புளியோதரை பஞ்சாயத்தே முடியலை.. அதிமுக மாநாட்டுக்கு 50 பவுனுடன் போன மனைவியை காணலையாம்- கணவன் கதறல்!
திருநெல்வேலி: மதுரை அதிமுக மாநாட்டு சென்ற மனைவி இன்னமும் வீடு திரும்பவில்லை என திருநெல்வேலி போலீசில் ராதாபுரம் ஜேசுபாதம் அளித்த புகார் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்ட பின்னர் மதுரையில் முதல் முறையாக பிரம்மாண்ட மாநாடு ஆகஸ்ட் 20-ந் தேதி நடத்தப்பட்டது. தமிழ்நாடு முழுவதும் லட்சக்கணக்கான அதிமுக தொண்டர்கள் இம்மாநாட்டில் பங்கேற்றனர்.

அதிமுக மதுரை மாநாடு மூலம், அக்கட்சியின் ஒற்றைத் தலைமை எடப்பாடி பழனிசாமிதான்; அவருக்கு பின்னால்தான் அதிமுக தொண்டர்கள் உள்ளனர் என்பதை நிரூபித்திருப்பதாக அரசியல் பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர். அதிமுக சிதறவில்லை- சிதையவில்லை; முழு பலத்துடன் இருக்கிறது என்பதை வெளிப்படுத்தக் கூடியதாகவும் மதுரை மாநாடு அமைந்தது என்கின்றனர். அதேநேரத்தில் மதுரை மாநாட்டில் டன் கணக்கில் சாப்பாடு வீணானது உள்ளிட்ட சர்ச்சைகளும் எழுந்தன.
இந்நிலையில் திருநெல்வேலி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு ராதாபுரம் அருகே கன்னங்குளத்தைச் சேர்ந்த ஜேசுபாதம் என்பவர் கொடுத்த புகார் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அம்மனுவில் ஜேசுபாதம் கூறியிருப்பதாவது: என் மனைவி தங்க செல்வம், அதிமுக மகளிர் அணியில் நிர்வாகியாக இருக்கிறார். உள்ளாட்சித் தேர்தலில் ஊராட்சி குழு தலைவர் பதவிக்கு போட்டியிட்டு தோல்வி அடைந்தார். அவருக்கு 200 பவுன் நகை வாங்கி கொடுத்துள்ளேன். 18 வயதில் மகளும் 17 வயதில் மகனும் இருக்கின்றனர்.
கடந்த ஆகஸ்ட் 17-ந் தேதியன்று மதுரை மாநாட்டுக்கு செல்வதாக கூறி வீட்டை விட்டு சென்றார் தங்க செல்வம். ஆனால் இப்போது வரை மனைவி தங்க செல்வம் வீட்டுக்கு திரும்பவில்லை. அதிமுகவை சேர்ந்த பிரமுகர் ஒருவர் மீதுதான் சந்தேகம் உள்ளது. அவர்தான் என் மனைவியை லாட்ஜில் கடத்தி வைத்திருப்பதாக சந்தேகிக்கிறோம். என் மனைவி, மதுரை மாநாட்டுக்கு செல்லும் போது 50 பவுன் நகையும் அணிந்திருந்தார். அவரை பாதுகாப்பாக மீட்டுத் தர வேண்டும். இவ்வாறு ஜேசுபாதம் தமது மனுவில் கூறியிருந்தார்.
ஜேசுபாதத்தின் இந்த மனு மீது நெல்லை போலீசார் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்!












Click it and Unblock the Notifications