விமானப்படை பல முறை சொல்லியும்.. கோட்டைவிட்ட தமிழக அரசு! ஏர் ஷோ உயிரிழப்புகள்.. எல்.முருகன் தாக்கு
நெல்லை: சென்னையில் நேற்று நடந்த விமானப் படை சாகச நிகழ்ச்சியைப் பார்க்க வந்த பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகள் கூடச் செய்து தரப்படவில்லை என்று எதிர்க்கட்சிகள் விமர்சிக்கத் தொடங்கியுள்ளனர். இதற்கிடையே விமானப்படை பலகட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் தமிழ்நாடு அரசு அதற்கேற்ப நடவடிக்கைகள் எடுக்கவில்லை என்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் விமர்சித்துள்ளார்.
இந்திய விமானப் படை 92 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளதைக் கொண்டாடும் வகையில், நேற்றைய தினம் சென்னை மெரினாவில் விமான சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. இதைப் பார்க்கப் பெருந்திரளான மக்கள் திரண்டனர்.

கடும் விமர்சனம்: சுமார் 15 லட்சத்திற்கும் அதிகமானோர் இந்த நிகழ்ச்சியை நேரில் பார்த்து ரசித்துள்ளனர். இது லிம்கா சாதனை புத்தகத்திலும் இடம்பெற்றுள்ளது. அதேநேரம் இந்த நிகழ்ச்சியைப் பார்க்க வந்த மக்களுக்கு அடிப்படை வசதிகள் முறையாகச் செய்து தரப்படவில்லை என்ற சொல்லப்படுகிறது.. நேற்று வான் சாகச நிகழ்ச்சியைப் பார்க்க வந்த 5 பேர் வெயில் காரணமாக உயிரிழந்தனர். இதையும் குறிப்பிட்டு எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.
இதற்கிடையே தமிழ்நாடு அரசு போதிய முன்னேற்பாடுகளைச் செய்யவில்லை என்று மத்திய இணை அமைச்சர் எல் முருகன் விமர்சித்துள்ளார். விமான துறை பலகட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் அதற்கேற்ப தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்று சாடியுள்ளார்.
எல் முருகன்: அதாவது திருநெல்வேலி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் நடக்கும் பல்வேறு நிகழ்வுகளில் தகவல் மற்றும் ஒலிபரப்பு துறை மத்திய இணை அமைச்சர் எல் முருகன் கலந்து கொண்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய எல் முருகன், "சென்னையில் நடந்த விமான சாகச நிகழ்ச்சியைப் பார்க்கச் சென்ற ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். இது மிகவும் வருந்தத்தக்கச் சம்பவம்.
தமிழ்நாடு அரசு மீது தாக்கு: இந்த நிகழ்ச்சி குறித்து தமிழ்நாடு அரசிடம் விமானப்படை அதிகாரிகள் பல கட்ட பேச்சுவார்த்தைகளை நடத்தியிருந்தனர். அவர்கள் ஆலோசனையைக் கேட்டு அதற்கேற்றார் போல் தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால், தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுக்கத் தவறிவிட்டது. சமாளிக்க முடியாத கூட்டத்தைத் தவிர்த்து இருக்கலாம் என்ற கனிமொழி கூட சொல்லி இருக்கிறார்.. தமிழக அரசால் முடியவில்லை என்ற உண்மையை அவர் டிவிட்டரில் சொல்லியுள்ளார். அதை வரவேற்கிறேன்" என்றார்.
போதைப் பொருள்: தொடர்ந்து பேசிய அவர், "தமிழ்நாட்டில் டாஸ்மார்க், மனமகிழ் மன்றத்தின் எண்ணிக்கையைத் தான் அதிகரித்துள்ளனர். இங்குப் பள்ளிகள் அருகிலேயே போதைப் பொருட்கள் புழக்கம் அதிகரிக்கிறது. இது பெற்றோர் மற்றும் சமூக ஆர்வலர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. திமுகவில் இருந்த முக்கிய நிர்வாகியே 3000 கோடி ரூபாய் போதைப்பொருள் விவகாரத்தில் கைது செய்யப்பட்டிருந்தார்.
போதைப் பொருள் விவகாரத்தில் ஒருவரையும் விடாமல் தொடர்புடைய அனைவர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்நாடு போலீசார் துரிதமாக இதில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த விவகாரத்தில் தமிழக அரசு மீதான தனது ஆதங்கத்தையே ஆளுநர் வெளிப்படுத்தியுள்ளார். தமிழ்நாட்டில் நிலைமை இப்படி இருக்கும் போது, இது குறித்து எதுவும் சொல்லாமல் மதுவிலக்கு மாநாடு என்ற மிகப் பெரிய நாடகத்தை திருமாவளவன் முதலமைச்சர் இணைந்து நடத்தியுள்ளனர்.
ஆட்சியைப் பிடிப்போம்: இரு மாநில தேர்தல் குறித்துப் பேசிய எல் முருகன், "கருத்துக் கணிப்புகளைப் பொய்யாக்கி காஷ்மீர், ஹரியானாவில் நிச்சயம் பாஜக ஆட்சியை அமைக்கும். காஷ்மீரில் இப்போது தான் மக்கள் சுதந்திரமாக நடமாடுகிறார்கள். மக்கள் சுதந்திரமாக வாக்களித்துள்ளனர். வால்மீகி பிரிவைச் சேர்ந்த மக்கள் 75 ஆண்டுக்குப் பிறகு முதல்முறையாக வாக்களித்துள்ளனர். தீவிரவாதம் அங்கு வெகுவாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications