அறிவிக்கப்பட்டு, மாவட்டத் தொழில் மையத்தால் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தில், அதிக எண்ணிக்கையிலான படித்த இளைஞர்கள் பயன்பெறும் வகையில், வியாபாரம் சார்ந்த தொழில்களுக்கு திட்ட மதிப்பின் உச்ச வரம்பு ரூ.15 லட்சமாகவும், அதற்கான மானியம் ரூ.3 லட்சத்து 75 ஆயிரமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் கீழ், 2023-24-ம் நிதியாண்டில் கடன் திட்ட பயனாளிகளுக்கு தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சியானது இணையதளம் மூலம் வழங்கப்படுகிறது.
அதில் பயன்பெற ஆர்வமுள்ள தொழில் முனைவோர்கள் https://www.msmeonline.tn.gov.in/uyegp என்ற இணையதளத்தில் விண்ணப்பம் செய்து பயன்பெறலாம். மேலும் விவரங்களுக்கு மாவட்ட தொழில் மையத்தை தொடர்பு கொள்ளலாம்" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தேனி மாவட்டத்தினர் மட்டுமல்ல, தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டத்தினரும் இதில் விண்ணப்பிக்கலாம். தகுதி உடையவர்களுக்கு கடன் தந்து அவர்களை முன்னேற்ற நடவடிக்கை எடுத்து வருகிறது.












Click it and Unblock the Notifications