பணம் குட்டி போடும்.. ஆசை ஆசையாய் போன போலீஸ்காரருக்கு ஆப்பு! ஒரே அசைன்மென்டில் 35 லட்சம் அபேஸ்!
தேனி: பெரியகுளத்தில் மும்பை காவலரை ஏமாற்றி 35 லட்ச ரூபாயை பறித்துச் சென்ற பண இரட்டிப்பு மோசடி கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். 35 லட்சம் பணத்துடன் தப்பி ஓடிய இருவரை தேடி வருகின்றனர்.
மும்பை மேற்கு நகர காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வருபவர் லட்சுமணன். இவரிடம் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த செந்தில் மற்றும் சேகர்பாபு ஆகியோர் போன் மூலம் கடந்த இரண்டு மாதங்களாக தொடர்பு கொண்டனர்.
அப்போது தங்களிடம் ஹவாலா பணம் 2 கோடி அளவில் 2000 ரூபாய் நோட்டுகள் இருப்பதாகவும், 50 லட்சம் கொடுத்தால் 2 கோடி பணத்தை தருவதாக கூறி மும்பையில் இருந்து வர வைத்துள்ளார்கள். இதனைத் தொடர்ந்து மும்பை காவலர் லட்சுமணன் அவரது உறவினரான கங்காதரன் ஆகிய இருவரும் கடந்த இரண்டு தினத்திற்கு முன்பாக பெரியகுளம் வந்து தனியார் விடுதியான லக்கி லாட்ஜில் தங்கி உள்ளனர்.

மும்பை காவலர்
அப்போது மும்பை காவலர் லட்சுமணனிடம், செந்தில் மற்றும் சேகர்பாபு ஆகியோர்
50 லட்சம் பணம் கேட்டுள்ளனர். அதற்கு தன்னிடம் 35 லட்சம் தான் இருக்கிறது என்று கூறி காசோலையாக தருவதாக லட்சுமணன் தெரிவித்துள்ளார். ஆனால் செந்தில் மற்றும் சேகர்பாபு மும்பை காவலரிடம் தங்களுக்கு பணமாகத்தான் வேண்டும் என்று கூறியுள்ளனர். இதனையடுத்து லட்சுமணன் பெரியகுளம் ஆக்சிஸ் வங்கியில் பணம் எடுப்பதற்காக சென்று உள்ளார்.
பெரியகுளம் மோசடி
அங்கு அதிக பணம் எடுக்க முடியாது என்று கூறியதால் தேனி ஆக்சிஸ் வங்கியில் பணத்தை எடுத்து விட்டு பெரியகுளம் லாட்ஜில் தங்கி இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மும்பை காவலர் லட்சுமணனை காரில் அழைத்துச் சென்று பெரியகுளம் to மதுரை சாலையில் காரை நிறுத்தி காரில் வைத்திருந்த போலியான 2000 ரூபாய் நோட்டுகளை காண்பித்துள்ளனர்.
பண இரட்டிப்பு
இதற்கிடையே மற்றொரு காரில் அங்கு வந்த 5 நபர்கள் நாங்கள் குற்றப்புலனாய்வு பிரிவைச் சேர்ந்த காவலர்கள் எனக் கூறி மும்பையைச் சேர்ந்த காவலர் மற்றும் அவரது உறவினர், செந்தில் மற்றும் சேகர்பாபு ஆகிய நால்வரையும் அடித்து காரில் ஏற்றிக்கொண்டு சென்றனர். அப்போது லட்சுமணன் நானும் மும்பையில் காவலராக பணியாற்றி வருகிறேன், என்று கூறியதால், அவரை பெரியகுளம் பைபாஸ் ரோட்டிலேயே இறக்கிவிட்டு அனைவரும் தப்பி சென்றுள்ளார்.
ஹவாலா கும்பல்
இந்நிலையில், மோசடி கும்பல் தான் குற்றப்புலனாய்வு காவல் துறையினர் எனக் கூறி ஏமாற்றி உள்ளனர் என அறிந்த மும்பை காவலர் லட்சுமணன் இதுகுறித்து பெரியகுளம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். புகாரை பெற்ற பெரியகுளம் காவல்துறையினர் பண இரட்டிப்பு மோசடியில் ஈடுபடும் கும்பலான ஆண்டிபட்டியைச் சேர்ந்த அஜித்குமார், திண்டுக்கல் மாவட்டம் தோட்டனுத்தைச் சேர்ந்த காவலர் நரேந்திரன், அதே ஊரைச் சேர்ந்த ராம்குமார் ஆகிய மூவரையும் கைது செய்து விசாரணை செய்தனர்.
₹35 லட்சம் மோசடி
அதில், பணத்துடன் செந்தில் மற்றும் சேகர்பாபு ஆகிய இருவரும் தப்பி ஓடியதாக தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து அந்த கும்பல் பயன்படுத்திய இரண்டு கார்களை பறிமுதல் செய்த காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, அஜித்குமார், நரேந்திரன்,ராம்குமார் ஆகிய மூவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்ற காவல் சிறையில் அடைத்தனர். மேலும் 35 லட்ச ரூபாய் பணத்துடன் தப்பி ஓடி உள்ள செந்தில் மற்றும் சேகர்பாபு ஆகிய இருவரையும் தனிப்படை அமைத்து காவல்துறையில் தேடி வருகின்றனர். இதில் கைது செய்யப்பட்ட நரேந்திரன் என்ற காவலர் கடந்த 2013ஆம் ஆண்டு தமிழ்நாடு காவல்துறையில் பணியில் சேர்ந்து திண்டுக்கல் மாவட்டத்தில் காவலராக பணியாற்றிய போது இது போன்ற குற்றச்சம்பவங்களில் தொடர்ந்து ஈடுபட்டதால் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications