தேனியில் தாசில்தார், சர்வேயர், விஏஓ.. அரசு அதிகாரிகளுக்கு புதிய வழியில் பாடம் புகட்டிய விவசாயி
தேனி: நிலத்தை அளவீடு செய்து கொடுக்காத அதிகாரிகளுக்கு எதிராக சின்னமனூர் அருகே உள்ள மூர்த்திநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் ராஜேஷ் என்பவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். தனது நிலத்தை பட்டா மற்றும் பத்திரத்தில் உள்ளபடி நில அளவை செய்து, அத்துமால் செய்து கொடுக்காமல் தாமதித்த நில அளவைத் துறை உதவி இயக்குனர், உத்தமபாளையம் தாசில்தார், தலைமை நில அளவையர், ஓடைப்பட்டி நில அளவையர், கிராம நிர்வாக அலுவலர் ஆகியோருக்கு பாடம் புகட்டியுள்ளார்.
ஒரு நிலத்தை விற்பனை செய்வதற்கும், அதை தனித்தனியாக பிரித்து அளவீடு செய்து வீட்டுமனைகளாக விற்பதற்கும், டிடிசிபி அங்கீகாரம் பெறுவதற்கும், வீட கட்டுவதற்கும், வீடு கட்ட கடன் வாங்குவதற்கும் நிலத்தின் உண்மையான அளவு என்ன.. பத்திரத்தில் உள்ள அளவு என்ன.. பட்டாவிற்கு உள்ள அளவு என்ன.. என்பதை அறிவதற்கு நிலத்தை அளவீடு செய்வது என்பது மிகவும் முக்கியம். ஆனால் நிலத்தை அளவீடு செய்வதற்கு இசேவை மையத்தில் விண்ணப்பிக்க வேண்டும்..

அப்படி விண்ணப்பித்தாலும் சில நேரங்களில் அதிகாரிகள் லஞ்சம் வாங்குவதும் நடக்கிறது. அதேநேரம் சில சமயங்களில் தாமதம் ஏற்படுகிறது.. இதனால் அலைகழிக்கப்படும் விவசாயிகள் கடைசியில் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்து நிவாரணம் பெறுகிறார்கள்.. தேனியில் ஒரு விவசாயி நிலத்தை அளவீடு செய்து கொடுக்காததால் இழப்பீடு கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து நிவாரணமும் பெற்றுள்ளார்.
தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள மூர்த்திநாயக்கன்பட்டியை சேர்ந்த 47 வயதாகும் ராஜேஷ் என்பவர் விவசாயி ஆவார். இவர், பத்து ரூபாய் இயக்கத்தின் மாவட்ட இணைச் செயலாளராக இருக்கிறார். இவர் தனது நிலத்தை பட்டா மற்றும் பத்திரத்தில் உள்ளபடி நில அளவை செய்து, அத்துமால் செய்து கொடுக்குமாறு நில அளவைத்துறையில் மனு கொடுத்திருக்கிறார்.
ஆனால் அவருக்கு அத்துமால் செய்து கொடுக்காமல் தாமதித்தனர். அரசு உயர் அதிகாரிகளுக்கு மனு கொடுத்தும் தீர்வு கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து அவர் தேனி மாவட்ட நுகர்வோர் கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார்கள். அதில், நில அளவைத் துறை உதவி இயக்குனர், உத்தமபாளையம் தாசில்தார், தலைமை நில அளவையர், ஓடைப்பட்டி நில அளவையர், கிராம நிர்வாக அலுவலர் ஆகியோரை எதிர்மனு தரப்பினர்களாக குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு தேனி நுகர்வோர் நீதிமன்ற நீதிபதி சுந்தர், உறுப்பினர் சவுந்திரராஜன் ஆகியோர் கொண்ட அமர்வில் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணை முடிவில் கோர்ட்டு ஒரு உத்தரவை பிறப்பித்தது. அதில், "மனுதாரர் ராஜேசுக்கு பாத்தியப்பட்ட சொத்தை, எதிர்தரப்பினர் அத்துமால் அளவீடு செய்து அறிக்கை மற்றும் வரைபடத்தை ஒரு மாத காலத்திற்குள் வழங்க வேண்டும். எதிர்தரப்பினர்களின் சேவை குறைபாட்டினால் ஏற்பட்ட மன உளைச்சல் மற்றும் மன வேதனைக்கு இழப்பீடாக ரூ.30 ஆயிரத்தை ஒரு மாத காலத்துக்குள் செலுத்த வேண்டும். வழக்கு செலவுத் தொகையாக ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும்" என்று கூறியிருந்தார்.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications