Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நயினார் நாகேந்திரன் ரூ.1500 கோடி சொத்துகளை மறைத்ததாக வழக்கு.. நெல்லை லோக்சபா தேர்தல் ரத்தாகிறதா?

Subscribe to Oneindia Tamil

நெல்லை: நெல்லை மக்களவைத் தொகுதியில் தேர்தலை நிறுத்தி வைக்கக் கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாஜக நெல்லை தொகுதி வேட்பாளர் நயினார் நாகேந்திரன் சொத்து விவரங்களை மறைத்ததாக வழக்கு தொடரப்பட்டுள்ளது. தனது வேட்பு மனுவில் ரூபாய் 1500 கோடி சொத்துகள் பற்றிய விவரங்களை தெரிவிக்கவில்லை என்றும், பல்வேறு தகவல்களை மறைத்து நயினார் நாகேந்திரன் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார் என்றும் மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் மகாராஜா என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஒரு மனுவை தாக்கல் செய்துள்ளார்.

Case against BJP candidate Nainar nagendran seeking suspend election in nellai

நயினார் நாகேந்திரன் மீது குற்றவியல் வழக்கு ஒன்று நிலுவையில் உள்ளது. ஆனால், தனது வேட்பு மனுவில் அது பற்றிய விவரங்களை தெரிவிக்காமல் மறைத்துள்ளார். மேலும் பாஜக வேட்பாளரா, சுயேட்சை வேட்பாளரா என்ற விவரத்தையும் பூர்த்தி செய்யவில்லை, அவரது வேட்பு மனு முழுமையாக பூர்த்தி செய்யப்படவில்லை என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நயினார் நாகேந்திரனின் வேட்பு மனு குளறுபடி தொடர்பாக தேர்தல் அதிகாரியிடம் புகார் அளித்தும் உரிய முறையில் விசாரணை நடத்தாமல் நயினார் நாகேந்திரனின் வேட்பு மனு ஏற்கப்பட்டுள்ளது என்றும், முறையாக செயல்படாத தேர்தல் அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்றும் அவரது மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நயினார் நாகேந்திரனுக்கு எதிராக தொடரப்பட்டுள்ள இந்த வழக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளையில் விரைவில் விசாரணைக்கு வர உள்ளது. கடந்த 2019 தேர்தலின்போது பண பட்டுவாடா புகார்களால் வேலூர் தொகுதியில் தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டது போல நெல்லையில் இந்த முறை தேர்தல் நிறுத்தி வைக்கப்படுமா என்ற கேள்விகள் எழுந்துள்ளன.

நயினார் நாகேந்திரன் தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் அடுத்தடுத்து வெடித்து வருகின்றன. பணப் பட்டுவாடா செய்ததாக புகார், அவருக்காக ரயிலில் ரூபாய் 4 கோடி கொண்டு செல்லப்பட்டதாக புகார்கள் எழுந்தன. அனுமதிக்கப்பட்ட நேரத்தை கடந்து பிரச்சாரம் மேற்கொண்டதாக அவர் மீது வழக்குப்பதிவும் செய்யப்பட்டுள்ளது.

ரூபாய் நான்கு கோடி சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக வருமான வரி துறையின் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தாம்பரத்தில் ரயிலில் ரூ.4 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் திருநெல்வேலி தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் பெயர் அடிபட்டு வருகிறது. அவரை தகுதி நீக்கம் செய்யவேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு திமுக உள்ளிட்ட கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மக்களவைத் தேர்தலில், நெல்லை மக்களவை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸ், அதிமுக வேட்பாளர் ஜான்சி ராணி, பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சத்யா உள்ளிட்ட 23 பேர் போட்டியிடுகின்றனர். இதில் முக்கிய கட்சிகளின் வேட்பாளர்களுக்கு இடையே நான்கு முனை போட்டி நிலவுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+