பாஜக நயினார் நாகேந்திரன் போட்டியிடும் நெல்லை தொகுதி தேர்தல் ரத்தா? மீண்டும் திரும்பும் 2019 வேலூர்?
திருநெல்வேலி: லோக்சபா தேர்தலில் நெல்லை (திருநெல்வேலி தொகுதி) பாஜக வேட்பாளராகப் போட்டியிடும் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமானதாகக் கூறப்படும் ரூ4 கோடி சிக்கிய விவகாரத்தில் புதிய திருப்பமாக நெல்லை தேர்தலே ரத்து செய்யப்படும் சாத்தியத்தையும் மறுப்பதற்கில்லை என்கின்றன தேர்தல் ஆணைய வட்டாரங்கள். இதனால் பாஜகவில் ஒரு தரப்பினர் அதிர்ச்சியும் மற்றொரு தரப்பினர் பெரு மகிழ்ச்சியும் அடைந்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சென்னை தாம்பரத்தில் நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் பிடிபட்ட ரூ4 கோடி ரொக்க விவகாரம் பெரும் புயலைக் கிளப்பி உள்ளது. திருநெல்வேலி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் ஹோட்டல் ஊழியர்கள் 3 பேரிடம் இருந்து ரூ4 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான புளூ டைமண்ட் ஹோட்டல் உள்ளிட்ட பல இடங்களில் தேர்தல் அதிகாரிகளும் போலீசாரும் இணைந்து அதிரடி சோதனை நடத்தி பணக் கட்டுகளை பறிமுதல் செய்தனர். திருநெல்வேலியிலும் நயினார் நாகேந்திரனுக்கு நெருக்கமானவர் வீடுகளில் இருந்து பணம், பரிசு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

ஆனால் இந்த பணம் தமக்கு உரியது அல்ல; தம்மை சிலர் டார்கெட் செய்து நெருக்கடி கொடுக்கின்றனர் என நயினார் நாகேந்திரன் பகிரங்கமாக மறுப்பும் தெரிவித்திருந்தார். தற்போது ரூ4 கோடி சிக்கிய விவகாரத்தை வருமான வரித்துறை விசாரிக்க தேர்தல் ஆணைய அதிகாரிகள் பரிந்துரைத்தனர். அதே நேரத்தில் ரூ4 கோடி விவகாரத்தில் அமலாக்கத்துறையும் களமிறங்கப் போகிறதாம்.
இந்த நிலையில் நயினார் நாகேந்திரனுக்காக கொண்டு செல்லப்பட்டதாகக் கூறப்படும் ரூ4 கோடி ரொக்கம் குறித்து போலீசாருக்கு யார் துல்லியமான தகவல் தந்தது? அந்த கறுப்பு ஆடு யார்? என்பதும் ஒரு பக்கம் விவாதமாக நடந்து கொண்டிருக்கிறது.
இன்னொரு பக்கம் ரூ4 கோடி ரொக்கம் கையும் களவுமாக சிக்கிவிட்ட நிலையில் இனி நெல்லை தொகுதி தேர்தல் நடைபெறுமா? என்கிற சந்தேகமும் கிளம்புகிறது. தமிழ்நாட்டில் பணம் சிக்கிய காரணத்தாலேய 2016-ல் தஞ்சாவூர், அரவக்குறிச்சி சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல்கள் ரத்து செய்யப்பட்டன. 2017-ல் ஆர்கே நகர் தொகுதி இடைத்தேர்தலும் இதே காரணத்துக்காக ரத்தாகி பின்னர் நடந்தது. 2019-ல் வேலூர் லோக்சபா தொகுதியில் அதிகமான பணப் பட்டுவாடா நடந்த காரணத்தை முன்வைத்து அத்தொகுதி தேர்தலும் ரத்தானது. பின்னர் வேலூர் தொகுதி தேர்தல் நடத்தப்பட்டது. தற்போது அதே பாணியில் நெல்லை தொகுதி தேர்தல் ரத்தாகும் சாத்தியங்கள் இருக்கின்றன என்கின்றன தேர்தல் ஆணைய வட்டாரங்கள்.
-
ரஜினிகாந்த் மருமகன் விசாகன்.. அண்ணாமலையின் ‘வி தி லீடர்ஸ்’ இயக்கத்தில் இணையப் போகிறார்? ட்விஸ்ட் -
தமிழ் பிழைகள் தமிழ்நாட்டையே வெட்கப்பட வைத்துள்ளது.. விஜய்யை விளாசிய வானதி சீனிவாசன்! -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
மார்ட்டின் சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு -
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது?












Click it and Unblock the Notifications