எட்டி பார்க்காத நிர்வாகிகள்! கடும் அப்செட்டில் கம்பம் ராமகிருஷ்ணன்! தேனி மாவட்ட திமுக ரவுண்ட் அப்!
தேனி: தேனி தெற்கு மாவட்ட திமுக செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள கம்பம் ராமகிருஷ்ணனை நிர்வாகிகள் யாரும் பெரியளவில் சந்தித்து வாழ்த்து தெரிவிக்காததால் கடும் அப்செட்டில் இருந்து வருகிறார்.
உள்ளூர் அரசியலில் இருக்கும் கடும் எதிர்ப்பையும் மீறி தலைமை அவருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கியதால் ஏற்பட்ட அதிருப்தியின் வெளிப்பாடாக, இந்த விவகாரம் பார்க்கப்படுகிறது.
இதனிடையே தேனி வடக்கு மாவட்ட திமுக செயலாளராக தேர்வாகியுள்ள தங்க.தமிழ்ச்செல்வனை கட்சி நிர்வாகிகள் தொடர்ந்து சந்தித்த வண்ணம் இருக்கின்றனர்.

தேனி மாவட்டம்
தேனி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் பதவிக்கு கடும் போட்டி நிலவியது. நீயா நானா என கம்பம் ராமகிருஷ்ணனும், ஜெயக்குமாரும் ஒருவருக்கு ஒருவர் மோதினர். ஜெயக்குமார் தரப்பு வலிமையான டீமை கையில் வைத்திருந்ததால் அறிவாலயம் நிர்வாகிகள் அவரை சமாதானம் செய்து போட்டியிலிருந்து ஒதுங்க வைத்தனர். ஸ்டாலினுக்காக அந்த சமாதானத்தை ஏற்றுக்கொண்டு ஊர் திரும்பினார் தேனி மாவட்ட திமுக முன்னாள் பொறுப்பாளர் ஜெயக்குமார்.

கம்பம் ராமகிருஷ்ணன்
இதையடுத்து தனக்கு ரூட் கிளியரானதும் மேலிட லாபி மூலம் தேனி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் பதவியை கைப்பற்றினார் கம்பம் ராமகிருஷ்ணன். மாவட்டச் செயலாளராக அறிவிக்கப்பட்டுள்ள கம்பம் ராமகிருஷ்ணனை கட்சியின் அனைத்து மட்ட நிர்வாகிகளும் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவரது ஆதரவாளர்களை தவிர கட்சியினர் பெரும்பாலானோர் எட்டிக்கூட பார்க்கவில்லையாம்.

தலைமை அறிவுறுத்தல்
இதனால் மாவட்டச் செயலாளர் ஆகியும் அவர் கடும் அப்செட்டில் இருந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. ஆனால் அதே வேளையில் தேனி வடக்கு மாவட்ட திமுக செயலாளராக அறிவிக்கப்பட்டுள்ள தங்க தமிழ்ச்செல்வனை கட்சியினர் சந்தித்து வாழ்த்துக் கூறி வருகின்றனர். அதிருப்தியில் இருப்பவர்களை சரிகட்டி சமாதானம் செய்து அவர்களுடன் இணைந்து பயணிக்க வேண்டும் என்ற அறிவுறுத்தலை வழங்கி தான் கம்பம் ராமகிருஷ்ணனை ஊருக்கு அனுப்பி வைத்திருக்கிறது கட்சித் தலைமை.

தங்க.தமிழ்ச்செல்வன்
தங்க.தமிழ்ச்செல்வனுக்கும் ஆரம்பத்தில் கடும் எதிர்ப்பு இருக்கத்தான் செய்தது. ஆனால் தன்னை எதிர்ப்பவர்களிடம் இறங்கி வந்து சமாதானம் பேசி தேவையானவற்றை செய்துக் கொடுத்து சாதுர்யமாக சரிகட்டிக் கொண்டார். இதனிடையே ஒன்றிய, நகரச் செயலாளர் பதவிகள் தொடர்பான பஞ்சாயத்துக்களும் இன்னும் ஓய்ந்தபாடில்லை.
-
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
மதிமுகவை சேர்க்காதீங்கன்னு படிச்சு படிச்சு சொன்னேன், கேட்டீங்களா.. திமுக முன்னாள் நிர்வாகி ஆதங்கம்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications