கம்பத்தில் மையம் கொண்ட ஓபிஎஸ் குடும்பம்.. மனைவி, மருமகள் சகிதம் அதிரடி ஓட்டு வேட்டை
தேனியில் மகனுக்காக ஓபிஎஸ் மனைவி தீவிரமாக வாக்கு சேகரித்து வருகிறார்.
Recommended Video

தேனி: ஓபிஎஸ் ஊரில் இல்லை.. இருந்தாலும் மகனை எப்படியாவது வெற்றி பெற வைக்க அவரது மனைவி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறாராம்.
துணை முதல்வர் ஓபிஎஸ்சுக்கு தேனி தொகுதியில் வெற்றி பெறுவது என்பது கவுரவ பிரச்சனையாக எழுந்துள்ளது. கட்சி வேட்பாளர் தோற்பது வேறு, பெத்த மகனே தோற்பது வேறு.
அதனால் இருக்கும் மற்ற தொகுதிகள், வேட்பாளர்கள் எல்லாவற்றையும் ஒதுக்கி வைத்து விட்டுதான் தேனிக்குள்ளேயே ரவுண்டு கட்டி வந்தார் ஓபிஎஸ்.

அமமுக வேட்பாளர்
இதற்கு முக்கிய காரணம் பலமான வேட்பாளர்களை ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் இந்த முறை எதிர்கொள்வதுதான். அமமுக வேட்பாளர் தங்க தமிழ்செல்வன், காங்கிரஸ் சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன் எதிர்தரப்பில் போட்டியிடுகிறார்கள்.

தேவர் சமூகம்
இதை தவிர சாதீய ஓட்டுக்களும் மற்றொரு காரணமாக உள்ளது. தங்க தமிழ்செல்வன் கள்ளர் சமூகம் என்றால், ஓபிஎஸ் தேவர் சமூகத்தை சேர்ந்தவர். இந்த பகுதியில் கள்ளர் சமூக ஓட்டுக்களே அதிகம் என்பதால்தான் வேறு எந்த தொகுதிக்கும் போகாமல் ஓபிஎஸ் தேனியில் பிரச்சாரத்தை ஆரம்பித்தார்.

வாக்கு சேகரித்தார்
அப்போது குடும்பமே அவருடன் சென்று ரவீந்திரநாத்துக்காக ஓட்டு கேட்டது. மனைவி ஒரு பக்கம், மருமகள் ஒரு பக்கம் என தேனியை ஒரு இடம் பாக்கி இல்லாமல் வாக்கு சேகரிக்க ஆரம்பித்தனர். இப்போது கடந்த சில தினங்களாகத்தான் ஓபிஎஸ் மற்ற தொகுதிகளுக்கு பிரச்சாரம் செய்ய சென்றிருக்கிறார்.

கம்பத்தில் ஓட்டு சேகரிப்பு
இருந்தாலும் ஓபிஎஸ் மனைவி விஜயலட்சுமி, மருமகளுடன் வீதி வீதியாக சென்று விடாமல் வாக்கு சேகரித்து வந்து கொண்டிருக்கிறாராம்! இன்றுகூட கம்பத்தின் முக்கிய வீதிகளில் வாக்கு சேகரித்திருக்கிறார்! ஆக மும்முனை போட்டியில் தேனி தொகுதியே திக்குமுக்காடி வருகிறது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications