தேனி பெண் லவ் பஞ்சாயத்து.. சிறுவன் கடத்தலில் பூவை ஜெகன்மூர்த்திக்கு தொடர்பு? நாளை என்னாகுமோ: பிரபலம்
தேனி: கடத்தல் வழக்கில் புரட்சிப் பாரதம் கட்சி தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான பூவை ஜெகன்மூர்த்தி முன்ஜாமீன் கோரி தாக்கல் செய்த அவசர வழக்கை நாளை அதாவது ஜூன் 16 ம்தேதி விசாரிப்பதாக சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து மூத்த பத்திரிகையாளர் தமிழா தமிழா பாண்டியன் தன்னுடைய கருத்தை கூறியிருக்கிறார்.
திருவள்ளூர் மாவட்டம் களம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த இளைஞர், தேனியை சேர்ந்த பெண் ஒருவரை காதலித்து பதிவு திருமணம் செய்துள்ளார்.
இதில் பெண்ணின் வீட்டாருக்கு ஆதரவாக கூலிப்படையினர் மூலம் இளைஞரின் தம்பியை, புரட்சி பாரதம் கட்சித் தலைவரும், கே.வி.குப்பம் தொகுதி எம்.எல்.ஏவுமான ஜெகன்மூர்த்தி கடத்தியதாக புகார் எழுந்தது. இதையடுத்து, ஜெகன்மூர்த்தி உள்ளிட்டோர் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் பெண்ணின் தந்தை உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்..

மேலும், பூந்தமல்லியை அடுத்த ஆண்டர்சன்பேட்டையில் உள்ள புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் ஜெகன்மூர்த்தி வீட்டில், அவரை விசாரிக்க நேற்றைய தினம் போலீசார் சென்ற போது, புரட்சி பாரதம் கட்சியினர் பெரும்பாலானோர் அங்கு திரண்டு எதிர்ப்பு தெரிவித்து கூச்சலிட்டனர்.
ஜெகன்மூர்த்தியை கைது செய்வதற்கும் கடுமையான கண்டனத்தை தெரிவித்து, பூந்தமல்லி நெடுஞ்சாலையில் போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதனிடையே ஜெகன்மூர்த்தி தலைமறைவானதாக கூறப்படுகிறது. அவரை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.. எனினும், ஜெகன்மூர்த்தி, முன்ஜாமின் கோரி சென்னை ஹைகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.
இதனிடையே, மூத்த பத்திரிகையாளர் தமிழா தமிழா பாண்டியன் பேட்டியில், "தேனியை சேர்ந்தவர் இளம்பெண் 500 கோடிக்கு சொந்தமானவர்.. திருவலாங்காடு அருகிலுள்ள இளைஞர் ஒருவரை இன்ஸ்டாகிராமில் சந்தித்து பழகியிருக்கிறார்.. இருவரும் காதலித்துள்ளனர்.. இருவரும் வேறு வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால், காதலனுடன் ஓடிச்சென்றுவிட்டார் இளம்பெண்.
இந்த ஜோடியை பிரிக்க, பெண்ணின் தாயார் முயற்சிக்கிறார்.. இதற்காக அரசியல்வாதிகள், அதிகாரிகளுடன் தொடர்புடைய மகேஸ்வரி என்ற பெண்ணை தொடர்பு கொண்டு, எப்படியாவது தன்னுடைய மகளை மீட்டு கொண்டு வர சொல்லி தரகர் மூலம் 50 லட்சம் தந்திருக்கிறார். உடனே மகேஸ்வரி, ஏடிஜிபியை சந்தித்து பேசியதாகவும், உடனே அவரும், செந்தில்குமார் என்ற ஐ.ஐயிடம் போலீஸ் ஜீப்பை தந்து இளைஞரை கைது செய்ய அனுப்பி வைத்தாராம்.
இளைஞரின் தம்பி
இது தொடர்பான உதவியை கேட்டு சென்றபோதுதான், தன்னுடைய 5 நபர்களை ஜெகன்மூர்த்தி அனுப்பி வைத்துள்ளதாக தெரிகிறது. பிறகு இவர்கள் அனைவருமே திருவலாங்காட்டிலுள்ள இளைஞரின் வீட்டுக்கு சென்றுள்ளனர். ஆனால் இளைஞன் அங்கு இல்லாததால், அவருடைய தம்பியை கடத்தி கொண்டுவந்துவிட்டனர்.
இதற்குபிறகுதான், இளைஞரின் அம்மா வீடியோ பதிவிட்டு, தன்னுடைய மகனை கடத்தி கொண்டுவிட்டதாக கூறி கண்ணீர் வடித்துள்ளார்.. இந்த விஷயத்தில் சம்பந்தமில்லை என்றால், இப்போது எதற்காக ஜெகன்மூர்த்தி வீட்டில் 200 போலீசார் நிற்க வேண்டும்?
ஒரு சாதாரண விசாரணைக்குகூட ஜெகன்மூர்த்தியை ஐஜியால் முடியாத சூழல் உள்ளது.. ஜெகன்மூர்த்தி தன்னுடைய வீட்டில் இருக்கிறார் என்ற செய்தி தெரிந்துதான் காவல்துறை வருகிறது.. ஆனால் அதற்கு முன்பே அவருடைய வீட்டில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கூடிவிட்டனர்..
இதனால் டிஎஸ்பி தலைமையிலான போலீசார் ஜெகன்மூர்த்தியை விசாரிக்கவும் முடியாது, கைது செய்யவும் முடியாது, விசாரணைக்கு ஸ்டேஷனுக்கு அழைத்து வரவும் முடியாது. எனவே, அதிகமான காவல்துறை அவருடைய வீட்டின் முன்பு காவலர்களை குவிக்க நேரிட்டது.
இந்த சம்பவத்தை பொறுத்தவரை, இளைஞரின் தம்பியை கடத்தியது யார்? ஜீப்பில் சென்ற 5 பேர் யார்? ஒரு எஸ்ஐ யாருடைய அனுமதியும் இல்லாமல் போலீஸ் ஜீப்பை எடுத்து செல்ல முடியும்? எப்ஐஆரில் ஜீப் நம்பரையும் பதிவு செய்யவில்லை. செந்தில்குமாரை எதற்காக சஸ்பெண்டு செய்ய வேண்டும்? செந்தில்குமாரை அனுப்பியது யார்? செந்தில்குமார் குற்றவாளியே கிடையாது. அவர் வெறும் அம்புதான்" என்றெல்லாம் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications