அங்கன்வாடியில் 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! எரித்து கொன்ற கொடூரன்! தேனியை உலுக்கிய கொடூரம்
தேனி: சின்னமனூர் அருகே 7 வயது சிறுமி பாலியல் தொல்லைக்கு உட்படுத்தப்பட்டு தீ வைத்து எரித்துக் கொல்லப்பட்ட அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி உள்ளது.
நமது நாட்டில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதிலும் மைனர் சிறார்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் கடந்த சில ஆண்டுகளாகப் பல மடங்கு அதிகரித்து உள்ளது.
இந்நிலையில், தேனி மாவட்டத்தில் 7 வயது சிறுமி பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தேனி
தேனி சின்னமனூர் அருகே உள்ள எரசக்கநாயக்கனூர் பகுதியில் 17 வயது சிறுவன் ஒருவன் வசித்து வருகிறான். இந்த நபர் அதே பகுதியைச் சேர்ந்த 3ஆம் வகுப்பு படிக்கும் 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளான். இரு மாதங்களுக்கு முன்பு, அங்கன்வாடியில் அந்த 7 வயது சிறுமி விளையாடிக் கொண்டு இருந்துள்ளார். அப்போது அங்கு வந்த விஜயகுமார் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளான்.

அலறல் சத்தம்
இதனால் அந்த சிறுமி சத்தம் போட்டுள்ளார். இதனால் பயந்து போன அந்த சிறுவன் சிறுமியின் ஆடையில் தீ வைத்துள்ளார். சிறுமியின் அலறல் சத்தத்தைக் கேட்டு அவரை காப்பாற்றிய அக்கம் பக்கத்தினர் அவரை மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளித்து வந்தனர். கொடூரனின் இந்த செயலால் சிறுமியின் உடலில் 45% தீக்காயம் ஏற்பட்டு உள்ளது.

பலி
இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், போக்சோ சட்டத்தில் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்தச் சூழலில் கடந்த இரு மாதங்களாக மதுரை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த அந்த சிறுமி, சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கொலை வழக்கு
சிறுவன் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு இருந்தான். இரு மாதங்களாகச் சிகிச்சை பெற்று வந்த சிறுமி பரிதாபமாக உயிரிழந்துள்ள நிலையில், சிறுவன் மீதான பாலியல் பலாத்கார வழக்கை, கொலை வழக்காக மாற்றி வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். தேனியில் சிறுமி தீ வைத்து எரித்துக் கொல்லப்பட்ட இந்த அதிர்ச்சி சம்பவம் அதிரச் செய்துள்ளது.












Click it and Unblock the Notifications