திடீர் உடல்நலக்குறைவு.. சிறையில் அடைக்கப்பட்ட பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா.. மருத்துவமனையில் அனுமதி
நெல்லை : இந்து மதக் கடவுள்களை விமர்சித்ததாக கைது செய்யப்பட்ட பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
முன்னதாக ஜார்ஜ் பொன்னையாவை நீதிமன்றம் 14 நாட்கள் கவாலில் வைக்க உத்தரவிட்டிருந்தது. இதன்படியே இன்று அவர் பாளையம் கோட்டை சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
இந்து மதத்தையும், பாரத மாதாவையும், பிரதமர் நரேந்திர மோடியையும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவையும் அவதூறாக பேசியதாக கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த கிறிஸ்தவ மதபோதகர் ஜார்ஜ் பொன்னையா மீது புகார் எழுந்தது.

பாஜக போராட்டம்
இதற்கு பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்து மத ஆர்வலர்களும் பொன்னையாவின் பேச்சுக்க கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன் அவரை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர். பாஜக சார்பில் தமிழகம் முழுவதும் சனிக்கிழமை ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது .

7 பிரிவுகளின் கீழ் வழக்கு
இதனிடையே இந்துக் கடவுள்களையும், பிரதமர் உள்ளிட்ட தலைவர்களையும் இழிவாக பேசிய விவகாரம் தொடர்பாக கிறிஸ்தவ மதபோதகர் ஜார்ஜ் பொன்னையா மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு அவர் தேடப்பட்டு வந்தார்.

பொன்னையா கைது
சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக எழுந்த புகாரில் தேடப்பட்டு வந்த கிறிஸ்துவ மத போதகர் ஜார்ஜ் பொன்னையாவை மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டியில் வைத்து போலீசார் கைது செய்தார்கள் . அவரை கன்னியாகுமரிக்கு அழைந்து வந்த போலீசார் விசாரணைக்கு பின்னர் குழித்துறை குற்றவியல் நீதிமன்ற;த்தில் ஆஜர்படுத்தினர். இதையடுத்து பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவை 15 நாள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. நீதிமன்ற உத்தரவுப்படி பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்

மருத்துவமனையில் அனுமதி
இந்நிலையில் இந்து மதக் கடவுள்களை விமர்சித்த குற்றச்சாட்டில் கைதான பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று தகவல் வெளியாகி உள்ளது. அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications