அதிமுக பொதுக்குழு வழக்கில் சாதகமற்ற தீர்ப்பு..கை நழுவிய கட்சி .. அடுத்தது என்ன? ஓபிஎஸ் பரபர ஆலோசனை
அதிமுக பொதுக்குழு செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்ததை அடுத்து பெரிய குளத்தில் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
தேனி: அதிமுக பொதுக்குழு வழக்கில் சாதகமற்ற தீர்ப்பினை உச்சநீதிமன்றம் அளித்துள்ளதால் ஓ.பன்னீர் செல்வத்தின் ஒட்டு மொத்த நம்பிக்கையும் தவிடுபொடியாகி விட்டது. அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டது செல்லும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளதால் கட்சி மொத்தமும் எடப்பாடி பழனிச்சாமி வசமாகியுள்ளது. அடுத்தது என்ன செய்வது என்று தேனி மாவட்டம் பெரியகுளத்தில் உள்ள வீட்டில் ஓ.பன்னீர் செல்வம் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
ஓ.பன்னீர்செல்வத்தின் அரசியல் முடிந்துவிட்டது என்று எடப்பாடி பழனிசாமி கருத்து தெரிவித்துள்ளார். கடந்த ஜூலை 11ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டது செல்லும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

அதிமுகவில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களை கட்சியில் இருந்து நீக்கி நிறைவேற்றப்பட்ட தீர்மானமும் செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. பொதுக்குழுவை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு குறித்து மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த டி.குண்ணத்தூரில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த எடப்பாடி பழனிசாமி, 'பொதுக்குழு செல்லும், அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லும் என்ற தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழங்கி உள்ளது.அதிமுக நடத்திய சட்டப்போராட்டத்திற்கு வெற்றி கிடைத்துள்ளது. இனி எழுச்சியோடு கட்சிப்பணிகள் நடைபெறும். உச்சநீதிமன்றமே தீர்ப்பு கூறி விட்டதால் இனி அதிமுக தலைமை குறித்து எந்த கேள்வியும் இல்லை என்றார்.
எம்ஜிஆர், ஜெயலலிதாவிற்காக கட்டப்பட்ட கோவிலில் வழிபாடு செய்த உடன் நல்ல தீர்ப்பு கிடைத்துள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலில் அதிமுக வெற்றி பெற இந்த உச்சநீதிமன்ற தீர்ப்பு உதவும். ஒரு சிலரை தவிர மற்றவர்கள் அதிமுகவுக்கு வரலாம். தினகரன், ஓபிஎஸ் ஆகியோரிடம் இருந்த ஆதரவாளர்கள் ஒவ்வொருவராக வரத் தொடங்கிவிட்டனர்.
ஆட்சி நீடிக்குமா? என்ற கணிப்புகளை பொய்யாக்கி 4 ஆண்டு 2 மாதங்கள் பொற்கால ஆட்சி கொடுத்தேன். இனி 1.5 கோடி அதிமுக தொண்டர்களின் பொதுச் செயலாளராக இருப்பேன். இனி அதிமுகவுக்கும் ஓ.பி.எஸ்-க்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. ஓற்றை தலைமை விவகாரத்தில் ஒன்றரை கோடி அதிமுக தொண்டர்களின் எண்ணம் நிறைவேறியுள்ளது. ஓபிஎஸ் அரசியல் முடிந்துவிட்டது. உண்மை, தர்மம், நீதி இன்று வென்றுள்ளது. நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து ஓ பன்னீர் செல்வம் தரப்பு மேல்முறையீடு செய்தாலும் கவலை இல்லை என்று கூறினார்.
ஒற்றை தலைமை விவகாரத்தில் ஒன்றரை கோடி அதிமுக தொண்டர்களின் எண்ணம் நிறைவேறியுள்ளது. ஒன்றரை கோடி அதிமுக தொண்டர்களின் பொதுச்செயலாளராக இருப்பேன். அதிமுக பொதுக்குழு தீர்மானங்களும் செல்லும் என சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பில் கூறியுள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு உதவும். ஒரு சிலரைத் தவிர யார் வந்தாலும் அதிமுகவில் சேர்த்துக்கொள்வோம். அதிமுக நிர்வாகிகள் கூடி விரைவில் பொதுச்செயலாளர் தேர்தல் நடைபெறும் என்றும் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார். தீர்ப்பு வாசிக்கப்பட்ட உடனே எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர் பட்டாசு வெடித்து கொண்டாடியுள்ளனர்.

அதிமுக பொதுக்குழு வழக்கில் சாதகமற்ற தீர்ப்பு கிடைத்துள்ளது ஓ.பன்னீர் செல்வம் தரப்பினரை கடும் மன உளைச்சலுக்கு உள்ளாக்கியுள்ளது. உச்சநீதிமன்ற தீர்ப்பினை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படும் என ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரான வைத்திலிங்கம் கூறியுள்ளார். உச்சநீதிமன்ற தீர்ப்பு வந்த போது ஓ.பன்னீர் செல்வம் தேனி மாவட்டம் பெரிய குளத்தில் தனது வீட்டில் இருந்தார். தீர்ப்பு சாதகமற்ற நிலையில் வந்த உடன் ஓ.பன்னீர் செல்வம் மட்டுமல்லாது அவரது ஆதரவாளர்களுடம் அமைதியான மனநிலையில் இருந்தனர். அடுத்து என்ன செய்வது என்று தனது ஆதரவாளர்களுடன் ஓ.பன்னீர் செல்வம் ஆலோசனை மேற்கொண்டார்.
தீர்ப்பு குறித்து கருத்து கூறிய ஓ.பன்னீர் செல்வம் தரப்பு வழக்கறிஞர் திருமாறன், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய மாட்டோம் என்று கூறியுள்ளார். சென்னை ஹைகோர்ட்டில் சிவில் வழக்குகளை விரைவில் முடிக்க வலியுறுத்தப்படும் என்று கூறினார். தீர்மானங்கள் செல்லுமா என்பதை முடிவு செய்ய வேண்டியது சிவில் நிதிமன்றம்தான் என்று ஓ.பன்னீர் செல்வம் தரப்பு ஆதரவு வழக்கறிஞர் திருமாறன் தெரிவித்துள்ளார்.
-
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்? -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்? -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications