தேனியில் அரசு மருத்துவமனை எதிரே.. ஸ்டீல் கட்டிலுடன் வயதான தாயை நடு ரோட்டில் உட்கார வைத்த மகன்.. பரபர
தேனி: தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தேனி, திண்டுக்கல், மதுரை மற்றும் கேரள மாநிலத்தில் இருந்து சராசரியாக 2000க்கும் மேற்பட்ட நோயாளிகள் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களை தவிர நாள்தோறும் 3 ஆயிரத்திற்கும் அதிகமான புறநோயாளிகள் இங்கு சிகிச்சை பெற்று செல்கின்றனர். அந்தவகையில், எந்நேரமும் பரபரப்பாக இயங்கி கொண்டிருக்கும் இந்த மருத்துவமனை அருகில்தான், நேற்று இந்த சம்பவம் நடந்துள்ளது.. இது தொடர்பான வீடியோவும் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.
சமீபத்தில் நெல்லை மாவட்டத்திலும் ஒருகொடுமை நடந்தது.. நாங்குநேரி அடுத்த வடக்கு மீனவன்குளத்தைச் சேர்ந்த சிவகாமியம்மாள் என்ற மூதாட்டிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது.. எனவே நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.. அவரை கவனித்துக்கொள்ள அவரது இளைய மகனான பாலன் உடனிருந்தார்.

மனநலம் பாதிப்பு
ஆனால், இவர்கள் இருவருமே சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் என்று கூறப்படுகிறது.. சம்பவத்தன்று, சிவகாமியம்மாளை மருத்துவமனையிலிருந்து வெளியே அழைத்து வந்துள்ளார் பாலன்.. மருத்துவமனை எதிரிலிருந்த கோவில் வளாகத்தில் காபி வாங்கி அம்மாவுக்கு தந்துள்ளார். ஆனால், சிவகாமியம்மாவால் அதை குடிக்க முடியவில்லை.. சிறிது நேரத்தில் இறந்துவிட்டார்.
உடனே பாலன், சடலத்தை என்ன செய்வதென்று தெரியாமல் தாயின் சடலத்தை தன்னுடைய சைக்கிளில் வைத்து கட்டி சொந்த ஊருக்கு தள்ளிச்சென்றார்.. மருத்துவமனையிலிருந்து 18 கிலோமீட்டர் தூரத்துக்கு, அம்மாவின் உடலை சைக்கிளின் பின்புறம் கேரியரில் வைத்து கட்டி, உருட்டியபடியே சென்றதை கண்டு பொதுமக்கள் அதிர்ச்சியுடன் கலங்கி பார்த்தனர்.
மருத்துவமனை நிர்வாகம்
சிவகாமியம்மாள் மருத்துவமனையை விட்டு வெளியேறிய பின்பு உயிரிழந்தாரா அல்லது மருத்துவமனையில் இருந்து வெளியேறும் முன்பே உயிரிழந்தாரா என்பது உறுதி செய்யப்படாததால் மருத்துவமனை நிர்வாகம் சிசிடிவி பதிவுகளை வெளியிட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியிருந்தது நினைவிருக்கலாம்.
இந்நிலையில், தேனி மாவட்டத்தில் நேற்று ஒரு சம்பவம் நடந்துள்ளது.. ஆண்டிப்பட்டி அருகே உள்ளது கோவில்பட்டி என்ற கிராமம்.. இங்கு வசித்து வருபவர் தங்கவேல்... இவரது மனைவி முத்துப்பிள்ளை... உடலில் வலு இருந்தவரை உழைத்து சாப்பிட்டு வந்தார்.. ஆனால், தற்போது அவருக்கு 80 வயதாகிவிட்டதால், எந்த வேலையும் செய்ய முடியாத நிலைமைக்கு ஆளானார்.
எனவே, தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் யாசகம் பெற்று வந்தார் முத்துப்பிள்ளை.. இவரது மகன் ராஜேந்திரனுக்கு மன நலம் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
கட்டிலோடு முத்துப்பிள்ளை
இந்நிலையில் தேனி மருத்துவமனை வளாகத்தில் முத்துப்பிள்ளை கட்டிலில் உட்கார்ந்திருந்தார்.. அப்போது அங்கு வந்த ராஜேந்திரன், முத்துப்பிள்ளையை கட்டிலோடு தரதரவென இழுத்துக்கொண்டு ரோட்டுக்கு வந்தார்.. மருத்துவமனை முன்பு, தேனி-மதுரை சாலையின் நடுவில், கட்டிலை இழுத்துவந்து விட்டார்.. ஆனால், முத்துப்பிள்ளையால் எழுந்து நடக்க முடியவில்லை.. அதனால் ரோட்டில் கட்டிலிலேயே உட்கார்ந்திருக்கும் நிலைமை ஏற்பட்டது.
நடுரோட்டில் கட்டிலுடன் உட்கார்ந்திருந்த இந்த மூதாட்டியை பார்த்து, வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்தனர். உடனே இதுகுறித்து க.விலக்கு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சாலையில் உருண்ட ராஜேந்திரன்
அதன் பேரில் போலீசார் அங்கு விரைந்து வந்து, முத்துப்பிள்ளையை பத்திரமாக மீட்டு, சாலையோரம் இருந்த மரத்தடியில் உட்கார வைத்தனர்.. ஆனால் அதற்குள் அங்கு வந்த ராஜேந்திரன், திடீரென சாலையில் நடுவில் படுத்துக்கொண்டார்.. உடனே போலீசார் அவரையும் வலுக்கட்டாயமாக இழுத்து வந்து சாலையோரம் உட்கார வைத்தனர்..
வாகன ஓட்டிகள் இந்த சம்பவங்களை எல்லாம் வேடிக்கை பார்த்தவாறே நின்றனர்.. இதற்கு பிறகுதான், அப்பகுதி மக்கள், அந்த தாய் - மகன் குறித்து போலீசில் சொன்னார்கள்..
அடித்து துன்புறுத்தல்
அதாவது, மனநலம் பாதிக்கப்பட்ட ராஜேந்திரன், தன்னுடைய அம்மாவை எந்நேரமும் அடித்து துன்புறுத்துவாராம்.. தடுக்க செல்பவர்களையும் அருகில் நெருங்க விடுவதில்லையாம்.. உடனே இதைக்கேட்ட போலீசார், முத்துப்பிள்ளையை முதியோர் காப்பகத்திற்கும், மனநலம் பாதித்த ராஜேந்திரனை மனநல காப்பகத்திற்கும் அனுப்பும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
பொதுமக்கள் நடமாட்டம், போக்குவரத்து நெரிசல் அதிகம் உள்ள பகுதியில் நடந்த இச்சம்பவம் பலருக்கும் மன வேதனை ஏற்படுத்தி வருகிறது.. நடுரோட்டில் கட்டிலோடு வயதான தாயை உட்கார வைத்த சம்பவம், வீடியோவாகவும் இணையத்தில் பரவி வருகிறது.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர் -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி












Click it and Unblock the Notifications