தமிழக அரசு ஊழியர்களுக்கு நல்ல சேதி வருமா.. 36 மணி நேர உண்ணாவிரதத்தை கையிலெடுத்த சத்துணவு பணியாளர்கள்
தேனி: இன்றும் நாளையும் மொத்தம் 36 மணி நேரம், சென்னையில் உண்ணாவிரத போராட்டத்தை சத்துணவு பணியாளர்கள் கையில் எடுத்துள்ளனர். என்ன காரணம்?
காலை உணவுத்திட்டத்தை சத்துணவு ஊழியர்கள் மூலம் நிறைவேற்ற வேண்டும், காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் வலியுறுத்தப்பட்டு வருகிறது.

போராட்டம்: இதுதொடர்பான போராட்டங்களையும், அச்சங்கத்தினர் அவ்வப்போது முன்னெடுத்து வருகின்றனர்.. இந்நிலையில், மீண்டும் போராட்டத்தை நடத்த போவதாக கடந்த வாரம் அறிவித்திருந்தனர்.
சங்கத்தின் மாநில தலைவர் சந்திரசேகரன் செய்தியாளர்களிடம் பேசியபோது, "காலை உணவுத்திட்டத்தை சத்துணவு ஊழியர்கள் மூலம் நிறைவேற்ற வேண்டும், காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்திவருகிறோம்.
காலமுறை ஊதியம்: பள்ளிகளில் காலை உணவுத்திட்டத்தில் சத்துணவுப்பணியாளர்களை கொண்டு செயல்படுத்தவும், சத்துணவு பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம், அகவிலைப்படியுடன் கூடிய குடும்ப ஓய்வூதியம் வழங்கவும், கல்வி தகுதிக்கேற்ப பதவி உயர்வு காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறோம்..
அடுத்ததாக சென்னை சமூக நலன், மகளிர் உரிமைத்துறை இயக்குனர் அலுவலகம் முன் செப்டம்பர் 29,30ல் 36 மணி நேர உண்ணாவிரதம் நடத்த உள்ளோம். ... டிசம்பர் முதல் அங்கன்வாடி பணியாளர்கள் கூட்டமைப்புடன் இணைந்து காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளோம் என்று அறிவித்துள்ளார்.

கோரிக்கைகள்: தங்கள் கோரிக்கைகள் எதையுமே மாநில அரசு நிறைவேற்றவில்லை என்று அரசு ஊழியர்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார்கள்.. அதேபோல, தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர்கள் கூட்டணி இன்று, சென்னையில் 10,000 ஆசிரியர்களை திரட்டி கோட்டை நோக்கி பேரணியை அறிவித்துள்ளது..
பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவையும் ஆசிரியர்கள் தமிழக முதல்வர் ஸ்டாலினிடம் தர உள்ளனர். இப்போது, சத்துணவு துறையும் போராட்டத்தில் இறங்கி உள்ளது, திமுக அரசுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தி வருகிறது.
-
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு












Click it and Unblock the Notifications