நெல்லை அருகே துணிகரம்.. பெட்ரோல் பங்க்கில் "அசால்ட் கொள்ளை.." எந்த பயமும் இல்லாமல் சுற்றிய ரவுடிகள்
: அம்பாசமுத்திரம் அருகே பயங்கர ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த மர்ம நபர்களால் பதற்றம் ஏற்பட்டது. பெட்ரோல் பங்க், உணவக ஊழியர்களை தாக்கிய அந்த கும்பலைப் பிடித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
திருநெல்வேலி: கையில் அரிவாளுடன் சுற்றித்திரிந்த ஆறுபேர் கொண்ட கும்பல், நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி, வீரவநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் வசித்த மக்களை அச்சுறுத்தினர். இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் அரிவாளைக் காட்டி பெட்ரோல் பங்க், உணவகம் டாஸ்மாக் ஊழியர்களை தாக்கி பொருட்களை பறித்து சென்ற சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video
தமிழகத்தில் ரவுடிகள் கொட்டத்தை அடக்க பல்வேறு நடவடிக்கைகளை காவல்துறையினர் எடுத்து வந்தாலும் தென் மாவட்டங்களில் ரவுடிகளின் அட்டகாசம் அதிகரித்து வருகிறது.
வெள்ளிக்கிழமை இரவு நெல்லை மாவட்டத்தில் உள்ள அம்பாசமுத்திரம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள மக்களை ஆறு பேர் கொண்ட கும்பல் கையில் அரிவாளுடன் அச்சுறுத்தி வந்தது.

பயங்கர ஆயுதங்கள்
சேரன்மகாதேவியில் உள்ள உணவகத்திற்கு சென்று அவர்கள் அங்குள்ள அரிவாளைக் காட்டி ஊழியர்களை மிரட்டி உணவு பொட்டலங்களை பறித்து சென்றனர். அதே வேகத்தோடு வீரவநல்லூரில் உள்ள பெட்ரோல் பங்கிற்கு சென்ற ஆறு பேர் கொண்ட அந்த கும்பல் தனது கை வரிசையை காட்டியது. ஆயுதங்களைக் காட்டி மிரட்டியது.

சிசிடிவி காட்சிகள்
தலையில் தொப்பி அணிந்த நபர் பெட்ரோல் பங்க் ஊழியரை எட்டி உதைக்கிறார். தலையில் அடிக்கிறார். பெட்ரோலை வண்டியில் நிரப்பச் சொல்லி மிரட்டுகிறார்.
ஊழியர்களை தாக்கி தங்களது இரு சக்கர வாகனங்களுக்கு பெட்ரோல் நிரப்பி விட்டு நிதானமாக அந்த கும்பல் தப்பிச்சென்றது. பதைபதைக்க வைக்கும் அந்த காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. அந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.

டாஸ்மாக் கடையில் கைவரிசை
புதுக்குடி சாலையில் உள்ள அரசு மதுபானக் கடையில் சென்று அவர்கள் ஆயுதங்களை காட்டி மிரட்டி மதுபானங்களை பறித்துச் சென்றனர். இந்தநிலையில் இவர்கள் குறித்து வீரவநல்லூர் காவல் துறைக்கு புகார் அளிக்கப்பட்டது. இதனையடுத்து விசாரணையில் இறங்கிய காவல்துறையினர் மர்மநபர்கள் வந்து சென்ற சிசிடிவி காட்சிகளை கைப்பற்றினர்.

சிக்கிய கும்பல்
அந்த காட்சிகளை வைத்து விசாரித்ததில் சேரன்மகாதேவியில் சேர்வேர் சரவணன் ஐயப்பன் மகாலிங்கம் மற்றும் உருளி பிச்சையா என்பது தெரியவந்தது. இதனையடுத்து 4 பேரை போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். பொதுமக்கள் அதிகமாக கூடும் பஜார் பகுதியில் அரிவாளுடன் ரவுடி கும்பல் பொதுமக்களை தாக்கிய நிகழ்வு பெரும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
-
4 கோடியை ஏப்பம் விட்ட ஆபீசர்ஸ்! தூத்துக்குடி துறைமுகத்தில் ஷாக்! இறந்த ஊழியர்களின் பென்சனில் மோசடி! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு












Click it and Unblock the Notifications