தேனி அருகே கறிக்கடை வாசலில் தொப்புனு விழுந்த உருவம்.. தெறித்தோடி மக்கள்.. ஆடிப்போன மட்டன் கடைக்காரர்
தேனி: ஓசியில் கறி கிடைக்காத காரணத்தினால், சுடுகாட்டில் புதைக்கப்பட்ட பெண் சடலத்தை கறிக்கடை முன்பு வீசி சென்ற பயங்கரம் தேனியில் நடந்துள்ளது.
தேனி மாவட்டம் தேனி அருகே உள்ளது பழனிச்செட்டிப்பட்டி.. இங்கு கறிக்கடை வைத்து நடத்தி வருபவர் மணியரசன். இவரது கறிக்கடைக்கு சுடுகாட்டில் வேலை பார்க்கும் குமார் என்பவர் வழக்கமாக கறி வாங்கி செல்பவர் ஆவார்.. அடிக்கடி வந்து செல்வதால், அவருக்கு மணியரசன் இலவசமாக கறி கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.

ஓசி கறி: நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால், காலையிலேயே, கூட்டம் அதிகமாக இருந்தது.. அவர்கள் ஒவ்வொருவருக்காக மணியரசன் கறியை வெட்டிக் கொடுத்துக் கொண்டிருந்தார். அப்போது கறிக்கடைக்கு குமார் வந்திருக்கிறார்.. மணியரசனை மிரட்டி இலவசமாக கறி வேண்டும் என்று கேட்டுள்ளார். கூட்டம் அதிகமாக இருந்தால், இலவச கறியை உடனே தர முடியாது என்று மறுத்துள்ளார்.. இதனால் 2 பேருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது..
பிறகு அங்கிருந்து கிளம்பிச் சென்ற குமார், கொஞ்ச நேரத்திலேயே சுடுகாட்டில் புதைக்கப்பட்டிருந்த பெண் சடலத்தை எடுத்து வந்து கடையின் முன்பு போட்டுவிட்டு போய்விட்டார்.. சடலத்தை பார்த்ததுமே அங்கிருந்தவர்களும், கடைக்கு வந்தவர்களும் அலறியடித்து கொண்டு ஓடினார்கள்.. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
விசாரணை: தகவலறிந்து வந்த பழனிசெட்டிபட்டி போலீசார், சடலத்தை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.. அந்த .சடலம் யாருடையது,? எங்கிருந்து எடுத்துவரப்பட்டது? என்பது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அத்துடன், குமாரை போலீஸ் ஸ்டேஷனக்கு அழைத்து வந்து விசாரணையும் நடத்தி வருகின்றனர். கறிக்கடை முன்பு, ஓசிக்கறிக்காக, சுடுகாட்டிலிருந்து சடலத்தை தோண்டி எடுத்து வந்து, கடை முன் வீசிய சம்பவம், தேனியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சுடுகாட்டிலிருந்து கொண்டு வந்த சடலம், எலும்புக்கூடாக இருந்ததாம்.. சிவப்பு புடவையை கயிற்றால் கட்டப்பட்டு, எலும்புக்கூடாக காட்சியளித்தது..

அதைக் கொண்டுவந்து கறிக்கடைக்கு முன்பு சடலத்தை வீசியதுமே, பொதுமக்கள் தலைதெறிக்க ஓடினார்கள். ஆனால், அவர்களை பொருட்படுத்தாத குமார், மணியரசனிடம் மறுபடியும் குறி வேண்டும் என்று கேட்டாராம். அதற்கு பிறகே பழனிச் செட்டிபட்டி போலீஸாருக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. உடனடியாக வந்த போலீஸார் குமார் எடுத்துவந்த சடலத்தைக் கைப்பற்றி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
மயானம் : இதுகுறித்து போலீஸ் தரப்பில் சொல்லும்போது, "குமார் போதைக்கு அடிமையாகி மனநலம் பாதிக்கப்பட்டிருக்கிறார். சில வருடங்களுக்கு முன்பு, இதே கறிக்கடையில் வேலை பார்த்திருக்கிறார். கடைக்கு சரியாக வராமல் மயானத்திலேயே வேலை செய்து கொண்டு குடித்துக்கொண்டு சுற்றி வந்துள்ளார்.. அதனடிப்படையில்தான் கறிக்கடையில் வந்து கறி கேட்டு பிரச்சனை செய்திருக்கிறார். அவரிடம் விசாரித்து, இறுதியாக நடவடிக்கை எடுப்பது குறித்து முடிவெடுக்கப்படும்" என்றனர்.












Click it and Unblock the Notifications