கிடைச்சதை விடக் கூடாது.. ஓபிஎஸ் ரவீந்திரநாத் குமாரின் அதிரடி திட்டங்கள்!
Recommended Video
தேனி: தேனி தொகுதியில் பெற்ற வெற்றி மட்டுமல்லாமல், லோக்சபா அதிமுக தலைவராகவும் திகழ்வது என்பதை தனக்குக் கிடைத்த மிகப் பெரிய கெளரவமாக, வாய்ப்பாக கருதுகிறாராம் ஓபிஎஸ் ரவீந்திரநாத் குமார்.
இந்த மாதிரியான வாய்ப்பு இதுவரை அதிமுகவில் யாருக்கும் கிடைத்ததில்லை. அப்படிப்பட்ட வாய்ப்பை மிகச் சிறப்பாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதிலும் அவர் தீவிரமாக உள்ளாராம்.
தேனி மக்களவைத் தொகுதியில் வெற்றி பெற்று அதிமுகவின் ஒன் மேன் ஆர்மியாக நாடாளுமன்றத்துக்கு சென்றவர் ஓ.பி.ரவீந்தரநாத்குமார்.

கடும் போட்டி
கடும்போட்டிக்கு மத்தியிலும், அதுவும் ஆளும் கட்சிக்கு எதிரான அதிருப்தியை கடந்தும் பல லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறார் இவர். தன்னை வெற்றி பெற வைத்த தொகுதி மக்களுக்கு தனது அதிகாரத்துக்குட்பட்டு செய்ய வேண்டிய அத்தனை கடமைகளையும் செய்ய வேண்டும் என நினைக்கிக்கிறார் ரவீந்தரநாத்.

எம்பி அலுவலகங்கள்
இதற்காக தேனி மக்களவைத் தொகுதிக்குட்பட்ட சட்டமன்ற தொகுதிகளில் எம்.பி.அலுவலகங்களை திறக்க உள்ளார். அங்கு பொதுமக்களிடம் இருந்து பெறும் மனுக்கள் மீதான நடவடிக்கைகள் மற்றும் பாலோ அப்களுக்காக நன்கு படித்த அறிவுசார்ந்த இளைஞர்களை பணியமர்த்தப் போகிறாராம்.

குறை தீர்ப்பு
மேலும் கணிணி மூலம் மக்கள் குறைகளை பதிவு செய்து அதில் தீர்வு கண்டது, தீர்வு காணவேண்டியது என அத்தனை தரவுகளையும் பதிவு செய்யவும் ஆட்களை இறக்கியுள்ளாராம். கட்சியினரை வைத்து இந்த வேலையை பார்க்கச் சொன்னால் சொதப்பி விடுவார்கள்.

தீவிர ஆலோசனை
அவர்கள் கமிஷன் அது இதுவென்று மக்கள் பணிகளில் தொய்வு காட்டுவார்கள் என தந்தையிடம் கூறிவிட்டாராம் ரவிந்தரநாத். அதனால் கிடைத்ததை கெட்டியாக பிடுத்துக்கொண்டு அடுத்தக்கட்டத்துக்கு செல்ல இப்போதே ரூம் போட்டு யோசித்து வருகிறார் அவர். எது எப்படியோ அதன் மூலம் மக்களுக்கு நல்லது நடந்தால் சரி.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications