Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தேனியில் அவசரப்பட்ட மாமனார்.. மருமகள் இருந்த கோலம்.. போலீஸை ஆடிப்போக வைத்த சம்பவம்

Subscribe to Oneindia Tamil

தேனி: தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள குச்சனூரை சேர்ந்தவர் துரைசிங்கம். இவருடய மகன் சதீஷ். இவருடைய மருமகள் ராஜபிரியா. சதீஷ் மதுரையில் பணியாற்றுகிறார். ராஜபிரியா தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றுகிறார். தேனி பழனிசெட்டிபட்டியில் வசித்து வருகிறார்கள். குடும்ப பிரச்சனையில் மாமனார் துரைசிங்கம், மருமகள் ராஜபிரியாவை என்ன செய்தார் தெரியுமா? ஒரு நிமிடத்தில் பெரிய சம்பவம் நடந்துள்ளது.

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள குச்சனூரை சேர்ந்த துரைசிங்கம் தனது மகன் மற்றும் மருமகள் பேரன் பேத்திகளுடன், தேனி பழனிசெட்டிபட்டி ஆர்.எம்.டி.சி. நகரில் வசித்து வந்தார். துரைசிங்கம் மகன் சதீஷ் (வயது 37) மதுரையில் ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். சதீஷின் மனைவி ராஜபிரியா (38) ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை செய்து வந்தார். இந்த சதீஷ் ராஜபிரியா தம்பதிக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

What happened to a private teacher in Theni because of her father-in-law

சதீஷ் ராஜபிரியா தம்பதி இடையே நேற்று முன்தினம் குடும்ப பிரச்சினை ஏற்பட்டிருக்கிறது. இதை அறிந்த சதீசின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் சிலர் அங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினார்களாம். பின்னர், சதீஷ் தனது குழந்தைகளை அழைத்துக்கொண்டு குச்சனூரில் உள்ள தந்தை வீட்டுக்கு சென்றாராம். பின்னர் ராஜபிரியா அதே பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு சென்றார்.

இதற்கிடையே நேற்று மாலை ராஜபிரியா உறவினர் வீட்டில் இருந்து பழனிசெட்டிபட்டியில் உள்ள தனது வீட்டுக்கு வந்துள்ளார். அவர் தனது வீட்டின் இரும்பு கேட்டை திறக்க முயன்றபோது, அங்கு அவருடைய மாமனார் துரைசிங்கம் வந்துள்ளார். அவர் தனது மருமகளிடம் தகராறு செய்தார். அப்போது அவர் மறைத்து வைத்திருந்த கத்தியால் ராஜபிரியாவை சரமாரியாக குத்தியிருக்கிறார். இதில், நிலைகுலைந்து சம்பவ இடத்திலேயே ராஜபிரியா உயிரிழந்தார்.

இதையடுத்து துரைசிங்கம், தேனி பழனிசெட்டிபட்டி காவல் நிலையத்துக்கு சென்றார். அங்கிருந்த போலீசாரிடம், தனது மருமகளை கொலை செய்து விட்டதாகவும், வீட்டு முன்பு அவர் பிணமாக கிடப்பதாகவும் கூறிவிட்டு சரண் அடைந்தார். அதைக்கேட்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.

இதையடுத்து பழனிசெட்டிபட்டி காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையிலான போலீசார், துரைசிங்கத்தை வாகனத்தில் அழைத்துக் கொண்டு ஆர்.எம்.டி.சி. நகரில் உள்ள வீட்டுக்கு சென்றனர். அங்கு பிணமாக கிடந்த ராஜபிரியா உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து பழனிசெட்டிபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து துரைசிங்கத்தை கைது செய்தனர். மாமனாரான அவர் ராஜபிரியாவின் தாய்மாமா ஆவார். கொலைக்கான காரணம் குறித்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+