தம்பியின் அந்த ஒரு பதிலுக்காகதான் நான் இங்கு வந்தேன்! நாங்குநேரி சின்னத்துரையை சந்தித்த தாடி பாலாஜி
நெல்லை: நெல்லை சாதிய கொடுமையால் தாக்கப்பட்டு 12 ஆம் வகுப்பு தேர்வில் சாதனை படைத்த நாங்குநேரி மாணவன் சின்னத்துரையை நடிகர் தாடி பாலாஜி சந்தித்து பாராட்டினார்.
திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரியில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பள்ளி மாணவன் சின்னதுரை மற்றும் அவருடைய தங்கை சக மாணவர்களால் சாதிய வன்முறை கொடுமையால் அரிவாளால் கொடூரமாக வெட்டப்பட்டனர்.

இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தை நேரில் பார்த்த அதிர்ச்சியில் சின்னத்துரையின் தாத்தா கிருஷ்ணன் உயிரிழந்தார். இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட மாணவர்கள் 6 பேரும் கைது செய்யப்பட்டு நெல்லை அரசு கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டனர்.
அவரை விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், திமுக அமைச்சர்கள் உள்ளிட்டோர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். இந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மாணவனுக்கு ஆசிரியர்கள் நேரில் சென்று பாடம் எடுத்தனர். அதன்படி மருத்துவமனையில் இருந்து கொண்டே உதவியாளரின் உதவியுடன் பிளஸ் 2 தேர்வு எழுதினார் சின்னதுரை.
இவர்களது குடும்பம் நாங்குநேரியில் வசித்து வந்த நிலையில் பாதுகாப்பு இருக்காது என முறையிட்டதால் நாங்குநேரியில் உள்ள அம்பேத்கர் தொடக்கப் பள்ளியில் சத்துணவு உதவியாளராக பணியாற்றிய சின்னத்துரையின் தாயார் ரெட்டியார்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளிக்கு மாற்றப்பட்டார். சின்னத்துரை பாளையங்கோட்டையில் உள்ள தூய சவேரியார் மேல்நிலைப் பள்ளியிலும், இவரது சகோதரி பாளையங்கோட்டையில் உள்ள மேரி சார்ஜென்ட் பள்ளியிலும் சேர்க்கப்பட்டனர்.
அவர்களது படிப்பு செலவை தமிழக அரசு ஏற்றது. இந்த நிலையில் தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் நேற்று முன் தினம் வெளியானது. இதில் சின்னதுரை 600க்கு 469 மதிப்பெண்களை பெற்று சாதனை படைத்துள்ளார். அவர் தமிழ்-71, ஆங்கிலம்-93, பொருளாதாரம்-42, கணினி பயன்பாடு-94, கணக்குப்பதிவியல்-85, பொருளாதாரம்-84 வீதம் மதிப்பெண் பெற்றுள்ளார்.
அவரை முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் அன்பில் மகேஷ், இயக்குநர் பா.ரஞ்சித் உள்ளிட்டோர் நேரில் அழைத்து பாராட்டுகளை தெரிவித்தனர். இதுகுறித்து சின்னத்துரை செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது: நான் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற போது ஆசிரியர்கள் நேரில் வந்து பாடங்களை கற்றுக் கொடுத்தனர்.
மருத்துவமனையில் இருந்தபடியே தேர்வையும் எழுதி முடித்தேன். பி.காம் படித்துவிட்டு சி.ஏ. படிக்க வேண்டும் என்பதே எனது விருப்பம் என்றார். அப்போது சின்னத்துரையிடம் செய்தியாளர்கள், நீங்கள் சில பேரால் பாதிக்கப்பட்டிருக்கீங்க, அவர்களுக்கு என்ன சொல்ல விரும்புறீங்க என கேட்டனர். அதற்கு சின்னத்துரை" அவர்களும் என்னை மாதிரி படித்து நல்ல நிலைமைக்கு வரவேண்டும் என விரும்புகிறேன் என்றார்.
இந்த நிலையில் சின்னத்துரையை தாடி பாலாஜி நேரில் சந்தித்து வாழ்த்துகளை கூறினார். அப்போது தாடி பாலாஜி கூறுகையில் சின்னத்துரை பல தடைகளை கடந்து பிளஸ் 2 தேர்வில் சாதனை படைத்துள்ளார். அவர் முதல்வரை சந்தித்த பிறகு பத்திரிகையாளர்கள் கேட்ட கேள்விக்கு சின்னத்துரை சொன்ன பதிலால்தான் நான் இங்கு வந்து அவரை சந்திக்கிறேன். நிருபர் ஒருவர் நீங்கள் சில பேரால் பாதிக்கப்பட்டிருக்கீங்க, அவர்களுக்கு என்ன சொல்ல விரும்புறீங்க என கேட்டனர். அதற்கு சின்னத்துரை" அவர்களும் என்னை மாதிரி படித்து நல்ல நிலைமைக்கு வரவேண்டும் என விரும்புகிறேன் என்றார்.
முதல்வரும் சின்னத்துரையின் படிப்புக்கு தேவையான உதவிகளை செய்வதாக தெரிவித்துள்ளார். அதையும் தாண்டி அவருக்கோ அவருடைய தங்கையின் படிப்புக்கோ எந்த உதவி தேவைப்பட்டாலும் நான் செய்ய தயாராக இருக்கிறேன் என தெரிவித்துள்ளார்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications