தமிழகத்தில் சில பகுதிகளில் அடிக்கடி ஏற்படும் மின்வெட்டுக்கு என்ன காரணம்.. அதிகாரிகள் விளக்கம்
தேனி: கோடை வெயில் சுட்டெரித்து வருவது ஒருபுறம் எனில், அடிக்கடி ஏற்படும் மின்வெட்டால் பொதுமக்கள் அவதிப்படுகிறார்கள். தமிழகத்தின் தேனி, மதுரை, திண்டுக்கல், சென்னை, கோவை, திருச்சி என பல்வேறு பகுதிகளில் திடீரென ஏற்படும் மின்வெட்டு காரணமாக மக்கள் பரிதவிக்கிறார்கள். இதனிடையே இந்த விவகாரத்தில் மின்வாரிய அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
கோடை வெயில் தமிழ்நாட்டில் கடுமையாக தாக்கி வந்த நிலையில், தற்போது தான் பல பகுதிகளில் மழை பெய்துள்ளது. அதேநேரம் வெயிலின் தாக்கம் ஒரு பக்கம் எனில், மின் வெட்டு ஏற்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் கோடை காலங்களில் மின்சாரத் தேவை வழக்கத்தை விட கூடுதலாக இருக்கிறது. இந்த ஆண்டு முதல் முறையாக தினசரி மின் நுகர்வு 20 ஆயிரம் மெகா வாட்டை தாண்டி உள்ளது. பலரும் வீடுகளில் இரண்டு ஏசி, மூன்று ஏசி என பயன்படுத்த தொடங்கியதால் சென்னை நகரம் உச்சக்கட்ட மின்சார தேவையால் திணறி வருகிறது.. அதிகப்படியான மின் தேவையால் மின் சாதனங்கள் மட்டுமின்றி மின்வாரிய ஊழியர்களுமே சோர்ந்து போய் உள்ளார்கள்.

மின்விசிறி 10 நிமிடம் ஓடாமல் போனாலே மக்கள் பதறும் அளவிற்கு நிலைமை இருக்கிறது. மின்வெட்டு ஏற்பட்டால் மக்கள் இப்போது எல்லாம் பொறுமையாக இருக்க முடியாத நிலை இருப்பதே காரணம் ஆகும். ஏனெனில் வெயிலின் தாக்கம் அந்த அளவிற்கு ஆபத்தானதாக இருக்கிறது.
இதனியே வரலாற்றில் இல்லாத அளவிற்கு கடந்த ஏப்ரல் 30ம் தேதி நிலவரப்படி தமிழகத்தின் மின் தேவை 20,701 மெகாவாட் ஆகவும், மின்நுகர்வு 454.32 மில்லியன் யூனிட்டுகளாக பதிவானது. ஆனால் அதை எல்லாம் தூக்கி சாப்பிடும் அளவிற்கு மே 2ம் தேதி ஒரே நாளில் 20,830 மெகா வாட் மின் தேவை இருந்தது. சென்னையில் மட்டுமே 4500 மெகாவாட் அளவிற்கு தினசரி மின்தேவை இருக்கிறது. அதிகபட்ச மின் தேவை ஒரு பக்கம் இருந்தாலும் மின்விநியோகம் தமிழகத்தில் சீராகவே உள்ளது.
தமிழகத்தில் தேனி, நீலகிரி, திண்டுக்கல், கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, மதுரை, கோவை உள்பட பகுதிகளில் மழை பெய்த போதிலும் கடந்த வார ஒரு வாரமாக அவ்வப்போது மின்வெட்டு ஏற்பட்டு வந்தது. இந்த மின்வெட்டு குறித்து மின்வாரிய அதிகாரிகளிடம் கேட்ட போது, கடந்த 3 மாதங்களாக மின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படவில்லை என்றும், அதேநேரம் மின் கம்பங்களில் ஏற்படும் திடீர் பழுதுகள், டிரான்ஸ்பார்மர்களில் ஏற்படும் பழுதுகளால் மின்வெட்டு ஏற்படுவதாகவும் கூறினார்கள்.
அப்படி ஏற்படும் பழுதுகள் உடனுக்குடன் சரி செய்யப்படுவதாக கூறிய அதிகாரிகள், தற்போது மழை காரணமாக மின்சார வயர்கள் மரங்களில் சிக்கி பழுது ஏற்படுவதாக கூறினார்கள். அப்படி மரங்களில் சிக்கிய மின்வயர்கள் மற்றும் அறுந்து விழுந்த மின்வயர்களை சரி செய்யும் பணிக்காகவே மின்சாரம் சிறிது நேரங்கள் அவ்வப்போது துண்டிக்கப்படும் நிலை ஏற்படுகிறது என்று அதிகாரிகள் கூறினார்கள்.
-
கரண்ட் கட் பற்றி நான் சொன்ன விஷயத்தில் பின்வாங்க மாட்டேன்.. ஏனென்றால்..? மாஸ்டர் மகேந்திரன் விளக்கம் -
சட்டப்பேரவை கூட்டம்.. விஜய்க்கு காத்திருக்கும் சிக்கல்! பெரிய பிளானுடன் இறங்கும் எதிர்க்கட்சிகள்! -
வெள்ளை அறிக்கை இல்ல.. வேஸ்ட் அறிக்கை! கோட்டையில் லெஃப்ட் ரைட் வாங்கிய சிஎம் விஜய்! பம்மிய ஆபீசர்ஸ்? -
உதயமாகும் "தமிழ்நாடு கரப்பான் பூச்சி ஜனதா கட்சி.." தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய விண்ணப்பம்! -
2026 போயே போச்சு.. அதான் 2031 இருக்கே! அமித் ஷா கையில் ’ஆபரேசன் தமிழ்நாடு’.. வங்கத்து கணக்கு எடுபடுமா? -
பொதுப்பணித்துறை டெண்டர்களில்.. இனி முறைகேடு நடக்காது! தமிழ்நாடு அரசு எடுத்த அதிரடி மாற்றம்! -
நயினார் நாகேந்திரனுக்கு.. கேரள ஆளுநர் பதவி! அள்ளிக்கொடுக்கும் பாஜக! அப்போ.. அண்ணாமலை ரூட் சரிதான்! -
பெண்கள் வாழ தகுதியற்ற தமிழ்நாடு..? நாங்க என்ன தப்பு செய்தோம்..? அறந்தாங்கி நிஷா ஆதங்கம் -
60 வருடங்களில் தமிழகம் வாங்கிய கடனை விட திமுக அரசு 5 ஆண்டில் அதிக கடன் பெற்றுள்ளது - வெள்ளை அறிக்கை டேட்டா -
அடி வெளுக்கப்போகும் கனமழை! 7 மாவட்டங்களுக்கு பறந்த அலர்ட்.. உஷார் மக்களே! -
4874 EV சார்ஜிங் நிலையங்கள் ரூ.2000 கோடியில்! தமிழகத்தில் எங்கே தெரியுமா? மத்திய அரசின் மாஸ் பிளான் -
சுழல்கள் நிறைந்த சாலக்குடி ஆற்றின் பாறை இடுக்கில் சிக்கிய தமிழக இளைஞர்! கயிறு கட்டி மீட்ட ராணுவ வீரர்!












Click it and Unblock the Notifications