அண்ணாமலை ஆடு மேய்க்கணும்! எடப்பாடி வெல்லமண்டி நடத்தணும்! வானதி கூடை பின்னணும்! -அனல் கக்கிய ஆ.ராசா!
நெல்லை: கொங்குவேளாளர் கவுண்டர் சமுதாயத்தை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க கையெழுத்திட்டவர் கருணாநிதி என திமுக துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா தெரிவித்துள்ளார்.
அவர் மட்டும் அப்படி செய்திருக்கவில்லை என்றால் அண்ணாமலை ஆடு தான் மேய்த்துக் கொண்டிருக்கணும் என்றும் எடப்பாடி வெல்லமண்டி தான் நடத்தி கொண்டிருக்கணும் எனவும் வானதி சீனிவாசன் கூடை பின்னிக் கொண்டிருந்தக்கணும் எனவும் ஆ.ராசா விமர்சித்துள்ளார். நெல்லையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர் இதனைக் கூறினார்.

கருணாநிதியை ஒழிக என்று கூட அண்ணாமலை திட்டிக்கொள்ளட்டும் ஆனால் கருணாநிதி போட்ட கையெழுத்துக்களால் தாமோ தனது தந்தையோ எந்த பயனும் அடையவில்லை என்று மட்டும் அவர் சொல்ல வேண்டாம் என ஆ.ராசா கேட்டுக்கொண்டார். தாம் கவுண்டர் சமுதாய மக்கள் நிறைந்துள்ள நீலகிரி தொகுதியில் தான் எம்.பி.யாக இருப்பதாகவும் அந்த சமுதாயத்தினர் பண்பட்ட மக்கள் எனவும் புகழாரம் சூடினார்.
கருணாநிதி பேனா இல்லையென்றால் அண்ணாமலை, எடப்பாடி உட்பட யாரும் இல்லை எனப் பேசிய அவர், தனது பேச்சை குறிப்பெடுக்க மத்திய புலனாய்வு துறை வந்திருப்பது தெரியும் எனக் கூறி கூட்டத்தை அதிர வைத்தார். ஊழலை பற்றி பேச தனக்கு பயமில்லை என்று மேஜையில் அடித்து ஆக்ரோஷமான அவர் பிரதமர் மோடி மீது கடும் விமர்சனங்களை முன் வைத்தார்.
எடப்பாடி பழனிசாமிக்கு அவரது தாய், தந்தை சம்பாதித்து வைத்துவிட்டுச் சென்றது 50 முதல் 60 ஏக்கர் இருக்கும் என்றும் இவர் கொள்ளையடித்து சேர்த்தது 500 ஏக்கர் இருக்கும் எனவும் ஆ.ராசா தெரிவித்தார். தனது தோட்டத்துக்கே 3 மோட்டார் இருப்பதாகவும் எடப்பாடி பழனிசாமி தோட்டத்துக்கு நிச்சயம் 10 மோட்டாராவது இருக்கும் என்றும் அந்த மோட்டார்களுக்கான இலவச மின்சாரத்திற்கு தனது பேனாவில் கையெழுத்திட்டவர் கருணாநிதி என ஆ.ராசா தெரிவித்தார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications