நெல்லை எம்பி ஞானதிரவியம் மகனால் 4 ஏக்கர் நிலம் அபேஸ்? கலெக்டர் கார் முன்பாக அழுதபடி மூதாட்டி தர்ணா
நெல்லை: நெல்லை நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினர் ஞானதிரவியத்தின் மகன் சேவியர் ராஜா, தனது 4 ஏக்கர் நிலத்தை மோசடியாக ஏமாற்றி எழுதி வாங்கிக் கொண்டார் என மூதாட்டி ஒருவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் கொடுத்திருக்கிறார்.
தனது நிலத்தை மீட்டுக் கொடுக்கக் கோரி மாவட்ட ஆட்சியர் கார் முன்னே அமர்ந்து மூதாட்டி மாலதி கண்ணீர் வடித்த நிகழ்வு காண்போரையும் கலங்க வைத்தது.

நெல்லையில் சி.எஸ்.ஐ. மதபோதகர் மீது தாக்குதல் நடத்திய விவகாரத்தில் நெல்லை திமுக எம்.பி. ஞானதிரவியம் உட்பட 36 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அத்துடன் திமுக மேலிடமும் ஞானதிரவியம் எம்.பி.யை கடுமையாக கண்டிக்கவும் செய்தது. இதனால் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அவருக்கு மீண்டும் சீட் கிடைக்குமா என்பதே சந்தேகம் தான்.
இந்தச் சூழலில் நெல்லை திமுக எம்.பி. ஞானதிரவியம் மகன் சேவியர் ராஜா மீது மானுரை சேர்ந்த மூதாட்டி ஒருவர் பரபரப்பு புகார் ஒன்றை முன் வைத்திருக்கிறார். மானூரில் தனக்குச் சொந்தமான 4 ஏக்கர் நிலத்தை ஞானதிரவியம் எம்.பி. மகன் மோசடியாக ஏமாற்றி எழுதி வாங்கிவிட்டதாக தெரிவித்திருக்கிறார். அவரிடமிருந்து தனது நிலத்தை மீட்டுக்கொடுக்குமாறு நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் கொடுத்திருக்கிறார்.
இதனிடையே வராண்டாவில் நின்று கொண்டிருந்த மாவட்ட ஆட்சியர் கார் முன்பு அமர்ந்து அழுத மூதாட்டி, தனது நிலத்தை மீட்டுக்கொடுக்குமாறு வேண்டினார். இதையடுத்து காவல்துறையினர் அவரை அங்கிருந்து அழைத்துச் சென்று நடந்த விவரத்தை கேட்டறிந்து விசாரணை நடத்துவதாக உறுதியளித்தனர். பட்ட காலிலேயே படும் என்பதை போல் பாதிரியார் தாக்கப்பட்ட சர்ச்சையிலிருந்து இப்போது தான் ஒருவழியாக ஞானதிரவியம் மீண்டு வந்தார்.
அதற்குள் அவரது மகன் மூலம் அடுத்த சர்ச்சை தேடி வந்திருக்கிறது. மூதாட்டியின் புகார் குறித்து காவல்துறையினர் உரிய விசாரணை நடத்தி வருவதால் விசாரணை முடிவுக்கு பிறகே என்ன நடந்தது என்ற முழு விவரம் தெரியவரும்.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications