மர்ம உறுப்பை.. மிதித்தே கொன்ற பரிதாப "கிருஷ்ணவேணி".. காட்டிக்கொடுத்த கீறல்.. தூக்கி வாரிப்போட்ட தேனி
தேன்: மர்ம உறுப்பை மிதித்து மட்டுமல்ல, கடித்தும் கொன்றிருக்கிறார் பாதிக்கப்பட்ட பெண்.. என்ன நடந்தது தேனி மாவட்டத்தில்?
தேனி மாவட்டம் போடி ஜீவாநகரை சேர்ந்தவர் ரமேஷ். 47 வயதாகிறது.. இவரது மனைவி பெயர் கிருஷ்ணவேணி.. 35 வயதாகிறது.. இவர்களுக்கு திருமணமாகி 20 வருடங்களாகின்றன. 1 மகனும், 1 மகளும் இருக்கிறார்கள்.

கேரள மாநிலம்: ரமேஷூக்கு சற்று வசதியான குடும்பம்.. சொந்தமாகவே, கேரள மாநிலம் உடும்பன் சோலையில், ஒரு ஏலக்காய் தோட்டத்தை வைத்து, விவசாய பணிகளை கவனித்து வந்துள்ளார். அதேபோல, உடும்பஞ்சோலையில் தங்கி பெயிண்ட் அடிக்கும் வேலை பார்த்து வருவதாகவும் சொல்கிறார்கள்.
எனினும், வேலை நிமித்தமாக பெரும்பாலும் கேரளாவிலேயே இவர்கள் தங்கியிருப்பதாக சொல்கிறார்கள். அதேசமயம், தம்பதி இடையே மனக்கசப்பும், கருத்து வேறுபாடுகளும் நிலவிவந்த நிலையில், இது தகராறாகவும், சண்டையாகவும் வெடித்து வந்துள்ளது. இவர்களது மகன் கார்த்திக், போடியில் வீடு எடுத்து தங்கி படித்து வந்துள்ளார். தீபாவளிக்காக தம்பதி இருவரும், மகனை பார்க்க போடி வீட்டிற்கு வந்து தங்கியிருக்கிறார்கள்.
கிருஷ்ணவேணி: இந்நிலையில், நேற்று திடீரென, அரசு மருத்துவமனைக்கு, ரமேஷை அழைத்து வந்திருந்தார் கிருஷ்ணவேணி.. வீட்டில் தற்கொலைக்கு ரமேஷ் முயன்றதாகவும், உடனே, விரைந்து சென்று ரமேஷை தான் காப்பாற்றியதாகவும் கிருஷ்ணவேணி பதறிப்போய் சொன்னார்.. ஆனால், ரமேஷின் நிலைமை படுமோசமாக இருந்தது..
உயிருக்கு ஆபத்தான நிலையில்தான், கிருஷ்ணவேணி அவரை கொண்டுவந்திருந்தார். எனினும் டாக்டர்கள் போராடி பார்த்தும், ரமேஷை காப்பாற்ற முடியவில்லை.. அவரது கழுத்து, மூக்கு, தோள்பட்டை என பல இடங்களில் உடம்பெல்லாம் ரத்த காயங்கள் காயங்கள் இருந்தன.. அதிலும், மர்ம உறுப்பில் இன்னும் பலமான காயங்கள் காணப்பட்டன. உடலில் நகக்கீறல்களும் நிறைய இருந்தன..
சடலம்: இதையெல்லாம் பார்த்த மருத்துவமனை நிர்வாகம், உடனடியாக போலீசுக்கு தகவல் சொன்னது. போலீசாரும் விரைந்து வந்து சடலத்தை பார்வையிட்டனர்.. இதனிடையே, ரமேஷின் அம்மா அழகம்மாள், மகனின் சந்தேகத்தில் மர்மம் இருப்பதாக புகார் தந்தர். அடுத்த நிமிடமே, போலீசாரின் விசாரணை வளைத்துக்குள் கொண்டுவரப்பட்டார் கிருஷ்ணவேணி.

தினமும் கிருஷ்ணவேணிக்கு பாலியல் தொல்லை தந்து வந்தாராம் ரமேஷ்.. ஏற்கனவே 2 குழந்தைகள் இருப்பதால், தொடர்ந்து அதற்கு மறுப்பு சொல்லியும், ரமேஷ் கேட்கவில்லையாம்.. தினம் தினம் டார்ச்சர் அதிகமாகி உள்ள நிலையில், சம்பவத்தன்றும் கிருஷ்ணவேணியிடம் உறவுகொள்ள முயன்றிருக்கிறார். அப்போது, அவரை கோபத்தில் தாக்கி கீழே தள்ளிவிட்டு, கடுமையாக தாக்கியிருக்கிறார்.. அப்போதும் ஆத்திரம் அடங்காமல், மர்ம உறுப்பை மிதித்தும், கடித்தும் கொன்றிருக்கிறார்.
அதிரடி கைது: அனைவரையும் நம்ப வைக்க வேண்டும் என்பதற்கக, தூக்கு போட்டதுபோல செட்டப் செய்தாராம்.. இவ்வளவும் போலீசாரிடம் வாக்குமூலமாக தந்துள்ளார் கிருஷ்ணவேணி.. கணவரின் உடம்பெல்லாம் ரத்தக்கீறல்களும், காயங்களும், மனைவியை காட்டிக் கொடுத்துள்ள நிலையில், கிருஷ்ணவேணியை சிறையில் தள்ளியுள்ளனர் போலீசார்.












Click it and Unblock the Notifications