எனக்கு குழந்தை இல்லை..அவங்க சந்தோஷமா இருக்கலாமா? பிஞ்சு குழந்தையை கொன்ற தங்கம்மாள் பகீர் வாக்குமூலம்
நெல்லை: நெல்லையில் மூன்று வயது சிறுவன் கொடூரமாக கொலை செய்யப்பட்டு உடல் வாஷிங்மெஷினுக்குள் ஒளித்து வைக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக தடயவியல் துறையினர் கொலை நடந்த வீட்டில் ஆய்வு நடத்தினர். அதில் சிறுவனை மூன்று மணி நேரத்திற்கு மேலாக சித்திரவதை செய்து கொலை செய்ததும், வீட்டு அருகே புதைக்க குழி தோண்டியதும் தெரியவந்துள்ளது. மேலும் தங்களுக்கு குழந்தை இல்லாத ஆத்திரத்தில் எதிர் விட்டு குழந்தையை கொலை செய்ததாக வாக்குமூலத்தை அளித்திருக்கிறார் கொலையாளியான தங்கம்மாள்.
நெல்லை மாவட்டம் இராதாபுரம் அருகே ஆத்தூர் குறிச்சியை சேர்ந்த விக்னேஷ்- ரம்யா என்ற தம்பதியினருக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். இதில் மூத்த சிறுவன் காலையில் பள்ளிக்கு சென்று விட்டான்.

மூன்று வயதுடைய இரண்டாவது மகன் சஞ்சய் வீட்டின் முன்பு காலை 9:30 மணி அளவில் விளையாடிக் கொண்டிருந்தான். பின்பு அவனை அங்கன்வாடியில் விடுவதற்காக தாய் ரம்யா தேடி உள்ளார். அப்போது குழந்தை அங்கு இல்லை.
இதனால் பதறிப் போய் உறவினர்கள் அனைவருடைய வீடுகளுக்கும் சென்று தேடியுள்ளார். எங்கு தேடியும் குழந்தை கிடைக்காத நிலையில், விக்னேஷ் இராதாபுரம் போலீசில் புகார் அளித்தார். புகார் வந்ததை அடுத்து அங்கு வந்த போலீசார், சிறுவன் குறித்து விக்னேஷின் குடும்பத்தினர் மற்றும் அந்த பகுதியில் வசித்தவர்களிடம் விசாரணை நடத்திக் கொண்டிருந்தனர். அப்போது விக்னேஷின் எதிர் வீடு பூட்டிய நிலையில் இருந்துள்ளது.
எதிர் வீட்டில் வசித்து வந்த தங்கமாளுக்கும் விக்னேஷின் தம்பதியினருக்கும் இடையே மனக்கசப்பும், முன் விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் தங்கம்மாள் வீட்டில் குழந்தையை தேடவில்லை. மேலும் இந்த சிறு குழந்தை வேற எங்கும் சென்று இருக்காது. எனவே தங்கம்மாள் வீட்டில் இருக்கலாம் என சந்தேகித்து கிராம மக்கள் போலீசாரிடம் கூறினர். போலீஸ் இன்ஸ்பெக்டர் உட்பட போலீசார் தங்கம்மாளின் வீட்டின் உள்ளே சென்றபோது அங்கிருந்து தங்கம்மாள் வாஷிங் மெஷின் இருந்து ஒரு சாக்கை வெளியே எடுத்து வைத்து விட்டு போலீசாரிடம் இருந்து தப்பியுள்ளார்.
தொடர்ந்து கிராமத்திற்குள் ஓடிய அவர், இடிந்து கிடந்த வீட்டிற்குள்ளே ஒளிந்து கொண்டார். அப்போது அந்த சாக்கை பிரித்துப் பார்த்தபோது சிறுவன் சஞ்சய் சடலமாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை கண்ட சஞ்சயின் பெற்றோர்கள் மற்றும் கிராம மக்கள் தரையில் விழுந்து அழுது புரண்டனர். இந்த நியைில் பதறி எடுத்து ஓட்டம் பிடித்த தங்கம்மாளை கிராம மக்களும், போலீசாரும் ஒவ்வொரு வீடாக தேடினர். பின்பு தங்கம்மாள் ஒரு இடிந்து கிடந்த வீட்டிற்குள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அப்போது அவர் தெரியாமல் கொலை செய்துவிட்டேன் என்றவாறு கை கூப்பியவரே போலீசாரை நோக்கி வந்தார். கிராம மக்கள் அவரை அடிக்க ஆத்திரத்தில் கை ஓங்கினார். இருப்பினும் தங்கம்மாளை கிராம மக்களிடம் இருந்து மீட்டு போலீசார், காரில் ஏற்றி ராதாபுரம் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். மேலும் சம்பவம் குறித்து அந்த கிராம மக்களிடையே விசாரணை நடத்திய போது தங்கம்மாளுக்கும், விக்னேஷ் -ரம்யா ஆகியோரிடையே மனக்கசப்பு இருந்ததாகவும் ஏற்கனவே முன் விரோதம் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
தங்கமாளினுடைய மகன் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு விபத்தில் சிக்கி உயிரிழந்ததாகவும், அந்த ஈமச்சடங்கில் இந்த விக்னேஷ் தம்பதியினர் கலந்து கொள்ளவில்லை என்றும் கூறப்படுகிறது. மேலும் மன விரக்தியில் தங்கம்மாள் தனிமையிலேயே வீட்டில் இருந்துள்ளார். வெளியே யாரிடமும் அதிகமாக பேச மாட்டார் என்றும் கிராம மக்கள் கூறி கூறுகின்றனர். இதனால் இந்த முன் விரதத்தினால் தான் அந்த பெண் குழந்தையை கொன்று விட்டாார் என கிராம மக்கள் போலீசாரிடம் கூறியுள்ளனர். தொடர்ந்து ராதாபுரம் போலீசார் தங்கம்மாளிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் கொலை நடந்த வீட்டில் தடையவியல் துறையினர் ஆய்வு நடத்தினர். அதில் சிறுவனை 3 மணி நேரத்திற்கும் மேலாக சித்திரவதை செய்து அடித்து கொலை செய்தது தெரிய வந்திருக்கிறது. மேலும் சிறுவன் சத்தம் போடக்கூடாது என்பதற்காக அவனது வாயைக் கட்டி துன்புறுத்தி இருக்கின்றனர். சிறுவன் மரணம் அடைந்த நிலையில் அவனது உடலை சாக்கு மூட்டையில் சுற்றி வாஷிங்மெஷினுக்குள் வைத்ததும், வீட்டுக்குப் பின்னே புதைக்க குழி தோண்டியதும் தெரிய வந்தது.
குழி தோண்ட முடியாததால் இரவு புதைத்துக் கொள்ளலாம் என நினைத்தபோது போலீசாரிடம் சிக்கியதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதற்கான தடயங்களை போலீசார் சேகரித்துள்ளனர். இந்த நிலையில் மூன்று வயது சிறுவனை எதற்காக கொலை செய்தேன் என்பது குறித்து தங்கம்மாளிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
அதில் தங்கம்மாளின் மகன் விபத்தில் இறந்ததால் அவர் மிக மன அழுத்தத்தில் இருந்துள்ளார். அப்போது எதிர் வீட்டில் சிறுவனின் குடும்பத்தினர் மகிழ்ச்சியாக வாழ்வதும், அவனுக்கு உடை உள்ளிட்டவை வாங்கி கொடுத்து அழகு பார்ப்பதும் தங்களுக்கு எரிச்சலாக இருந்ததாக கூறியுள்ளார். தங்களுக்கு மகன் இல்லாத நிலையில் எதிர் வீட்டினர் குழந்தையுடன் மகிழ்ச்சியாக வாழ்வதை பொறுத்துக் கொள்ள முடியாமல் குழந்தையை கொன்றதாக பரபரப்பு வாக்குமூலம் அளித்திருக்கிறார்.












Click it and Unblock the Notifications