கை நடுநடுங்க கையெழுத்து... ஊராட்சி மன்றத் தலைவராக பொறுப்பேற்ற 90 வயது மூதாட்டி..!
நெல்லை: நெல்லை மாவட்டம் சிவந்திப்பட்டி ஊராட்சி மன்றத் தலைவராக 90 வயது மூதாட்டி பெருமாத்தாள் இன்று முறைப்படி பதவியேற்றுக் கொண்டார்.
Recommended Video
இவரது பதவியேற்பு நிகழ்ச்சியில் அவரது பேரன், பேத்திகள் மற்றும் ஊர்க்காரர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
பதவியேற்பு படிவத்தில் கைநாட்டு தான் வைப்பார் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில், கை நடுநடுங்கிய நிலையிலும் பேனாவில் கையெழுத்திட்டு அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளார் பெருமாத்தாள்.

பதவியேற்பு
தமிழகத்தில் 9 மாவட்டங்களில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலில் வெற்றிபெற்ற மக்கள் பிரதிநிதிகள் இன்று முறைப்படி பதவியேற்றுக் கொண்டனர். ஊராட்சி அலுவலகம், ஒன்றிய அலுவலகம், மாவட்ட ஊராட்சி அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் பதவியேற்பு நிகழ்வு நடைபெற்றது. அந்தவகையில் தமிழகத்தின் மூத்த வயதுடைய ஊராட்சி மன்றத் தலைவர் என்ற பெருமையை பெற்றுள்ள நெல்லை மாவட்டத்தை சேர்ந்த பெருமாத்தாள் (90 வயது) இன்று பொறுப்பேற்றுக்கொண்டார்.

அடிப்படை வசதி
தன்னை எதிர்த்து போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களையும் டெபாசிட் இழக்கச் செய்தவர் பெருமாத்தாள் என்பது குறிப்பிடத்தக்கது. சிவந்திப்பட்டி ஊராட்சியில் பதிவான மொத்த வாக்குகள் இரண்டாயிரத்து 60-ல் ஆயிரத்து 568 ஓட்டுக்களை பெற்று அபார வெற்றி பெற்றார் பெருமாத்தாள். ஊர் மக்களுக்கு எப்போதும் நல்லதே நினைக்கும் தன்னை ஊர்க்காரர்கள் தான் வெற்றி பெற வைத்துள்ளதாகவும் சிவந்திப்பட்டிக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் தாம் செய்து கொடுப்பேன் எனவும் தெரிவிக்கிறார் பெருமாத்தாள்.

பாராட்டு பத்திரம்
தேர்தலில் பெருமாத்தாள் பாட்டி முதல் முறையாக வெற்றி பெற்றிருந்தாலும் கூட அவரது குடும்பத்தினர் தான் இதற்கு முன்னர் 7 முறை ஊராட்சி மன்றத் தலைவர்களாக இருந்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பெருமாத்தாள் பாட்டி குறித்து கூறும் சிவந்திப்பட்டி ஊர்க்காரர் ஒருவர், அவர் பார்க்கத்தான் வயதானவரே தவிர செயல்பாடுகள் அனைத்தும் இளசுகளை மிஞ்சும் வகையில் இருக்கும் என பாராட்டு பத்திரம் கொடுக்கிறார்.

ஊர் வேலை
90 வயதிலும் ஓடி ஆடி வீட்டு வேலை, தோட்ட வேலை என கவனித்து வரும் பெருமாத்தாள் பாட்டி இனி ஊர் வேலையையும் பார்க்க இருக்கிறார். விரைவில் இவர் நெல்லை மாவட்ட ஆட்சியரை சந்தித்து சிவந்திப்பட்டிக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்த கோரிக்கை பட்டியலை அளிக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது.
-
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை












Click it and Unblock the Notifications