தினமும் செல்போனில் அந்த மாதிரி பேசி டார்ச்சர்... தூக்கமாத்திரையை போட்ட பெண்.. வசமாக சிக்கிய பாதிரியார்
திருநெல்வேலி: பாதிரியார் ஒருவர் அடிக்கடி செல்போனில் பேசி தொந்தரவு செய்து வந்ததால் 40 வயது பெண், தூக்க மாத்திரையை சாப்பிட்டு சாக முயன்றார். இந்த விவகாரத்தில் ஜெகன் என்ற பாதிரியார் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை தீவிரமாக தேடி வருகிறார்கள்.
கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர் ஜெகன் (வயது 39). இவர் திருநெல்வேலி மாவட்டம், தச்சநல்லுார் மங்களா குடியிருப்பில் வசித்தபடி கிறிஸ்தவ சபை ஆரம்பித்து போதகராக உள்ளார். இவருடைய சபைக்கு வழிபாட்டிற்காக சில ஆண்டுகளாக வந்து சென்ற 40 வயது பெண்ணிடம் பாதிரியார் ஜெகன் செல்போன் எண்ணை வாங்கி உள்ளார்.

அந்த பெண்ணுக்கு அடிக்கடி செல்போனில் அழைத்து பேசி வந்துள்ளார். ஒரு கட்டத்தில் அந்த பெண்ணுக்கு கணவர் இல்லை. மகன் மட்டும் இருப்பதை பாதிரியார் அறிந்த கொண்டார். அதன்பின்னர் தினமும் செல்போனில் பேசி தொந்தரவு கொடுத்து வந்தாராம். மேலும் ஆபாசமாக பேசி பாலியல் தொந்தரவு கொடுத்து வந்தாராம்.
இதனால் மனமுடைந்த அந்தப் பெண் கடந்த சனிக்கிழமை அன்று வீட்டில் தனியாக இருந்த நிலையில், தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
இந்நிலையில் வீட்டில் மயங்கி கிடந்த அவரை பார்த்த உறவினர்கள்,உடனடியாக மீட்டு பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து தச்சநல்லூர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் பேரில் பாதிரியார் ஜெகன் மீது வழக்குப்பதிவு செய்து அவரை தீவிரமாக தேடி வந்தனர்.இந்லையில் தச்சநல்லூர் போலீசார் ஜெகனை கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.












Click it and Unblock the Notifications