நிர்வாண வீடியோ கால்.. டிஎன்பிஎஸ்சிக்கு தயாராகும் பெண்கள் தான் குறி.. தேனியை அதிர வைத்த யோகேஷ்
தேனி: போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் இளம்பெண்களுக்கு உதவி செய்வது போல் பழகி அவர்களின் புகைப்படங்களை மார்பிங் செய்து மிரட்டி வந்த இளைஞர் தேனி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். டெலிகிராம் மூலம் பழகி கல்லூரி பெண்ணை நிர்வாணமாக வீடியோ கால் பேசுமாறு மிரட்டி வந்த அந்த இளைஞர் குறித்து திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
டிஎன்பிஎஸ்சி தேர்வில் வென்று அரசு பணியில் சேர வேண்டும் என்று விரும்பிய தேனி பகுதியை சேர்ந்த 20 வயதாகும் இளம் பெண் கல்லூரியில் படித்துக் கொண்டே டி.என்.பி.எஸ்.சி. போட்டித் தேர்வுக்கு தயாராகி கொண்டிருந்தார். இதற்காக 'டெலிகிராம்' செயலியில் போட்டித்தேர்வு தொடர்பான ஒரு குழுவில் சேர்ந்திருக்கிறார். அதே குழுவில் தளபதி என்ற பெயரில் ஒரு நபர் இருந்துள்ளார்.

அந்த இளைஞர், தேனி கல்லூரி மாணவிக்கு தனிப்பட்ட முறையில் எஸ்எம்எஸ் அனுப்பி நட்பாக பழகி உள்ளார்கள் அந்த பழக்கத்தை பயன்படுத்தி அந்த பெண்ணின் 'இன்ஸ்டாகிராம்' சமூக வலைத்தள பயனர் கணக்கு மற்றும் கடவுச் சொல் விவரங்களை பெற்றிருக்கிறார்கள்.
பின்னர், அந்த இளைஞர் அந்த பெண்ணின் இன்ஸ்டாகிராம் புகைப்படங்களை சேமித்து வைத்துக் கொண்டு, அந்த பெண்ணிடம் தன்னுடன் 'வீடியோ காலில்' நிர்வாணமாக பேசவில்லை என்றால் புகைப்படங்களை நிர்வாணமாக மார்பிங் செய்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு விடுவேன் என்று மிரட்டி உள்ளார்.
அந்த பெண்ணும் பயத்தில் வீடியோ கால் செய்து பேசியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் வீடியோ கால் செய்ததை அந்த நபர் வீடியோவாக பதிவு செய்து வைத்து கொண்டு மீண்டும் மிரட்டி உள்ளார். இதையடுத்து அந்த பெண் டெலிகிராம் செயலியில் இருந்து வெளியேறினார். அதன்பிறகு அந்த பெண்ணின் செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பிய மர்ம நபர் மீண்டும் வீடியோ காலுக்கு வா இல்லாவிட்டால் படங்களை வெளியிடுவேன் என்று மிரட்டி உள்ளார்.
இதனால் அந்த நபர் சம்பந்தப்பட்ட பெண்ணின் இன்ஸ்டாகிராம் ஐ.டி.யில் இருந்து அவரது தம்பியின் இன்ஸ்டாகிராமுக்கு ஒரு குறுஞ்செய்தியை அனுப்பி இருக்கிறார். அதில் உனது அக்காளின் நிர்வாண வீடியோ இருக்கிறது. நீ எனக்கு ரூ.2 லட்சம் கொடுக்காவிட்டால் அதை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு விடுவேன் என்று மிரட்டி உள்ளார். இதையடுத்து அவர் முதல் தவணையாக ரூ.100, 2-வது தவணையாக ரூ.2,000 மட்டும் அனுப்பி உள்ளார் அந்த இளம் பெண்ணின் தம்பி. கடைசியில் அவர் தனது அக்காளிடம் மிரட்டியது குறித்து கூறினார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த இளம் பெண், தேனி சைபர் கிரைம் போலீஸ் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
இதுகுறித்து தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே உத்தரவின்பேரில், சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அரங்கநாயகி தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் தாமரைக்கண்ணன் மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படையினர் அந்த மர்ம நபரை தேடினர்.
தனிப்படையினர் நடத்திய விசாரணையில், இந்த சம்பவத்தில் ஈடுபட்ட நபர் திருவள்ளூர் மாவட்டம் மேல்அய்யன்பாக்கம் 2-வது குறுக்குத் தெருவை சேர்ந்த வேலு மகன் யோகேஷ்குமார் (வயது 28) என்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து யோகேஷ்குமாரை தனிப்படை போலீசார் நேரில் சென்று கைது செய்தனர்.
யோகேஷ்குமாரிடம் நடத்திய விசாரணையில், பி.எஸ்சி. பட்டப்படிப்பு படித்து விட்டு வேலை தேடிக் கொண்டு இருப்பதாகவும், போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் இளம்பெண்களுக்கு உதவி செய்வது போல் பழகி அவர்களின் புகைப்படங்களை மார்பிங் செய்து சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதாக மிரட்டி வந்ததும் தெரியவந்தது. பின்னர், கைது செய்யப்பட்ட யோகேஷ்குமாரை தேனி ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
-
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம்












Click it and Unblock the Notifications