திமுக முன்னாள் எம்.பி வேணுகோபால் காலமானார்.. 2009 தேர்தலில் இவர் செய்த ரெக்கார்ட் தெரியுமா?
திருவண்ணாமலை: திமுக முன்னாள் எம்.பி வேணுகோபால் உடல்நலக்குறைவால் இன்று காலமானார். திருப்பத்தூர், திருவண்ணாமலை தொகுதிகளில் எம்.பியாக இருந்துள்ளார் வேணுகோபால். 2009 லோக்சபா தேர்தலில் மிக அதிக வித்தியாசத்தில் பாமகவின் காடுவெட்டி குருவை தோற்கடித்தவர் இவர்.
திமுக மூத்த நிர்வாகியான வேணுகோபால், திமுகவில் பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார். 2 முறை சட்டமன்ற உறுப்பினராகவும், 5 முறை நாடாளுமன்ற உறுப்பினராகவும் செயல்பட்டுள்ளார் வேணுகோபால். 1977 மற்றும் 1984ல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல்களில் தண்டராம்பட்டு தொகுதியில் வென்று எம்.எல்.ஏவாக இருந்தார் வேணுகோபால்.

திருப்பத்தூர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக 1996, 1998, 1999, 2004 என தொடர்ச்சியாக நான்கு முறை வென்று எம்.பியாக இருந்தவர் திமுகவின் த.வேணுகோபால். பின்னர் தொகுதி மறுசீரமைப்பில் திருப்பத்தூர் எம்.பி தொகுதி நீக்கப்பட்டது.
கடந்த 2009 நாடாளுமன்றத் தேர்தலில் தான் திருவண்ணாமலை தொகுதி மீண்டும் உருவானது. திருவண்ணாமலை தொகுதியில் பாமகவின் முன்னணி தலைவரான காடுவெட்டி குருவை எதிர்த்து, திமுக சார்பில் வேணுகோபால் நிறுத்தப்பட்டார். திமுகவின் மூத்த முன்னோடிகளில் ஒருவரான வேணுகோபால் vs காடுவெட்டி குரு என கடுமையான போட்டி நிலவியது.
திருவண்ணாமலை தொகுதி தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் ஒரு சுற்று கூட விடாமல் வேணுகோபால் தொடர்ந்து முன்னணி வகித்து காடுவெட்டி குருவுக்கு அதிர்ச்சி கொடுத்தார். இறுதியில், ஒரு லட்சத்து 48 ஆயிரத்து 300 வாக்குகள் வித்தியாசத்தில் காடுவெட்டி குருவை தோற்கடித்தார் வேணுகோபால். 2009 லோக்சபா தேர்தலில் தமிழ்நாட்டிலேயே மிக அதிக வாக்கு வித்தியாசத்தில் வென்றவர் வேணுகோபால் தான்.
திருவண்ணாமலை மாவட்ட திமுகவின் மூத்த முன்னோடியாகவும், திருவண்ணாமலை தெற்கு மாவட்ட அவைத் தலைவராகவும் செயல்பட்டு வந்த வேணுகோபால் உடல்நலக் குறைவால் இன்று மறைந்துள்ளது திமுக தொண்டர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
Gen Z மீட்டிங் நடத்திய திமுக.. தவெக பலமான இடமே வேறு.. நெட்டிசன்கள் சொல்லும் விஷயம் -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி












Click it and Unblock the Notifications