நெல்லை, தென்காசி பகுதிகளில் நில அதிர்வு? பகல் 12 மணிக்கு குலுங்கிய வீடுகள்! அலறி ஓடிய மக்கள்
நெல்லை: நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம், தென்காசியின் சில பகுதிகளில் திடீரென நில அதிர்வு ஏற்பட்டதால் பொதுமக்கள் அலறி அடித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியே ஓடி வந்தனர்.
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதியில் பாபநாசம், விக்கிரசிங்கபுரம், கல்லிடைக்குறிச்சி, மணிமுத்தாறு உள்ளிட்ட பகுதிகளிலும் அதே போல் தென்காசி மாவட்டத்தில் கடையம், பொட்டல்புதூர், முதலியார்பட்டி, ஆழ்வார்குறிச்சி, வாகைக்குளம், கல்யாணிபுரம், கடையம் உள்ளிட்ட இடங்ளிலும் திடீரென நில அதிர்வு உணரப்பட்டதாக மக்கள் தெரிவிக்கிறார்கள்.

சரியாக இன்று பகல் 12 மணி அளவில் வீடுகள் பயங்கர சப்தத்துடன் குலுங்கியதால் அதிர்ச்சி அடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறினர். இது குறித்து நெல்லை மாவட்ட ஆட்சியருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் கூறுகையில் நெல்லையில் சில பகுதிகளில் நில அதிர்வுகள் இருந்தால் நில நடுக்க ஆணையம் அதிகாரப்பூர்வ தகவலை வெளியிடும். ஆணால் இதுவரை அது போன்ற தகவல் கிடைக்கவில்லை.
இது குறித்து விசாரித்து வருகிறோம் என்றார். மேற்கு தொடர்ச்சி மலையடிவாரப் பகுதிகளில் பல கிராமங்களில் நில அதிர்வு உணரப்பட்டதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இந்த நில அதிர்வால் யாருக்கும் காயங்களோ பொருட் சேதமோ ஏற்படவில்லை.
-
மாதம் 60 ஆயிரம் சம்பளத்தில் நெல்லையில் வேலை! 82 காலியிடங்கள்.. சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பு -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications