உணவு விநியோக ஊழியர்களை போல் ஸ்கூட்டரில் சென்ற சாந்தி.. குவிந்த பணம்.. சிக்கியது எப்படி?
தேனி: கோட்டயம் மாவட்டம் சங்கனாச்சேரி நகரம் என்பது கோட்டயத்திற்கு அடுத்தபடியாக மிகவும் முக்கியமான ஊர் ஆகும். மிகவும் பரபரப்பான ரயில் நிலையமும் இங்கு அமைந்துள்ளது. திருவனந்தபுரம்- கொச்சின் வழித்தடத்தில் உள்ள முக்கிய நகரம் ஆகும். சங்கனாச்சேரியில் உள்ள மைத்ரி நகரை சேர்ந்த 35 வயதாகும் சாந்தி என்பவர் உணவு விநியோகம் செய்யும் தனியார் நிறுவனங்களை போன்று செல்போனில் ஆர்டர் எடுத்து தடை செய்யப்பட்ட பொருட்களை விற்றதாக கைதாகி உள்ளார்.. எப்படி சிக்கினார் என்பதை பார்ப்போம்
இன்றைக்கு வீட்டில் உட்கார்ந்து கொண்டே தரமான உணவகங்களில் உணவுகளை வரவழைத்து சாப்பிட முடியும். அதேபோல் வீட்டில் இருந்தபடியே சமையலுக்கு தேவையான பொருட்களை வாங்க முடியும்.. மதுபானத்தை தவிர எல்லாவற்றையும் வாங்கிவிட முடியும். தற்போதைய நிலையில் இந்த மாற்றங்கள் நகர்புற மக்களை தாண்டி கிராமப்புற மக்களையும் சென்றடைந்து வருகிறது. இந்த வேலையில் பலர் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்நிலையில் வாடிக்கையாளர்களை செல்போனில் தொடர்பு கொண்டு தடை செய்யப்பட்ட புகையிலை உள்பட போதை பொருட்களை ஸ்கூட்டரில் சென்று விற்பனை செய்து வந்த இளம்பெண் கேரளா மாநிலம் கோட்டயம் அருகே சங்கனாச்சேரி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் குறித்து பார்ப்போம்.
கோட்டயம் மாவட்டம் சங்கனாச்சேரி நகரம் என்பது கோட்டயத்திற்கு அடுத்தபடியாக மிகவும் முக்கியமான ஊர் ஆகும். மிகவும் பரபரப்பான ரயில் நிலையமும் இங்கு அமைந்துள்ளது. திருவனந்தபுரம்- கொச்சின் வழித்தடத்தில் உள்ள முக்கிய நகரம் ஆகும். சங்கனாச்சேரியில் உள்ள மைத்ரி நகரை சேர்ந்த 35 வயதாகும் சாந்தி என்பவர் உணவு வினியோகம் செய்யும் தனியார் நிறுவனங்களை போன்று செல்போனில் ஆர்டர் எடுத்து தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் உள்ளிட்ட போதை பொருட்களை வாடிக்கையாளர்கள் கூறும் இடத்திற்கு சென்று விநியோகம் செய்து வந்திருக்கிறார். இதனை இவர் மிகவும் ரகசியமாக செய்து வந்தாராம்.
இந்த நிலையில் சங்கனாச்சேரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் போதை பொருட்களுடன் அடுத்தடுத்து சிலர் சிக்கினர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் சாந்தியின் இந்த செயல்பாடு போலீசார் கண்டுபிடித்தனர். இதையடுத்து அவரை கோட்டயம் மாவட்ட போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் மற்றும் சங்கனாச்சேரி போலீசார் ரகசியமாக கண்காணித்து வந்தனர். அப்போது அவர் தனது ஸ்கூட்டரில் சென்று போதைப் பொருட்களை விற்பனை செய்து வந்தது உறுதி செய்தனர்.
இதையடுத்து சாந்தியின் வீட்டில் போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் மற்றும் போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள். அப்போது வீட்டின் கழிவறையில் 2 பைகளில் பதுக்கி வைத்திருந்த தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் சிக்கின. அந்த புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் சாந்தியை பிடித்து விசாரணை நடத்தினார்கள்.
விசாரணையில் புகையிலை, போதை பொருட்களை ஸ்கூட்டரில் கொண்டு சென்று 4 மடங்கு அதிக விலைக்கு விற்பனை செய்து வந்துள்ளார். அவர் ஒப்புக்கொண்டார். இதையடுத்து சாந்தி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். உணவு வினியோக நிறுவன ஊழியர்களை போன்று செல்போனில் ஆர்டர் எடுத்து போதை பொருட்களை விநியோகித்து வந்த சாந்தி சிக்கி கொண்டிருப்பது சங்கனாச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை












Click it and Unblock the Notifications