ஒரேநாளில் 54 செமீ மழை பதிவு.. வெள்ளத்தில் மூழ்கிய திருநெல்வேலி.. உதவி எண்கள் அறிவிப்பு
திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டத்தில் நேற்று அதிகாலை முதல் தொடர்ந்து 2வது நாளாக கனமழை கொட்டி வருகிறது. அதிகபட்சமாக திருநெல்வேலி மாவட்டத்தில் நேற்று முதல் இன்று வரை 24 மணிநேரத்தில் 54 சென்டிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. மேலும் தொடர்ந்து பெய்யும் கனமழையால் திருநெல்வேலி ஜங்ஷன் மற்றும் மாநகராட்சி பகுதிகளை வெள்ளம் சூழ்ந்துள்ள நிலையில் தான் மழைக்கால அவசர உதவி எண்கள் வெளியிடப்பட்டுள்ளன.
மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களான திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் நேற்று அதிகாலை முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இடைவிடாது கொட்டி தீர்க்கும் கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் முடங்கி உள்ளனர். திருநெல்வேலியை எடுத்து கொண்டால் பல இடங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது. வீடுகளில் தண்ணீர் புகுந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
திருநெல்வேலி மாவட்ட தாமிரபரணி அணைகளில் இருந்து வினாடிக்கு 1500 கன அடி வீதம் மட்டுமே தண்ணீர் திறந்து விடப்பட்டு வந்தாலும் கூட பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் மழைநீர் காரணமாக தாமிரபரணி ஆற்றில் சுமார் 50,000 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் பொதுமக்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த 24 மணிநேரத்தில் ஊத்துவில் 540 மிமீ (54 சென்டிமீட்டர்), மாஞ்சோலையில் 320 மிமீ, காக்காச்சியில் 350 மிமீ, நாலுமுக்குவில் 310 மிமீ, அம்பையில் 366 மிமீ, சேரன்மகாதேவியில் 225.20 மிமீ, நாங்குநேரியில் 110 மி.மீ, பாளையம்கோட்டையில் 261.00 மிமீ, பாபநாசத்தில் 221 மிமீ, ராதாபுரத்தில் 33 மிமீ, திருநெல்வேலியில் 132 மிமீ, சேர்வலாறு அணையில் 237 மிமீ, கணடியன் அணைக்கட்டுவில் 351 .40 மிமீ, களக்காட்டில் 155.40 மிமீ மழை என்பது பதிவாகி உள்ளது.
இதற்கிடையே தான் திருநெல்வேலி மாவட்ட மக்களுக்கு மழைக்கால அவசர உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் இதனை அவசர காலங்களில் பயன்படுத்தி பயன்பெறலாம். அதன்படி மாவட்ட அவசரகால கட்டுப்பாட்டு மையம் - 1077, 0462 - 2501012
மாவட்ட காவல்துறை 0462 - 2562500, 99527 40740
மாநகர காவல்துறை 0462 - 2562651, 89399 48100
தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் - 0462 - 2572099, 73050 95952
மின்சாரம் தொடர்பான புகார்கள் - 94987 94987
மருத்துவ சந்தேகங்கள் - 104
அவசர மருத்துவ உதவி - 108
மாற்றுத்திறனாளிகளின் உதவி மையம் - 0462 - 2573267 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம் என்று திருநெல்வேலி கலெக்டர் கார்த்திகேயன் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
4 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு அலர்ட்.. விடாமல் வெளுக்க போகுது மழை.. வானிலை மையம் எச்சரிக்கை! -
இன்னைக்கும் மழை விடாது.. 14 மாவட்டங்களில் வெளுக்க போகுது! சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை மையம் -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்?












Click it and Unblock the Notifications