பல் பிடுங்கிய பல்வீர் சிங்.. பாதிக்கப்பட்ட இளைஞரின் மருத்துவ அறிக்கை வெளியீடு.. அதிர்ச்சி தகவல்
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் ஏஎஸ்பி பல்வீர் சிங், விசாரணையின்போது கொடூரமான முறையில் பற்களை பிடுங்கி சித்ரவதை செய்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதுபற்றி தீவிர விசாரணை நடந்து வரும் நிலையில் பாதிக்கப்பட்டதாக கூறப்படும் நபரின் மருத்துவ அறிக்கை ஒன்று வெளியாகி உள்ளது. இதில் ஷாக் தகவல் இடம்பெற்றுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் ஏஎஸ்பியாக இருந்தவர் ஐபிஎஸ் அதிகாரி பல்வீர் சிங். ஹரியானாவை சேர்ந்த இவர் 2020ல் பணிக்கு சேர்ந்தார். கடந்த ஆண்டு முதல் அம்பாசமுத்திரத்தில் பணி செய்து வருகிறார். இவர் விசாரணையின்போது போலீஸ் நிலையத்தில் வைத்து பற்களை பிடுங்குவதாக புகார்கள் எழுந்தன.

அம்பாசமுத்திரம் பகுதியில் சிறுசிறு குற்றங்களில் ஈடுபடும் நபர்களை கைது செய்து அவர்களின் பற்களை பிடுங்கியதாக பகிரங்களாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இதில் பாதிக்கப்பட்ட பலரும் பல்வீர் சிங்கிற்கு எதிராக குரல் கொடுக்க துவங்கிய நிலையில் இந்த சித்ரவதை சம்பவம் வெளியே தெரியவந்தது.
பல்வீர் சிங்கிற்கு தமிழ்நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றப்பட்ட பல்வீர் சிங் தற்போது சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். அதேபோல் மேலும் இன்ஸ்பெக்டர்கள் உள்பட பலரும் தூக்கியடிக்கப்பட்டுள்ளனர். மேலும் பல்வீர் சிங் பல் பிடுங்கிய விவகாரம் குறித்து அமுதா ஐஏஎஸ் விசாரணை நடத்தி வருகிறார்.

இந்நிலையில் தான் தற்போது ஒருவரின் மருத்துவ அறிக்கை வெளியாகி உள்ளது. அதாவது அம்பாசமுத்திரம் அருகே விகே புரம் போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த மாதம் 10ம் தேி அடிதடி வழக்கில் அடையகருங்குளம் பகுதியை சேர்ந்த அருண்குமார் மற்றும் அவரது 17 வயது சகோதரர் கைது செய்யப்பட்டனர். இதில் விகே புரம் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தப்பட்டது. இந்த விசாரணையின்போது அருண் குமாரை ஏஎஸ்பி மற்றும் போலீசார் தாக்கியதாக அவரது தாய் குற்றம்சாட்டி இருந்தார். மேலும் பற்களை உடைதத்தாக புகார் கூறினார்.
இந்நிலையில் தான் அருண் குமார் காவல் கிணறு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். அங்கு அவர் சிகிச்சை பெற்ற மருத்துவ அறிக்கை தற்போது வெளியாகி உள்ளது. அதில் கடந்த 31ம் தேதி அருண்குமார் சிகிச்சை பெற்றதாக கூறப்பட்டுள்ளது. மேலும் அவரது பல் 20 நாட்களுக்கு முன்பாக சேதப்படுத்தப்பட்டு இருப்பதாகவும், அவருக்கு சொத்தை பற்கள் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதோடு மொத்தம் 7 பற்கள் சேதமாக இருப்பதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. தற்போது இதுதான் அதிர்ச்சியளிக்கும் செய்தியாக உள்ளது. அதாவது விகேபுரம் போலீஸ் நிலையத்தில் அருண் குமார் கடந்த மாதம் 10ம் தேதி விசாரணைக்கு சென்றார். அதன்பிறகு கடந்த மாதம் 31ம் தேதி சிகிச்சை பெற்றார்.
இந்த இரண்டு சம்பவத்துக்கும் இடையே 20 நாட்கள் உள்ள நிலையில் மருத்துவ அறிக்கையிலும் 20 நாட்களுக்கு முன்பாக அருண் குமாரின் பல் சேதப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அருண்குமாரை போலீசார் துன்புறுத்தியதாக அவரது தாயார் ஏற்கனவே குற்றம்சாட்டிய நிலையில் இந்த மருத்துவ அறிக்கை என்பது அதனை உறுதி செய்யும் வகையில் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
பத்திரப்பதிவு செய்ய இனி சார் பதிவாளர் அலுவலகங்களுக்கு நேரில் செல்ல வேண்டாம்! தமிழக அரசு அதிரடி! -
செந்தில் பாலாஜி கைதாகிறாரா? தவெக கடிதத்திற்கு ஓகே சொன்ன ஆளுநர்! மறுபடியும் முதல்ல இருந்தா? -
திமுகவை சீண்டும் துரை வைகோ.. இன்னைக்கு என்ன சொல்லி இருக்காருன்னு பாருங்க! புது பஞ்சாயத்து -
கமல், கார்த்திக் கூடதான் கட்சி ஆரம்பிச்சாங்க! என்னாச்சு? அண்ணாமலைலாம் ஒரு ஆளே இல்லை! முஸ்தபா விமர்சனம் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
விஜய் வந்தும் வேலைக்கு ஆகல! சர்ச்சையை கிளப்பும் சட்டம் ஒழுங்கு.. டிஜிபி அதிரடி உத்தரவு! -
பேய் மழை வெளுக்கப் போகுது.. கோவை, நீலகிரியில் மிக கனமழை! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
கோவை, நீலகிரியில்.. கன முதல் மிக கனமழை பெய்யும்! மொத்தம் 11 மாவட்டங்களுக்கு வார்னிங்! -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி












Click it and Unblock the Notifications