தேனி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

விசாரணைக்கு ஆஜராகாத ரவீந்திரநாத் எம்பி.. வனத்துறையிடம் விளக்க கடிதம்..தூரத்தும் சிறுத்தை பலி மேட்டர்

Google Oneindia Tamil News

தேனி: தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே தோட்டத்து வேலியில் சிக்கி சிறுத்தை உயிரிழந்த விவகாரத்தில் சம்மன் அனுப்பப்பட்ட நிலையில் ரவீந்திரநாத் எம்பி விசாரணைக்கு ஆஜராகவில்லை. மாறாக அவரது தரப்பில் விளக்கம் கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது.

முன்னாள் முதல் அமைச்சர் ஓ பன்னீர் செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் தேனி நாடாளுமன்ற தொகுதி எம்பியாக உள்ளார்.

தேனி மாவட்டம் தேனி மாவட்டம் பெரியகுளம் தாலுகா கைலாசப்பட்டி கிராமத்தின் அருகே சொர்க்கம் கோம்பை பகுதியில் ரவீந்திரநாத்துக்கு சொந்தமான தோட்டம் உள்ளது.

திமுக போட்ட ஸ்கெட்ச்! விடாது துரத்தும் 'சிறுத்தை’! வசமாய் சிக்கிய ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் குமார்! திமுக போட்ட ஸ்கெட்ச்! விடாது துரத்தும் 'சிறுத்தை’! வசமாய் சிக்கிய ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் குமார்!

செத்து கிடந்த சிறுத்தை - 5 பேர் கைது

செத்து கிடந்த சிறுத்தை - 5 பேர் கைது

தோட்டத்தை சுற்றி மின்வேலி அமைக்கப்பட்டு உள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் 28ம் தேதி தோட்டத்தில் ஒரு சிறுத்தை செத்து கிடந்தது. அதன்பிறகு சிறுத்தையின் உடல் எரிக்கப்பட்டது. இது சர்ச்சையை கிளப்பியது. இதையடுத்து வனத்துறையினர் விசாரணையை துவங்கினர். தோட்டத்திற்குள் ஆட்டுக்கிடை அமைத்து தங்கிய ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே உள்ள தே கரிசல்குளத்தை சேர்ந்த அலெக்ஸ்பாண்டியன், தங்கவேல், ராஜவேல் ஆகியோர் மீது கைது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்தப்பட்டனர்.

களமிறங்கிய திமுக

களமிறங்கிய திமுக

இந்நிலையில் சிறுத்தை இறந்த விவகாரத்தில் எம்பி ரவீந்திரநாத் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேனி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தங்கதமிழ்ச்செல்வன், பெரியகுளம் திமுக எம்எல்ஏ சரவணக்குமார் உள்ளிட்டவர்கள் வலியுறுத்தனர். மேலும் தொடர்ந்து போராட்டம் நடத்தப்படுகிறது. இதையடுத்து ரவீந்திரநாத் எம்பியிடம் விசாரிக்க அனுமதி கோரி நாடாளுமன்ற மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லாவுக்கு தேனி மாவட்ட வனத்துறை கடிதம் எழுதியது.

ரவீந்திரநாத்துக்கு சம்மன்

ரவீந்திரநாத்துக்கு சம்மன்

இதையடுத்து சிறுத்தை இறந்து கிடந்த தோட்டம் என்பது தேனி எம்பி ரவீந்திரநாத் உள்பட 3 பேருக்கு சொந்தமானது எனக்கூறி மூவருக்கும் கடந்த மாதம் சம்மன் அனுப்பப்பட்டது. 2 வாரத்துக்குள் தேனி மாவட்ட வன அலுவலர் அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என கூறப்பட்டு இருந்தது. இந்நிலையில் இன்று ரவீந்திரநாத் எம்பி ஆஜராகலாம் என கூறப்பட்டது.

வழக்கறிஞர்கள் விளக்க கடிதம்

வழக்கறிஞர்கள் விளக்க கடிதம்

ஆனால் இன்று ரவீந்திரநாத் எம்பி விசாரணைக்கு ஆஜராகாமல் நழுவினார். இருப்பினும் அவரது சார்பில் வழக்கறிஞர்கள் நேரில் வந்து தேனி மாவட்ட வனத்துறையிடம் கடிதம் ஒன்றை வழங்கினர். வழக்கறிஞர் சந்திசேகரன் தலைமையிலான வழக்கறிஞர்கள் தேனி மாவட்ட உதவி வன பாதுகாவலார் ஷர்மிலியிடம் கடிதம் கொடுத்தனர்.

 தொடர்பு இல்லை

தொடர்பு இல்லை

இதுபற்றி வழக்கறிஞர் சந்திரசேகரன் கூறுகையில், ‛‛7 வது இந்திய குடிநீர் வாரம் கூட்டம் டெல்லியில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்க ரவீந்திரநாத் எம்பி சென்றுள்ளார். இதனால் அவரால் ஆஜராக முடியவில்லை. சிறுத்தை உயிரிழப்புக்கும், அவருக்கும் எந்த தொடர்பும் இல்லை. அவரை விசாரணையில் இருந்து வனத்துறையினர் விடுவிக்க வேண்டும். மேலும், சிறுத்தை மரணத்தில் உண்மைக் குற்றவாளிகளை வனத்துறையினர் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

English summary
MP Ravindharanath did not appear for the hearing in the case of the death of a leopard caught in a garden fence near Periyakulam, Theni district. Instead, his lawyers have submitted a letter of explanation.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X