தேனி அருகே காவலர் அம்பிகாவை கீழே தள்ளிவிட்ட குபேந்திரன்.. அடுத்து அவரது செயலால் ஆடிப்போன பொதுமக்கள்
தேனி: தேனி மாவட்டம் கம்பம் வடக்கு காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக அம்பிகா என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர் தேனி மாவட்டம் கூடலூரைச் சேர்ந்தவர் ஆவார். இவருக்கும், இவரது பக்கத்து வீட்டில் உள்ள குபேந்திரன் என்பவருக்கும் பாதை பிரச்சனை உள்ளது. இந்த சூழலில் போக்குவரத்து சிக்னலில் இருந்த அம்பிகாவை கீழே தள்ளி விட்ட குபேந்திரன், அப்போது செய்த செயல் பொதுமக்களை ஆடிப்போக வைத்துள்ளது.
நிலம்,வீடு, சொத்து, பாகப்பிரிவினை, வீட்டு மனை, பாதை, தோட்டம் உள்ளிட்ட சொத்துக்கள் தொடர்பான விவகாரங்கள் இப்போது முன்பை விட அதிகரித்துள்ளது. சிலர் நிலத்தை அதிக அளவில் ஆக்கிரமிப்பது, சிலர் நிலத்திற்கு போலி பட்டா வாங்குவது, சிலர் பாதையை அடைப்பது, சிலர் பாதையில் வீடு கட்டுவது போன்ற பல்வேறு பிரச்சனைகளில் சிக்குகிறார்கள்.

பாதை தொடர்பான பிரச்சனைகள், நிலத்தில் உரிமை யாருக்கு என்பது தொடர்பான சிவில் பிரச்சனைகள் பல ஆண்டுகளாக இருப்பதால், இரு தரப்புக்கள் இடையே முன்விரோதங்கள் ஏற்படுகின்றன. அப்படியான ஒரு சிக்கலில் காவலர் ஒருவரை நடுரோட்டில் தள்ளிவிட்டு தாக்க முயன்ற சம்பவம் தேனி மாவட்டம் கம்பம் நகரில் நடந்துள்ளது.
தேனி மாவட்டம் கூடலூர் கே.கே.நகரை சேர்ந்த பாண்டியராஜன் வழக்கறிஞர் ஆவார். அவருடைய மனைவி அம்பிகாவுக்கு 43 வயது ஆகிறது. அம்பிகா , கம்பம் வடக்கு போலீஸ் நிலையத்தில் போலீஸ் ஏட்டாக பணியாற்றி வருகிறார். இவருக்கும், கூடலூரை சேர்ந்த 60 வயதாகும் குபேந்திரன் என்பவருக்கும் பாதை பிரச்சினை தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது. இந்தநிலையில் அம்பிகா நேற்று பணி முடிந்து வீடு திரும்பினார். தொடர்ந்து பேருந்துக்காக கம்பம் போக்குவரத்து சிக்னல் அருகே உள்ள அரசமரம் பூக்கடை பகுதியில் காத்திருந்துள்ளார்.
அப்போது அங்கு வந்த குபேந்திரன், அம்பிகாவை கீழே தள்ளிவிட்டு தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் அவரை வெட்ட முயன்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து அம்பிகா, அவரை தடுக்க முயன்றார். இதில் அரிவாள் பட்டதில் அம்பிகாவின் முகத்தில் காயம் ஏற்பட்டது. இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன்பேரில் கம்பம் தெற்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அல்போன்ஸ் ராஜா சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தார். பின்னர் அம்பிகாவை மீட்டு சிகிச்சைக்காக கம்பம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் குபேந்திரனை கைது செய்து காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.
இதற்கிடையே சம்பவம் குறித்து அறிந்த உத்தமபாளையம் டிஎஸ்பி வெங்கடேசன் மருத்துவமனைக்கு சென்று தலைமைக் காவலர் அம்பிகாவை பார்வையிட்டார். அப்போது அம்பிகாவின் கண்ணிற்கு செல்லும் நரம்பு பாதிக்கப்பட்டுள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதையடுத்து அம்பிகாவை மேல் சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். போலீஸ் ஏட்டுவை முதியவர் ஒருவர் அரிவாளால் வெட்டிய சம்பவம் கம்பத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு












Click it and Unblock the Notifications