சசிகலாவின் திட்டம் விவேக்.. தினகரன் மனதில் அனுராதா.. தேனியில் நிற்கப் போவது யார்?
Recommended Video

தேனி: தேனி லோக்சபா தொகுதியில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் குமாருக்கு போட்டியாக யாரை நிறுத்துவது என்ற தீவிர ஆலோசனையில் தினகரன் குடும்பம் தீவிரமாக இறங்கியுள்ளதாம்.
தேனி தொகுதியில் துணை முதலமைச்சர் ஓ.பி.எஸ். மகன் ரவீந்திரநாத் போட்டியிடுகிறார். தினகரனுக்கு ஓ.பி.எஸ் மீது தீராத கோபம் உள்ளது. தினகரன் பெரியகுளம் தொகுதியில் மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டபோது அவருக்கு தேர்தல் பணி செய்தவர் ஓ.பி.எஸ். பின்னர் ஓ.பி.எஸ் முதல்வராவதற்கு இவர் அடையாளம் காட்டியதே காரணம் என்கிறார் தினகரன்.
இப்படி தன்னால் வளர்ந்தவர் தனக்கு எதிராக திரும்பி நிற்பதை தினகரனால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஆகவே இப்போது தேனி தொகுதியில் ஓபி எஸ்ஸின் மகன் ரவீந்திர நாத்தை தோற்கடித்தே தீரவேண்டும் என்பதில் தினகரன் முழு கவனமும் செலுத்தி வருகிறார்.

யார்
இந்த நிலையில் தேனி தொகுதியில் ரவீந்திர நாத்துக்கு எதிராக யாரை நிறுத்துவது என்று தினகரன் குடும்பத்தில் பட்டிமன்றம் நடந்து வருவதாக கூறப்படுகிறது. சில தினங்களுக்கு முன் செய்தியாளர்களிடம் பேசிய தினகரன் தேனி என் தொகுதிதான் கட்சி நிர்வாகிகள் என்னை அங்கு போட்டியிட கூறிவருகிறார்கள் என்று தெரிவித்திருந்தார்.

சசிகலாவின் மனதில் என்ன
ஆனால் சசிகலாவின் எண்ணம் வேறு மாதிரி உள்ளதாக விவரம் அறிந்தவர்கள் கூறுகிறார்கள். அதாவது விவேக்கை அங்கு போட்டியிட வைத்தால் நமது குடும்பத்தில் இருந்து இன்னொரு வாரிசு அரசியலில் முகிழ்த்து வருவதற்கு வாய்ப்பாக இருக்கும் என்றும் எதிர்காலத்தில் அதிமுகவை கைப்பற்றுவதற்கும் அது எளிதாக இருக்கும் என்றும் சசிகலா கருதுவதாக கூறுகிறார்கள்.

தேனியில் விவேக்
இந்தப் பின்னணியில் விவேக்கும் தேனி தொகுதிக்கு அடிக்கடி சென்று வருகிறாராம். அங்கு சென்றவர் தொகுதி நிலவரம் குறித்தெல்லாம் தனது ஆதரவாளர்களிடம் ஆலோசித்ததாகவும் கூறப்படுகிறது. அதே வேளையில் தினகரனுக்கு விவேக்கை தேனி தொகுதியில் போட்டியிட வைப்பதில் விருப்பம் இல்லை என்று கூறப்படுகிறது.

தினகரன் மனதில் அனுராதா
அவர் அங்கு தான் போட்டியிடவேண்டும் அல்லது தனது மனைவி அனுராதாவை போட்டியிட வைக்க வேண்டும் என்று விரும்புகிறாராம். இதற்கு சசிகலா தரப்பில் இருந்து கிரீன் சிக்னல் கிடைக்குமா என்று தெரியவில்லை. அதே வேளையில் தினகரனும் அனுராதாவை நிறுத்துவதில் இரண்டு கருத்துகளோடே இருப்பதாகவும் தெரிகிறது. அதாவது ஓ.பி.எஸ்.சின் குடும்ப அரசியலை விமர்சித்துவிட்டு இப்போது தனது மனைவியை நிறுத்துவது விமர்சனத்துக்கு உள்ளாகும் என்றும் கருதுகிறாராம்.
இதனால் பேசாமல் தினகரனே போட்டியிட முடிவு செய்யலாம் என்றும் கருதப்படுகிறது. தினகரன் நின்றால் அவருக்குத்தான் ஜெயம் என்று இப்போதே சொல்ல ஆரம்பித்து விட்டனர் தேனி பக்கம்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications