அப்பதான்.. பீடியை எடுத்து வாயில் வச்சாரு பழனிசாமி.. ஒரே வெட்டாக வெட்டிய அலெக்ஸ்.. காரணம் "இது"தான்!
தேனியில் இளைஞர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது
தேனி: அப்பதான் மரத்தடியில் உட்கார்ந்து பீடியை எடுத்து பத்த வெச்சார் பழனிசாமி.. அவரை அரிவாளால் ஒரே வெட்டாக வெட்டிவிட்டார் அலெக்ஸ்.. காரணம், பீடி பிடித்த பழனிசாமி பட்டியல் இன சமுதாயத்தை சேர்ந்தவர் என்பதால்!
தேனி மாவட்டம் போடி அருகே உள்ளது டொம்புச்சேரி என்ற கிராமம்... இங்கு பல்வேறு சமுதாய மக்கள் வசித்து வருகிறார்கள்..
அந்த வகையில், பட்டியல் இன சமுதாய மக்களும் இங்கு உண்டு.. இவர்களுக்கும் மற்றொரு சமுதாய மக்களுக்கும் அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டு வருமாம்.

பிரச்சனை
பல சமயங்களில் இவர்கள் இரு தரப்பினரும் தாக்க கொள்வதும் நடக்குமாம்.. அந்த வகையில் இப்போதும் ஒரு சம்பவம் நடந்துள்ளது.. டொம்புச்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் அலெக்ஸ்பாண்டியன்.. 24 வயதாகிறது.. இவர் பட்டியல் இன சமுதாய மக்கள் வசிக்கும் பகுதிக்கு அடிக்கடி செல்வாராம்.. அங்கு தேவையில்லாமல் பிரச்னைகளை ஏற்படுத்தியும் வந்துள்ளார்.

அலெக்ஸ்
சம்பவத்தன்றும், அந்த பகுதிக்குள் நுழைந்துள்ளார் அலெக்ஸ்பாண்டியன்.. அப்போது பழனிசாமி என்பவர் ஒரு மரத்தடியில் உட்கார்ந்து பீடி பற்ற வைத்தார்.. பழனிச்சாமிக்கு 45 வயசாகிறது.. அவர் கையில் உள்ள பீடி பார்த்தததும், அவருக்கு பக்கத்தில் அலெக்ஸ் பாண்டியனும் போய் உட்கார்ந்து கொண்டார்.. தனக்கும் பீடி வேண்டும் என்று கேட்கவும், பழனிசாமியும் தன்னிடம் இருந்த பீடியை அவருக்கு தந்துள்ளார்.

அரிவாள்
அந்த பீடியை வாங்கி பற்றவைத்த அலெக்ஸ்பாண்டியன், திடீரென மறைத்துவைத்திருந்த அரிவாளை எடுத்தார்.. "உனக்கு எவ்ளோ தைரியம் இருந்தா, என் முன்னாடி சரிக்கு சமமா பீடி குடிப்பியா?" என்று கேட்டுக் கொண்டே அரிவாளை எடுத்து பழனிசாமியை வெட்டினார்.. அவரை வெட்டும்போது, பழனிச்சாமியின் சமுதாயத்தை பற்றியும் இழிவாக பேசி, அரிவாளாலேயே தாக்கியுள்ளார்...

கைது
இதில், முகம், காது, கழுத்து, கை, வயிறு, மார்பு பகுதிகளில் அரிவாள் வெட்டு விழுந்து, ரத்தம் கொட்ட ஆரம்பித்தது.. இதை பார்த்ததும் அக்கம் பக்கத்தினர், பழனிச்சாமியை உடனடியாக மீட்டு ஆஸ்பத்திரிரயில் அனுமதித்தனர். இச்சம்பவம் தொடர்பாக பழனிசெட்டிபட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து அலெக்ஸ்பாண்டியனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்..!
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications