இப்படியே போனால் அரசுக்கு தடை ஏற்படும்! தேர்தலில் தோத்துடுவாங்க! சாபம் விடும் இந்து முன்னணி தலைவர்..!
திருநெல்வேலி : மக்களுக்கான திட்டங்களில் வேகம் காட்டுவதை விட இந்து கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் கொச்சைப்படுத்துவதிலையே தமிழக அரசு வேகம் காட்டி வருவதாக இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கூறியுள்ளார்.
Recommended Video
இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் இன்று நெல்லை மாவட்டம் தியாகராஜ நகரில் நிர்வாகி ஒருவரின் இல்ல திருமண விழாவில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய இந்த அரசாங்கம் நாத்திக அரசாங்கம் கடவுள் நம்பிக்கை இல்லாத அரசாங்கம் இந்த அரசுடன் கூட்டணியில் இருப்பவர்கள் தேசவிரோத கூட்டணிக் கட்சிகளாக உள்ளது என்றார்,

இந்து முன்னணி தலைவர்
மேலும், " மக்களுக்கான திட்டங்களை நிறைவேற்றுவதில் வேகம் காட்டுவது விட்டு இந்து கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் கொச்சைப்படுத்த வேண்டும் தடுக்க வேண்டும் என்பதில் இந்த அரசு வேகமாக செயல்படுகிறார்கள் தருமபுரம் ஆதீனத்தில் 500 ஆண்டுகளுக்கும் மேலாக கோயில் வளாகத்திலேயே பட்டினப்பிரவேசம் நடந்து கொண்டு இருக்கிறது, அதற்கு இவ்வளவு வேகமாக தடை செய்து இந்த அரசு அறிக்கை விடுத்துள்ளது.

அரசுக்கு தடை
நாகூர் தர்காவில் தலைமை ஹாஜியை இஸ்லாமியர்கள் தூக்கிச் செல்கிறார்கள் அதை யாரும் கண்டுகொள்வதில்லை. கிறிஸ்தவ போப்பை தூக்கி செல்கிறார்கள் இதையும் யாரும் கண்டுகொள்ளவில்லை இதுபோன்று ஒவ்வொரு விஷயத்திற்கும் ஒரு மரபு இருக்கிறது. அந்த மரபு படியே அனைத்தும் நடைக்கிறது. எனவே இதற்கு தடை விதித்தால் இந்த அரசாங்கம் நடத்துவதற்கு தடை ஏற்படும்.

அமைச்சர் சேகர்பாபு
தமிழக அரசில் துறை அமைச்சர்களுக்கு அதிகாரிகளுக்கு என்ன லாபம் இருக்கிறது என்பதை பொறுத்தே திட்டங்களை நிறைவேற்றுகின்றனர் நாடு முழுவதும் இந்து கோவிலில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி தொடர்ந்து கூறி வருகிறோம் இதுவரை அமைச்சர் சேகர்பாபு பதிலளிக்கவில்லை பண்டிகைகளுக்கு என்னென்ன இடையூறு கொடுக்க வேண்டும் என்பதையே இந்த நாத்திக அரசாங்கம் நோக்கமாக வைத்துள்ளது

தேர்தலில் தோல்வி
அதிமுகவும் இந்த விஷயத்தில் ஒரே போல தான் செயல்படுகின்றனர் மக்கள் மத்தியில் ஒரு வேகம் ஏற்பட்டுள்ளது தெரியாமல் இவர்களுக்கு ஓட்டு போட்டு விட்டோம் என்று நினைக்கிறார்கள். தொடர்ந்து இந்த கெடுபிடிகள் நீடித்தால் இந்த அரசாங்கம் வரும் தேர்தலில் தோல்வியை சந்திக்கும் என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications