மறக்காதீர்கள்.. தூத்துக்குடியில் மக்கள் வாயில் சுட்டார்கள்.. கொந்தளித்த கமல்ஹாசன்!
தூத்துக்குடியில் கேள்வி கேட்டதற்காக அரசு மக்கள் வாயில் சுட்டது, யாரும் மறக்க வேண்டாம் என்று நெல்லை பொதுக்கூட்டத்தில் கமல்ஹாசன் கோபமாக பேசியுள்ளார்.
Recommended Video

திருநெல்வேலி: தூத்துக்குடியில் கேள்வி கேட்டதற்காக அரசு மக்கள் வாயில் சுட்டது, யாரும் மறக்க வேண்டாம் என்று நெல்லை பொதுக்கூட்டத்தில் கமல்ஹாசன் கோபமாக பேசியுள்ளார்.
நெல்லையில் நடந்த மக்கள் நீதியை மய்ய பொதுக்கூட்டத்தில் கமல்ஹாசன் சில சமயம் மிகவும் கோபமாக பேசினார். 55 நிமிடங்கள் பேசிய அவர், தமிழகத்தின் பல்வேறு பிரச்சனைகள் குறித்து பேசினார்.
அதேபோல் ஸ்டெர்லைட் ஆலை போராட்டம் குறித்தும், தூத்துக்குடி துப்பாக்கி சூடு குறித்தும் மிக மிக கோபமான கருத்துக்களை அவர் வைத்தார்.

கொள்ளை அடித்தார்கள்
கொள்ளை செய்யும் கூட்டமாக அரசியல்வாதிகள் மாறி இருக்கிறார்கள். மக்களை அரசியல்வாதிகள் கொள்ளையடிக்கிறார்கள். அதை கேள்வி கேட்டால் அதிகாரத்தை பயன்படயத்துகிறார்கள். கேள்வி கேட்டால் வாயில் சுடுகிறார்கள்.

பிள்ளையை சுட்டார்கள்
நம் பிள்ளையைதான் சுட்டார்கள்: நாம் மறக்க கூடாது. பக்கத்தில் தூத்துக்குடியில்தான் இந்த சம்பவம் நடந்தது. போலீஸ் அப்போது எதையும் செய்ய ஒரு விதிமுறை இருக்கிறது.வேன் மேல் ஏறி நம்மை சுட்டார்கள்: மறக்காதீர்கள்.

நெல்லை
என்னை கேள்வி கேட்கிறாயா, எதிர்கிறாயா என்று தாக்கினார்கள். கேள்வி கேட்டதற்காக மக்கள் வாயில் சுட்டார்கள். யாரும் கொஞ்சமும் மறந்துவிடாதீர்கள். நெல்லை கொல்லைப்புறம் கிடையாது: இதுதான் நுழைவாயில். மக்களை தாக்கிய அரசியல்வாதிகளுக்கு இது தெரியாமல் போய்விட்டது.

நாம் யார்
நாம் அதை அவர்களுக்கு தெரியப்படுத்துவோம்.தமிழகம் முழுக்க ஒரு காந்தி இருப்பார்: சுபாஷ் சந்திர போஸ் இருப்பார். தமிழகம் தேசியத்தோடு சேர்ந்தது: உங்களுக்கு ஓட்டு கிடைக்காது என்று மக்களை பிரிக்க வேண்டாம், என்று கமல்ஹாசன் குறிப்பிட்டார்.












Click it and Unblock the Notifications