Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தவிக்குது தாம்பரம்.. நெளியுது நெல்லை.. திமுக கிட்ட நயினார் வீசிய குண்டு.. திருநெல்வேலியில் 3 தலைகள்

Subscribe to Oneindia Tamil

திருநெல்வேலி: நெல்லையில் பாஜகவின் பிரச்சாரம் அனலடித்து கொண்டிருக்கிறது. அதைவிட அதிகமாக, சர்ச்சைகளும், பரபரப்புகளும் நயினாரை சுற்றி வலம் வந்து கொண்டிருக்கின்றன. என்னவாம்?

தென் மாவட்டங்களை பொறுத்தவரை தேர்தலில் "ஜாதி"யே முக்கிய பங்காற்றும் நிலைமையில் உள்ளது.. இதை மையப்படுத்தியே திராவிட கட்சிகளை போலவே, தமிழக பாஜகவும் காய்களை நகர்த்தி வருகிறது.

Can Nainar Nagendran win in Nellai and Are these Major Strategies of Tamil Nadu BJP in Tirunelveli Constitution
நாடார் வாக்குகள்: தென் மாவட்டங்களில் பெரும்பான்மை சமுதாயமாக உள்ளது நாடார் வாக்குகளாகும்.. திருநெல்வேலி , தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, விருதுநகர் தொகுதிகளில் நாடார் சமுதாய வாக்குகளே அதிகம்... தனித்தொகுதி என்று எடுத்துக் கொண்டால், தென்காசியிலும் நாடார் வாக்குகள் கணிசமாகவே உள்ளது...

நெல்லையை எடுத்துக் கொண்டால், இந்த முறை போட்டியிட பாஜகவில் பலரும் ஆர்வம் காட்டியிருக்கிறார்கள். ஆனால், கடந்த ஒருவருடமாகவே நெல்லையை மையமாக வைத்துதான், தொகுதியில் களப்பணியில் மும்முரமாகி வந்தார் நயினார் நாகேந்திரன்.. எப்படியும் இந்த முறை தனக்கு சீட் கிடைக்கும் என்ற நம்பிக்கையிலேயே, களப்பணியாற்றி வந்தார். அதனால், நெல்லையை யாருக்குமே விட்டுத்தர முன்வரவில்லையாம்.


பாளையங்கோட்டை:
அதுமட்டுமல்ல, 2 மாதங்களுக்கு முன்பு, பாளையங்கோட்டையில் பிரதமர் பங்கேற்ற பொதுக்கூட்டத்தை முன்னின்று நடத்தி காட்டியதே நயினார்தான்.. இறுதியில், நயினார் ஆசைப்பட்டதுபோலவே, நெல்லை தொகுதி கைக்கு வந்துசேர்ந்துவிட்டது.. பிரச்சாரத்தையும் விறுவிறுவென ஆரம்பித்தார்.

அதிலும், கைலாசபுரத்தில் 3 பெண்கள் ஒரே நேரத்தில் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். அப்போது ஒரு தர்பூசணி பழத்தில், மோடி - அமித்ஷா - மத்திய அமைச்சர் எல்.முருகன் - கூட்டணி கட்சித் தலைவர்களின் உருவம் வரையப்பட்டிருந்தது.. அதேபோல, தாமரை சின்னம் பொறிக்கப்பட்ட சேலையை, 100-க்கும் மேற்பட்ட பாஜக பெண்கள் ஒரே நேரத்தில் அணிந்துவந்து வாக்கு கேட்டதால், கைலாசபுரமே திகைத்துவிட்டது.

அடுத்த சிக்கல்: அதேசமயம், சர்ச்சையையும் இழுத்துவிட்டது. இத்தனை சேலைகளும், வேட்பாளர் சார்பில் பெண்களுக்கு வழங்கப்பட்டதா? அல்லது கட்சி சார்பில் வழங்கப்பட்டதா என்ற சந்தேகம் தேர்தல் அதிகாரிகளுக்கு வந்துவிட்டது.. ஒருவேளை, வாக்காளர்களுக்கு இதுபோல சேலை - வேட்டி தரப்பட்டிருந்தால், அதுவும் தேர்தல் விதிமீறல் என்றே கருதப்படும் என்றார்கள். இந்த விவகாரம் முடிவதற்குள்ளேயே, அடுத்த விவகாரம் தாம்பரத்தில் வெடித்தது.


கடந்த 6-ந்தேதி இரவு தாம்பரம் ரயில்வே ஸ்டேஷனில் பறக்கும் படையினரால் ரூ.4 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது. நயினாருக்கு சொந்தமான ஓட்டல் மேனேஜர் சதீஷ், நவீன், பெருமாள் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

சோதனை: பின்னர் நயினாருக்கு சொந்தமான ஓட்டல் உள்ளிட்ட இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டது. ஆக, ஒருபக்கம் வருமானவரித்துறை + மறுபக்கம் தாம்பரம் போலீசார் இந்த விவகாரத்தை கையில் எடுத்துள்ளனர்.. இப்போது, நயினார் நாகேந்திரன் நேரில் விசாரணைக்கு ஆஜராக தாம்பரம் போலீசார் சம்மனும் அனுப்பியிருக்கிறார்கள்.

இதுகுறித்து நேற்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, இப்போதுவரை தனக்கு எவ்வித சம்மன் வரவில்லை என்று நயினார் கூறியிருக்கிறார். அமைச்சர் துரைமுருகன் தொடர்பான இடத்தில் 5 கோடி ரூபாய் பறிமுதல் செத்யார்களே, காங்கிரஸ் கட்சியை சார்ந்தவர்கள் இடத்தில் 4 கோடி ரூபாய் பறிமுதல் செய்தார்களே, அவர்களுக்கெல்லாம் சம்மன் வழங்கப்படவில்லையே ஏன்? என்று கேட்கிறார் நயினார் நாகேந்திரன்.


வாகனம்: என் வாகனத்தில் மட்டும் தினமும் 3 முறை சோதனை போடறாங்க.. நான் வெற்றி பெற்று விடக்கூடாது என்பதற்காகவே, 3 அமைச்சர்கள் தொகுதியில் முகாமிட்டிருக்கிறார்கள் என்றெல்லாம் குண்டை தூக்கி போட்டுள்ளார் நயினார் நாகேந்திரன். இப்படிப்பட்ட பரபரப்புகளுக்கிடையேதான், நயினாருக்கு ஆதரவை திரட்ட இன்று பிரதமர் மோடி திருநெல்வேலி வருகிறார்.

அம்பாசமுத்திரத்தில் நடைபெறும் கூட்டத்தில் மோடி பங்கேற்க உள்ள நிலையில், நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி, தூத்துக்குடி வேட்பாளர்கள், நெல்லை 6 சட்டமன்ற தொகுதியைச் சார்ந்த 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளப்போகிறார்களாம்.

பரபரப்பு: வேட்பாளர்களை அறிவிக்கும் முன்பேயே, நெல்லை தொகுதியில், பாஜக வேட்பாளராக தன்னை தானே கட்சி அறிவித்துக்கொண்ட நயினார் நாகேந்திரனுக்கு, ஏதாவது சிக்கல் கிளம்பியவாறே உள்ள நிலையில், திமுக மீதே பந்தை திருப்பி வீசியிருப்பது மிகுந்த பரபரப்பை தந்து வருகிறது.. அடுத்து என்னாகுமோ தெரியவில்லை.. பொறுத்திருந்து பார்ப்போம்...!!!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+