பியூட்டிஷியன்ஸ்.. 2 பேருக்கும் ஒரே கணவன்.. 2 பேருக்கும் ஒரே "தொழில்".. கலங்கிய கயத்தாறு.. போலீஸ் செம
கயத்தாறு பஸ்ஸில் பணத்தை திருடிய அக்கா தங்கை 2 பேர் கைதாகி சிறையில் உள்ளனர்
நெல்லை: கயத்தாறு ரோட்டில், அரசு பஸ்ஸை, பின்னாடியே காரில் போலீஸார் விரட்டி சென்று மடக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.. என்ன காரணம்?
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை சாந்தி நகரை சேர்ந்தவர் செய்யது அலி பாத்திமா.. 39 வயதாகிறது.. இவர் கயத்தாறு அருகே மானங்காத்தான் கிராமத்தில் உள்ள உறவினரின் துக்க வீட்டுக்கு செல்வதற்காக தன்னுடைய அம்மா, சபானியுடன் கிளம்பினார்.
2 பேரும் நெல்லையில் இருந்து மதுரை சென்ற அரசு பஸ்சில் புறப்பட்டு சென்றனர்... அப்போது பஸ்சில் பாத்திமாவின் பக்கத்தில் 2 இளம்பெண்கள் உட்கார்ந்திருந்தனர்..

நைஸா வேலை
அவர்கள் பாத்திமாவிடம் இருந்த மணிபர்சை திருடிவிட்டனர்.. துணிப்பையில் பர்ஸில் சுற்றி வைத்திருந்துள்ளனர். அதில், ரூ.4,500 மற்றும் ரூ.17 ஆயிரம் மதிப்பிலான செல்போன், ஏடிஎம். கார்டு போன்றவை இருந்தன... இந்த பர்ஸைதான் நைஸாக எடுத்துவிட்டனர்.. கயத்தாறு பஸ் ஸ்டாண்டு வந்ததும், பாத்திமா, தன்னுடைய அம்மாவுடன் பஸ்சில் இருந்து கீழே இறங்கினார்... அப்போதுதான் கையில் துணிப்பையில் இருந்த மணிபர்ஸ் திருடு போனதை அறிந்து அதிர்ச்சி அடைந்து கூச்சல் போட்டார்கள்.. இதுகுறித்து கயத்தாறு போலீஸ் ஸ்டேஷனுக்கும் தகவல் தந்தார்கள்... மேலும் தங்கள் அருகில் உட்கார்ந்திருந்த 2 பெண்கள் மீது தங்களுக்கு சந்தேகம் இருப்பதாக கூறி, அவர்களின் அடையாளமும் தெரிவித்து, புகாரையும் தந்தனர்..

மணிபர்ஸ்
போலீசாரும் அந்த புகாரின் பேரில், விசாரணையில் இறங்கினர்.. ஒரு காரில் ஏறி, அந்த பஸ்சை, பின்னாடியே ஃபாலோ செய்தனர்.. வேகமாக காரை ஓட்டி, கோவில்பட்டியில் பஸ்ஸை வழிமறித்துவிட்டனர்.. அந்த பஸ்ஸுக்குள் பாத்திமாவின் பக்கத்தில் உட்கார்ந்திருந்த அந்த இளம்பெண்களையும் பிடித்து செய்தனர். அப்போது அவர்களிடம் பாத்திமாவின் மணிபர்ஸ் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அவர்களை அழைத்து வந்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டனர். அப்போதுதான் அவர்கள் திருச்சி ஸ்ரீரங்கம் பகுதியை சேர்ந்தவர்கள் என்பதும், மது, பிரியா என்பவது அவர்களது பெயர் என்பதும் தெரியவந்தது..

நைஸா திருட்டு
பிரியாவுக்கு 23 வயது, மதுவுக்கு 26 வயதாகிறது.. 2 பேருமே அக்கா, தங்கைகள்.,. 2 பேருக்குமே திருட்டு, பிக்பாக்கெட்தான் தொழில்.. 2 பேருக்குமே ஒரே கணவன்.. ஒருவரையே இருவரும் திருமணம் செய்துள்ளனர்.. காலையில் வேலைக்கு போவதுபோல, திருடுவதற்கு கிளம்பி செல்வார்களாம்.. பஸ்சில் சில்லறை நாணயங்களை கீழே போட்டு விடுவார்களாம்.. பயணிகளை இப்படி திசை திருப்பி, அவர்களின் செல்போன், பர்ஸ் போன்றவற்றை நைஸாக திருடிவிடுவார்களாம்.. பாத்திமாவிடமும் இதே டெக்னிக்கைதான், செயல்படுத்திஉள்ளனர்..

பியூட்டிஷியன்
இவர்கள் பாத்திமாவிடம் மட்டுமல்லாமல், அதே பஸ்சில் மற்றொரு பெண்ணிடமும் மணிபர்ஸையும் திருடியிருக்கிறார்கள்.. அதில் ரூ.350 பணம் இருந்திருக்கிறது.. எவ்வளவு பணம் இருக்கிறது என்பதெல்லாம் பார்ப்பதில்லையாம்.. அந்த பஸ்ஸில் ஏறினால், கையில் எது கிடைக்கிறதோ, அதை அபேஸ் செய்வதுதான் இவர்களின் வேலையாம்.. இன்னொரு ஹைலைட் தகவலும் வெளியாகி உள்ளது.. பிரியாவும், மதுவும், பியூட்டிஷியன்களாம்.. திருச்சியில் ஒரு பியூட்டி பார்லரில் வேலை பார்த்திருக்கிறார்கள்.. இதில் மது கொஞ்சம் ஓவர்டைம் பார்க்கிறவராம்.. அவர்மீதுதான் நிறைய திருட்டு கேஸ்கள் ஏற்கனவே பதிவாகி உள்ளதாக சொல்கிறார்கள். இப்போதைக்கு அக்கா - தங்கச்சி 2 பேருமே கம்பி எண்ணி கொண்டிருக்கிறார்கள்.












Click it and Unblock the Notifications